கொரோனா வைரஸை தடுக்கக்கூடிய ஆயுர்வேத மருந்துகள் என சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற மருந்து வகைகள் அனுமதிக்கப்பட்டவை அல்ல

இலங்கையிலே நாளுக்கு நாள் புதிதாக இணைக்கப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதேபோல் மரணங்களின் எண்ணிக்கையும் 8,500 தாண்டியுள்ளது. அதனோடு இணைந்ததாக கோவிட்-19 பற்றிய வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றன. 

இதற்கிடையில், கோவிட்-19 இற்கான ஆயுர்வேத மருந்துகள் எனக்கூறி பல்வேறுபட்ட பதிவுகள் மற்றும் மருந்து வகைகள் பற்றிய செய்திகள் Facebook மற்றும் WhatsApp ஆகிய சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

அவ்வாறு பகிரப்பட்ட பதிவுகளின் Screenshots :

‘கோவிட்-19’ நோயினை குணப்படுத்த முடியும் எனக்கூறி அடையாளம் தெரியாத பல ஆயுர்வேத குறிப்புகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதாகவும் அவற்றின் மூலம் பொதுமக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள், எனவும் கூறி ஆயுர்வேத வைத்திய சபை ஒரு அறிக்கையினை கடந்த மே மாதம் 6ஆம் திகதி வெளியிட்டிருந்தனர்.

அந்த அறிக்கை :

இலங்கை ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர், வைத்தியர் எம்.டீ.ஜே. அபேகுணவர்தன மற்றும் நாவின்ன ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி, வைத்தியர் ஜகத் ருஹுனகே ஆகியோரிடம் நாம் இதுபற்றி வினவினோம். 

குறிப்பாக ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் எம்.டீ.ஜே. அபேகுணவர்தன பின்வருமாறு கூறினார். 

” கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட ஏதேனும் சிகிச்சை முறைகளோ, மருந்துகளோ அல்லது துணை மருந்து வகைகளோ இருப்பின் அவை  கட்டாயமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்காக நாங்கள் “சூத்திர முழு” ஒன்றினையும் நியமித்துள்ளோம். அதிலே பதிவு செய்யப்படாத எந்தவொரு மேலதிக உணவு, பானம் அல்லது மருந்து வகைகளுக்கோ நாங்கள் அங்கீகாரம் வழங்குவதில்லை. 

தற்போதுள்ள கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தப்பட்ட 16 வகையான மருந்துகளை தயாரிப்பதற்கான ஒப்புதலை நாம் வழங்கியுள்ளோம். அவற்றில் இரண்டு வகையான மருந்துகள் ஆயுர்வேத திணைக்களத்தினாலும் ஒன்று ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தினாலும் மீதமுள்ள 14 மருந்துகளும் தனியார் நிறுவனங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

அத்துடன் இது தொடர்பான தகவல்களை எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் இதற்கான முக்கிய பிரிவு ஒன்றினை அமைத்து 25 தொலைபேசி எண்களையும் ஒதுக்கியுள்ளோம். மேலும் 1919 அரசு தகவல் மையத்தின் ஊடாகவும் உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். 

அத்துடன் நாடலாவிய ரீதியில் கிட்டத்தட்ட 1500 ஆயுர்வேத சமூக சுகாதார அதிகாரிகள் கொரோனா தடுப்பு மற்றும் கொரோனா பற்றிய ஆலோசனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் தமது பிரிவுக்கு உட்பட்ட ஆயுர்வேத சமூக சுகாதார அதிகாரியிடம் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். ஆயுர்வேதம் என்ற போர்வையில் வருகின்ற எந்தவொரு போலி மருந்துகளையும் கண்டு ஏமாறாதீர்கள். இயலுமானவரை அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களை மட்டும் நாடுங்கள் ” 

நாவின்ன ஆயுர்வேத வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி ஜகத் ருஹுனுகே எமது கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்தார். 

” கொரோனா வைரஸுக்கு எதிராக ஆயுர்வேத திணைக்களத்தினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள மருந்து வகைகள் பற்றி குறிப்பிடுவதாயின் ‘அவை மூலம் இந்த நோயினை முற்றுமுழுதாக குணப்படுத்தலாம்’ என உறுதியாக கூற முடியாது. எனினும் எமது பழங்கால ஆயுர்வேத ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளில் உள்ள மருந்துகள் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டவை. எனவே எமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் போது கொரோனா போன்ற வைரஸ்களில் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். அதேபோல் தற்போதுள்ள கொரொனா நோய் அறிகுறிகளுடன் பழங்கால ஏடுகளில் குறிப்பிட்டுள்ள “ஜொரம்” அதாவது காய்ச்சல் என்ற நோய் அறிகுறிகளை ஒப்பிடலாம். எனவே அது போன்று தான் பழங்கால ஏடுகளில் குறிப்பிட்டுள்ள ஆயுர்வேத சிகிச்சை முறைகளை நாங்கள் நாவின்ன ஆயுர்வேத பரிசோதனை நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்குகின்றோம். 

எனினும் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற ஆயுர்வேத மருந்துகள் மிகவும் ஆபத்தானவை. குறிப்பாக ஒரு சில மருந்து வகைகளை நல்லது தானே, என நினைத்து அளவுக்கதிகமாக சேர்க்கின்றார்கள். அவ்வாறு தேவையற்ற அளவு அவை சேர்க்கப்பட்டால் அவற்றின் தரம் குறைவடையும். இன்னும் சிலர் வெவ்வேறு இடங்களில் இருந்து பெற்றுக்கொண்ட ஆயுர்வேதக் குறிப்புகளை ஒன்றாக சேர்த்து ‘ ஆயுர்வேத மருந்து’ எனக் கூறி அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்கின்றார்கள். ஒரு சில மருந்து வகைகளை கலவை செய்யும் போது அதன் அளவுகள் குறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை பற்றிய சரியான தெளிவு காணப்படுவது ஒரு தேர்ச்சி பெற்ற ஆயுர்வேத வைத்தியருக்கு மாத்திரமே ஆகும். 

இறுதியாக நான் கூற விரும்புவது என்னவென்றால் சமூக ஊடகங்களில் ஆயுர்வேதம் என உள்ள வெவ்வேறு மருந்து வகைகளை பயன்படுத்துவது மற்றும் அவற்றினால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கான பொறுப்பை எம்மால் ஏற்க முடியாது. அவற்றை பயன்படுத்தும் போது நீங்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்துவதாயின் தேர்ச்சிபெற்ற ஒரு வைத்தியரின் ஆலோசனையை கட்டாயம் அணுகுங்கள். 

ஆயுர்வேத திணைக்களத்திடம் நாம் இதுபற்றி வினவியபோது அங்குள்ள ஒரு மருத்துவர் இவ்வாறு கூறினார். 

” கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் பலர் ராஜகிரிய ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் நாவின்ன ஆயுர்வேத மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அவர்களுக்கு முழுமையான ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தேவைப்பட்டால் மேற்கத்தேய சிகிச்சை வழங்குவதற்காக ஒரு வைத்தியரும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை சுமார் ஐம்பது நோயாளிகள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். மேலும் ஆயுர்வேத திணைக்களம் கொரோனா வைரஸ் குறித்து இரண்டு ஆயுர்வேத வழிகாட்டல் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். அவற்றைப் பின்வரும் இணைப்புகளின் ஊடாக அணுகலாம். 

இணைப்பு 01 : https://tinyurl.com/57ft5k24

இணைப்பு 02 : https://tinyurl.com/57ft5k24

ஆயுர்வேத திணைக்களத்தின் இணையதளத்தின் வாயிலாகவும் திணைக்களத்தின் பேஸ்புக் பகுதியின் ஊடாகவும்  இதற்கான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். 

இணையத்தளம் : http://www.ayurveda.gov.lk/home

முகநூல் பகுதி : https://tinyurl.com/5ue7say9

மேலும் ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் தயாரிக்கப்படுகின்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மருந்து வகைகள் உள்ளன. அவற்றைப்பற்றிய தகவல்களை ஆயுர்வேத திணைக்களத்தின் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான இணைப்பு மற்றும் அந்த அறிவித்தல் :

http://www.ayurveda.gov.lk/home

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்துப்படி கொரோனா வைரஸிற்கான எந்தவொரு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபற்றி நாங்கள் இதற்கு முன்னரும் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் வினவியிருந்தோம். 

” இதுவரை இன்னும் இந்த நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. உங்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள சுகாதார நிலையங்களையோ அல்லது கொவிட்-19 அவசர அழைப்பினையோ நாடுங்கள். இந்த நோயில் இருந்து தப்புவதற்கு நீங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள். பொது இடங்களில் எப்போதும் முகக்கவசம் அணிந்து கைகளை நன்றாக சுத்தமாக வைத்துக்கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்.  இயலுமான வரை விரைவில் covid-19 கான தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்வதை குறைத்துக் கொண்டு சீரான உணவு பழக்கங்களை கடைபிடிப்பதுடன் நன்றாக நீர் அருந்துதல் வேண்டும். அத்துடன் தவறாமல் உடற்பயிற்சியும் போதுமான அளவு தூக்கமும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. 

உலக சுகாதார நிறுவனம் உட்பட உலகளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களின் இந்த நோய்க்கான ஒரே தீர்வு தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதாகும். 

தடுப்பூசி பற்றி மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள கீழே உள்ள இணையதளத்தை நாடுங்கள். தடுப்பூசியினை பெற்ற பின்னரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது மிகவும் கட்டாயமானதாகும்.

https://drive.google.com/file/d/13hgrgAUlO8ClVPWyfaK2pdq2-SHn-hgq/view

https://drive.google.com/file/d/1mgkV981MAzpMi0-ZAu_G-OpmioHBzCEm/view

https://sites.google.com/view/hpb-vaccination/covid-19-%E0%B6%91%E0%B6%B1%E0%B6%B1%E0%B6%AD%E0%B6%9A%E0%B6%BB%E0%B6%AB%E0%B6%BA

Share this post

Related Projects

Fact Check

ආදායම් බදු ගෙවිය යුත්තේ කොහොම ද?

ආදායම් බදු අය කිරීම් සම්බන්ධයෙන් තවමත් රට තුළ විශාල කතාබහක් ඇති වී තිබෙන අතර රට පුරා විවිධ පාර්ශව විරෝධතා ද පවත්වමින් …

Fact Check

අදින් පසුව රටේ උද්‌ඝෝෂණ පැවැත්වීම තහනම් ද ?

‘අදින් පසු උද්ඝෝෂණ රටේ තහනම්, ජනපති පාර්ලිමේන්තුවේ දී කියයි’ යන සිරස්තලය සමාජ මාධ්‍ය ඔස්සේ ප්‍රවෘත්ති සංසරණය වන අයුරු ඉකුත් දින …

Fact Check

A tsunami threat to Sri Lanka?

A message issued under the heading “Be aware of tsunami threat” was observed circulating on WhatsApp during the past couple …

Fact Check

இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா ?

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் சுனாமி அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்ற தலைப்பில் ஒரு கடிதம் வலம் வருவதைக் காண முடிந்தது. 2023 …

Fact Check

ශ්‍රී ලංකාවට සුනාමි අවදානමක් ද ?

“සුනාම් අවදානම පිළිබඳව විමසිලිමත් වීම” යන ශීර්ෂය යටතේ නිකුත් කළ පණිවුඩයක් වට්ස්ඇප් (WhatsApp) ඔස්සේ සංසරණය වෙමින් තිබෙන අයුරු ඉකුත් පැය …

Fact Check

රට යද්දිත් බදු ගෙවන්න ඕනේ ද ?

“කටුනායකින් රට ගියොත් ඩොලර් 60ක බද්දක්” යනුවෙන් දැක්වෙන ප්‍රවෘත්තියක් සමාජ මාධ්‍ය තුළ සංසරණය වන ආකාරය ජනවාරි මස දෙවැනි හා තෙවැනි …