கோவிட் 19 தொற்று உலகம் பூராகவும் பரவ தொடங்கியது முதல் வெவ்வேறு விதமான மருந்து வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு மொழிகளில் பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின.
அவ்வாறான ஒரு செய்தி கடந்த ஒரு சில வாரங்களாக இலங்கையின் சமூக ஊடகங்களிலே பேசப்பட்டது.
“அய்வர்மெக்டின்” (ivermectin) எனப்படுகின்ற மருந்து கொரோனாவை எதிர்த்துப் போராடக் கூடியது, என்றே அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி முதலிலே நாம் ஒரு வீடியோவினையே கண்டுபிடிக்க முடிந்தது.
“சிரீ புவத்” என்ற சிங்கள மொழி யூடியூப் சமூக வலைத்தள, அலைவரிசையிலே இந்த வீடியோ ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி பதிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த வீடியோவிற்கான இணைப்பு:
Invid மூலமாக பெற்றுக்கொண்ட Thumbnail புகைப்படம்.
இவ்வாறான செய்திகள் YouTube தளத்திலே வெளியானதுடன் நாங்கள் Google மற்றும் Facebook ஊடகங்களில் இவை பற்றிய ஒரு தேடலை மேற்கொண்டோம். குறிப்பாக “பணு பெஹெத், மஹாசார்ய அசோக தங்கொல்ல” போன்ற சிங்கள சொற்களையே தேடலுக்காக பயன்படுத்தினோம்.
பேராசிரியர் அசோக தங்கொல்ல அவர்கள் பற்றிய தேடலின் போது, அவர் “Ivermectin” மருந்து பற்றி கருத்து தெரிவிக்கின்ற ஒரு காணொளி காணப்பட்டது. அசோக தங்கொல்ல பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பேராசிரியர் ஆவார்:
https://vet.pdn.ac.lk/vcs/DrAshokaDangolla.php
மேலும் பேராசிரியருடைய அந்த கருத்தினை தெரன தனியார் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் “சதுர அல்விஸ்” தனது “travel with chatura” Facebook தளத்திலே பகிர்ந்திருந்தார். மேலும் தெரன தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ facebook பகுதியிலும் இந்த காணொளி பகிரப்பட்டு இருந்ததுடன் அதிலே தெரன 24 அலைவரிசையின் அதிகாரப்பூர்வ இலட்சனையும் காணப்பட்டது.
அந்த வீடியோக்களின் Link:
இங்கே, https://www.facebook.com/chaturaAalwis/posts/364817748533312
இங்கே, https://www.facebook.com/travelwithchaturaofficial/videos/318489796729370
ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதி ஊடகவியலாளர் சதுர அல்விஸ் இந்த வீடியோவைவின் ஒரு சில காட்சிகளை பகிர்ந்திருந்தார் (Share). எனவே குறித்த உரையாடல் தெரன 24 அலைவரிசையிலே அதற்கு முன்னரே ஒளிபரப்பப்பட்டு இருக்கலாம்.
மேலும் பேராசிரியர் அசோக தங்கொல்லவை E-mail மூலமாக தொடர்பு கொண்டு மருந்து பற்றி வினவியபோது, தாம் “Ivermectin” மருந்து பற்றி கருத்து தெரிவித்ததை உறுதிப்படுத்தினார்.
மேலும் தான் ஒரு கால்நடை வைத்தியர் எனவும் இத்துறையில் தான் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால் மக்களுக்கு பரிந்துரை செய்ததாக கூறினார். எனினும் மக்களுக்கு பரிந்துரை செய்திருக்க கூடாது என தனது வருத்தத்தையும் தெரிவித்தார். எவ்வாறாயினும் நன்மை தரக்கூடிய ஏதேனும் மருந்துகள் இருந்தால் உரிய தரப்பு அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரியப்படுத்தி அவர்களின் கவனத்தை அதன்பால் செலுத்த வேண்டும், என மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ” இந்த மருந்தினை விலங்குகளுக்கு மட்டுமன்றி கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக மனிதர்களுக்கும் வெவ்வேறு நிலைமைகளின் போதும் வழங்கப்படுகின்றது. அவ்வாறு வழங்குவது கூட உரிய வைத்திய ஆலோசனைகளின் பின்னர் ஆகும். மேலும் கடந்த பல தசாப்தங்களாக இந்த மருந்து பற்றிய ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் மட்டுமன்றி பல நாடுகளிலும் இந்த வகை மருந்துகள் பயன்படுத்தப்படுவதுடன் அண்மைய நாட்களாக இதன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்துள்ளது. இதனை கூகுள் செய்வதன் மூலம் உங்களாலே காண முடியும். அத்துடன் இந்த மருந்திற்கு வைரஸ்கள் உடலினுள் நுழையாமல் தடுக்கும் திறன் காணப்படுகின்றது. அப்போது வைரஸ் எவருக்கும் பரவாது, என பேராசிரியர் தெளிவுபடுத்தினார்.
பேராசிரியர் இது பற்றி கருத்து தெரிவிக்கின்ற உரையாடல் காணொளி:
தடுப்பூசி வழங்குதல் தவிர வேறு எந்த வகையான மருந்து வகைகளும் கொவிட்-19 ற்காக பரிந்துரை செய்யப்படவில்லை. எவ்வாறாயினும் “Ivermectin”
என்பது இலங்கையிலே பதிவு செய்யப்பட்ட ஒரு மருந்து வகையாகும். எனவே இலங்கை மருத்துவ அதிகார சபையில் பதிவு செய்து அங்கத்தவராக இருக்கின்ற எந்த ஒரு வைத்தியரும் தனது நோயாளிகளுக்கு பொருத்தமான மருந்துகளை பரிந்துரை செய்யக் கூடிய அதிகாரம் உள்ளது, என சுகாதார சேவைகள் திணைக்களத்தின் துணை செயலாளர் வைத்தியர் ஹேமந்த் ஹேரத் தெரிவித்தார்.
மேலும் இதுபற்றி நாம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மருந்தியல் துறை பேராசிரியர் வைத்தியர் பிரியதர்சினி கலப்பத்தியிடம் வினவினோம்.
சமீப நாட்களாக “அய்வர்மெக்டின்” Ivermectin என்பது நாய்களுக்கு வழங்குகின்ற ஒரு மருந்து என பரவலாக பேசப்பட்டது. எனினும் அது நாய்களுக்கு மாத்திரமன்றி பல்வேறுபட்ட வேறு வகை விலங்குகளுக்கும் வழங்கப்படுகின்றது. பல தசாப்தங்களுக்கு முன்னிருந்தே மனிதர்களுக்கும் வழங்கப்படுகின்றது. எனினும் இந்த மருந்து கோவிட்டினை குணமடையச் செய்கின்றது, என்பது அறிவியல் ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
எனினும் எமது நாடு மட்டுமன்றி இன்னும் பல நாடுகள் இந்த மருந்தை பயன்படுத்தி உள்ளார்கள். இலங்கையிலே பதிவுசெய்த ஒரு மருந்தாக இது காணப்பட்டாலும் இது கொவிட்டினை குணப்படுத்துமா? என்ற கேள்விக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்ற வண்ணமே உள்ளன. உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட உலகில் எந்த நாடும் இந்த மருந்தினை உத்தியோகபூர்வமாக கொவிட் தொற்றாளர்களுக்கு பரிந்துரை செய்யவில்லை. அதிகமான நாடுகள் இன்னும் ஆராய்ச்சிகளிலே உள்ளன. மேலும் இந்த மருந்தானது சில காலமாக விலங்குகளுக்கு வழங்கி வந்தமையினால் இவற்றினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றி ஒரு சில வைத்தியர்களின் கருத்துக்கள் உள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட ஒரு வைத்தியர் தனது நோயாளிக்கு இந்த மருந்தினை பரிந்துரை செய்யலாம். எனினும் இந்த மருந்து குறித்து போதிய அளவு அறிவியல்பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை. எனவே கொரோனா வைரஸுக்கான ஒரே மாற்றீடு தடுப்பூசி மட்டுமே ஆகும். மேலும் காய்ச்சல் தடுமல் போன்றவற்றிற்கு “பரசிடமோல்” வழங்கப்படுகின்றது. அத்தோடு நோயெதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்க விட்டமின் C, D மற்றும் (Zinc) என்பன கொடுக்கப்படுகின்றது, என பேராசிரியர் தெரிவித்தார்.
பேராசிரியர் பிரியதர்சனீ கலப்பத்தி சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற இரண்டு ஊடாக சந்திப்புகளின் போது மருந்துகளின் பயன்பாடு குறித்து கருத்து தெரிவித்தார்கள். கீழே உள்ள வீடியோ இணைப்பில் 13வது நிமிடம் முதல்: https://www.youtube.com/watch?v=9vhZ1NFbQ9I&t=2760s
மேலும்: https://www.youtube.com/watch?v=ezzy3rCKXso&t=2490s
இது பற்றி மேலும் ஆராய்ந்து பார்த்தபோது சர்வதேச ரீதியில் பல நாடுகளும் கடந்த காலங்களில் (Ivermectin) மருந்தினை அதிகமாக கொள்வனவு செய்துள்ளமை பற்றி சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதற்கிடையில் இன்னும் சில வைத்தியர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை செய்தும் இருந்தனர்.
Ivermectin மருந்தினை ஏன் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்த காணொளி, இங்கே:
Ivermectin மருந்தினை கோவிட் சிகிச்சைக்காக பயன்படுத்துவது ஆபத்தானது என்பதை தெளிவு படுத்தும் விதமாக ஒக்லஹோமாவில் உள்ள ஒரு வைத்தியர் பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணல் :
https://www.bbc.com/news/world-us-canada-58449876
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி உலக சுகாதார ஸ்தாபனம் (WHO), இந்த மருந்து கொவிட் தோற்றினை குணமடையச் செய்கின்றது என்பது இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, என்பது பற்றி வெளியிட்ட அறிக்கை :
மேலும் கடந்த நாட்களில் அமெரிக்காவிலே Ivermectin மருந்தின் பயன்பாடு மிக அதிகமாக காணப்பட்டது. இதனால் அமெரிக்க சுகாதார அதிகாரிகள் குறிப்பாக நோய் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் தடுப்பு மத்திய நிலையம் ஆகியன (CDC) இந்த மருந்தானது கோவிட் நோய்க்காக இன்னும் பரிந்துரைக்கப்படவில்லை, என கடந்த ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி சுகாதார அறிவித்தலாகவும், எச்சரிக்கையாகவும் மக்களுக்கு விடுத்திருந்தனர்.
அந்த அறிக்கை:
https://emergency.cdc.gov/han/2021/han00449.asp
National Geography இணையத்தளத்திலே ivermectin பற்றி வெளியிடப்பட்ட அறிக்கை :https://www.nationalgeographic.com/science/article/the-shaky-science-behind-ivermectin-as-a-covid-19-cure
பொது சுகாதார நிபுணர்கள் எச்சரித்த போதிலும் அமெரிக்காவிலே சிலர் இந்த மருந்தை பயன்படுத்த தூண்டப்படுகிறார்கள் என The New York Times தெரிவிக்கின்றது:
மேலே குறிப்பிட்டது போல் பல நாடுகளிலும் இந்த மருந்தின் இறக்குமதிஅண்மைய காலங்களாக அதிகரித்துள்ளது. அதன் பிரதிபலனாக அவுஸ்திரேலியாவில் (ivermectin) மருந்தின் இறக்குமதி 10 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் கோவிட் சிகிச்சைகளுக்காக அதன் பயன்பாடு குறித்தும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை:
கடந்த நாட்களாக இலங்கையிலும் இந்த மருந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதால் உள்நாட்டு மருந்தக நிலையங்களில் இந்த மருந்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் “சண்டே டைம்ஸ்” பத்திரிகை கடந்த செப்டம்பர் 5ஆம் திகதி தெரிவித்திருந்தது. அத்துடன் தேசிய மருந்தகக் கூட்டுத்தாபனம் இதனை இறக்குமதி செய்வதற்காக அனுமதி அளித்துள்ளதாகவும் வைத்தியர்களிடையே இதுபற்றி ஒரு பிரிவினை காணப்படுவதாகவும் “சண்டே டைம்ஸ்” குறிப்பிட்டிருந்தது:
Ivermectin மருந்து குறித்து கடந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக Facebook வலைத்தளத்தில் பகிரப்பட்ட பதிவுகளில் “ஸ்கிரீன்ஷோட்” கீழே உள்ளது.
சமூக வலைத்தளம் மாத்திரமன்றி பிரதான ஊடகங்கள் கூட இது பற்றிய செய்திகளை வெளியிட்டு இருந்தனர்.
சமூக ஊடக செயற்பாட்டாளரான சஞ்சன ஹத்தொடுவ இது பற்றி தெரிவித்த Twitter பதிவு: https://twitter.com/sanjanah/status/1432898514158120966
எனவே “Ivermectin” மருந்து கொவிட்-19 வைரஸினை அழிக்கின்றது, என்பதால் மக்களை தவறாக வழிநடத்தப்படலாம். இந்த மருந்து மூலம் covid-19 வைரஸ் நோய் குணப்படுத்தலாம் என்பது எவ்வித ஆய்வுகளில் மூலமும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) உட்பட இலங்கையில் உள்ள தேசிய சுகாதார நிறுவனங்கள் அல்லது மருத்துவ அதிகாரிகள் எவரும் இந்த மருந்தை கொவிட்-19 ற்கான சிகிச்சையாக பரிந்துரை செய்யவும் இல்லை.