கொவிட் – 19 வைரஸின் லம்டா (Lambda) திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் செயற்படாது என எந்தவொரு அதிகாரபூர்வமான அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

கொவிட் – 19 வைரஸின் லம்டா (Lambda) திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் செயற்படாது என எந்தவொரு அதிகாரபூர்வமான அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

உலகம் முழுதும் பல விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் அதாவது “கொவிட்-19” பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளமை காரணமாக ஆயிரக்கணக்கான வைரஸ் பற்றிய புதுப்புது தகவல்கள் தினந்தோறும் வெளிவந்து கொண்டே உள்ளன.

புதிய கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 வைரஸின் பல புதிய வகைகளும் தற்போதைய சூழ்நிலையில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் இனங்காணப்பட்டுள்ளன. எனவே இவ்வாறு மாறுபட்ட விகாரமான புதிய வைரஸ்கள் பற்றிய தகவல்களும் நாளுக்கு நாள் வந்த வண்ணமே உள்ளன.

லம்டா (Lambda) மாறுபாடு என்பதும் அவ்வாறு இனங்காணப்பட்ட ஒரு புதிய ரக வைரஸ் ஆகும். இதுபற்றி அண்மைய நாட்களில் பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அதிகம் பேசப்பட்டது.

அது பற்றி சமூக வலைத்தளங்களில் வெளிவந்த செய்திகளின் Screenshots:

கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு அதாவது ‘ லம்டா’ மாறுபாடு குறித்து சுகாதார மேம்பாட்டு பணியகம் அன்மையில் அவர்களுடைய முகநூல் பகுதியில் ஒரு தெளிவுபடுத்தலை வழங்கியிருந்தனர்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் முகநூல் பகுதியில் இடப்பட்டிருந்த பதிவு,

இங்கே:

https://tinyurl.com/tyyyntud

இலங்கையில் இதுவரை லம்டா வைரஸ் மாறுபாடு இனம் காட்டப்படவில்லை(ஆகஸ்ட் – 3)

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கோவில் 19 நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி சுகாதார சேவை அத்தியட்சகர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பீடத்தின் இயக்குனர் பேராசிரியர். சன்திம ஜீவன்தர ஆகியோர் இதுபற்றி பின்வருமாறு தெரிவித்தனர்.

எமது ஆய்வகங்களில் இதுவரை லம்டா (Lambda) வைரஸ் இனம் காணப்படவில்லை என பேராசிரியர். சன்திம ஜீவன்தர குறிப்பிட்டார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான காரியாலயமும் இதனை உறுதிப்படுத்தியது.

மேலும் உலக சுகாதார ஸ்தாபனம் லம்டா (Lambda) மாறுபாட்டை “கடுமையாக கவனம் செலுத்தப்பட வேண்டிய (Variant of concern) தொற்று” என இதுவரை பெயரிடவில்லை. இதுவரை அவர்கள் கடுமையாக கவனம் செலுத்த வேண்டிய வைரஸின் மாறுபாடுகள் என ” டெல்டா(Delta), அல்பா(Alpha), பெடா(Beta) மற்றும் கமா( Gamma) ஆகியவற்றையே பெயர் குறிப்பிட்டு எச்சரித்துள்ளார்கள்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இணையத்தளத்தின் ஊடாக இது பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்:

https://www.who.int/en/activities/tracking-SARS-CoV-2-variants/

எனினும் சர்வதேச செய்தி அறிக்கைகள் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வாராந்த செய்தியாளர் சந்திப்புகளுக்கு அமைவாக தற்போது உலகளாவிய ரீதியில் பதிவு செய்யப்படுகின்ற புதிய கொரோனா தொற்றாலர்களில் அதிகமானோர் “டெல்டா” வகை மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களே ஆகும்.

புதிய கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 இன் மாறுபாடுகள் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளுக்கு அநீதியோ பாகுபாடுகளோ ஏற்படாதிருக்க உலக சுகாதார ஸ்தாபனம் குறித்த மாறுபாடுகளை கிரேக்க ரோம இலக்கங்களுக்கு அமைவாக பெயரிட்டுள்ளார்கள்.

அது பற்றிய மேலதிக தகவல்களை உலக சுகாதார ஸ்தாபனத்தின் கீழே உள்ள இணையதளஸ்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்:

https://www.who.int/en/activities/tracking-SARS-CoV-2-variants/

இங்கே: https://www.who.int/news/item/31-05-2021-who-announces-simple-easy-to-say-labels-for-sars-cov-2-variants-of-interest-and-concern

மேலே காணப்படுகின்ற தகவல்கள் மற்றும் தரவுகள் உலக சுகாதார ஸ்தாபனம் மூலம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதுடன் சமூக வலைத்தளங்கள் ஊடாக எளிதில் அவற்றை அணுகவும் முடியும்.

ஐக்கிய அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவையும் தொடர்ந்து புதிய வைரஸ் திரிபுகள் பற்றிய அவர்களுடைய தரவுகளையும் புதுப்பிக்கின்றார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகள்:

https://www.ecdc.europa.eu/en/covid-19/variants-concern

லம்டா (Lambda) மாறுபாடு முதன்முதலில் பேரு நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

அல் ஜஸீரா செய்திச் சேவையின் ஊடாக கடந்த ஜீலை மாதம் 27ஆம் திகதி லம்டா (Lambda) திரிபு குறித்த ஒரு விரிவான அறிக்கையிடல் இடம்பெற்றதுடன் இதுவரை 28 நாடுகளில் இது பரவி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அல் ஜஸீரா  செய்திச் சேவையின் விரிவான அறிக்கையிடல்:

https://tinyurl.com/3jjay6zw

எமது நாட்டின் ஒருசில செய்தி அறிக்கைகளிலே விஷேடமாக சமூக வலைத்தளங்களில், இந்த லம்டா (Lambda) திரிபானது எந்தவொரு கோவிட் -19 தடுப்பூசிக்கும் இணங்காது, என குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் அது மக்களை திசைதிருப்ப கூடிய ஒரு போலியான செய்தி என்பதை உறுதியாக கூற முடியும்.

மேலும், கொரோனா வைரஸின் புதிய திரிபுகளுக்கு தடுப்பூசிகளின் தாக்கம் மற்றும் அவற்றின் பாதிப்புக்கள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் தற்போது பாவனையிலுள்ள ஒவ்வொரு தடுப்பூசியும் புதிய கொரோனா வைரஸின் ஆபத்தான திரிபுகள் அத்தனைக்கும் எதிராக வெற்றிகரமான பெறுபேறுகளை காட்டியுள்ளதாகவும் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபன அலுவலகம் தெரிவித்தது.

அத்துடன் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது மிகவும் முக்கியம் என, பொது சுகாதார உத்தியோகஸ்தர்கள் உட்பட சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியும் உள்ளனர். அத்துடன் தடுப்பூசி பெற்ற பின்னரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன, என்ற விடயம் தற்போது உறுதியாகியுள்ளது. ஆனாலும் வைத்திய நிபுணர்களின் கருத்துப்படி, தடுப்பூசியை பெற்ற ஒருவருக்கு வைரஸ் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் பாரதூரமான விளைவுகள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை என்பன குறைவாகவே உள்ளது.

ரொய்டர் செய்திச் சேவையானது சிங்கப்பூர் சுகாதார அமைச்சு மற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகளை மேற்கொள் காட்டி “தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்ட போதிலும் தடுப்பூசி காரணமாக அவர்களுடைய நோய் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது” என்பதை தெளிவுபடுத்தும் விதமாக ஒரு கடிதத்தை அண்மையில் வெளியிட்டிருந்தனர்.

அதன் இணைப்பு: https://tinyurl.com/3nj65yvb

தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் பற்றி ஐக்கிய அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் நிவாரண அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கை: https://tinyurl.com/yrxhuaz5

தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பாவனையில் உள்ள அனுமதிக்கப்பட்ட தடுப்பூசி வகைகள் என்பன பற்றி உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கை: 

https://www.who.int/news-room/feature-stories/detail/getting-the-covid-19-vaccine

மேலும்: https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/covid-19-vaccines/advice

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி பற்றிய சகலவிதமான விபரங்களும் இலங்கைக்கான அவர்களின் காரியாலயத்தின் இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் அவை மும்மொழிகளிலும் காணப்படுகின்றது. அதற்கான இணைப்பு: https://www.who.int/srilanka

மேலும்: https://www.who.int/srilanka/covid-19

  •  கோவிட் 19 வைரஸின் முதல் திரிபுகளை விட லம்டா (Lambda) திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் அதிக எதிர்ப்பு தன்மையுடன் செயற்படுகின்றமை ஆய்வக சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அது பற்றிய மேலதிக தகவல்களை இங்கே காணலாம்:

https://www.biorxiv.org/content/10.1101/2021.07.28.454085v1

  • எனினும் இது பற்றிய கல்வி சார்ந்த ஆய்வுகள் இன்னும் நடைபெறவில்லை என்பதோடு இது பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இது தொடர்பான செய்தி இங்கே:

https://tinyurl.com/aakp4wup

மேலதிக கவனத்திற்கு;

கோவிட் – 19 வைரசுக்கு எதிராக முதல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்தாலும், முகக் கவசம் அணிதல் கைகளை நன்றாக கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற வைரஸ் தடுப்பு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களை பின்பற்றுவது மிகவும் கட்டாயமானதாகும்.

அன்மையில் புதுப்பிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் கோவிட் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மத்திய நிலையத்தில் ஆலோசனைகளுக்கு அமைய முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களும் பொதுஇடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கான இணைப்பு: 

https://www.cdc.gov/coronavirus/2019-ncov/vaccines/fully-vaccinated-guidance.html

Share this post

Related Projects

Fact Check

ආදායම් බදු ගෙවිය යුත්තේ කොහොම ද?

ආදායම් බදු අය කිරීම් සම්බන්ධයෙන් තවමත් රට තුළ විශාල කතාබහක් ඇති වී තිබෙන අතර රට පුරා විවිධ පාර්ශව විරෝධතා ද පවත්වමින් …

Fact Check

අදින් පසුව රටේ උද්‌ඝෝෂණ පැවැත්වීම තහනම් ද ?

‘අදින් පසු උද්ඝෝෂණ රටේ තහනම්, ජනපති පාර්ලිමේන්තුවේ දී කියයි’ යන සිරස්තලය සමාජ මාධ්‍ය ඔස්සේ ප්‍රවෘත්ති සංසරණය වන අයුරු ඉකුත් දින …

Fact Check

A tsunami threat to Sri Lanka?

A message issued under the heading “Be aware of tsunami threat” was observed circulating on WhatsApp during the past couple …

Fact Check

இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா ?

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் சுனாமி அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்ற தலைப்பில் ஒரு கடிதம் வலம் வருவதைக் காண முடிந்தது. 2023 …

Fact Check

ශ්‍රී ලංකාවට සුනාමි අවදානමක් ද ?

“සුනාම් අවදානම පිළිබඳව විමසිලිමත් වීම” යන ශීර්ෂය යටතේ නිකුත් කළ පණිවුඩයක් වට්ස්ඇප් (WhatsApp) ඔස්සේ සංසරණය වෙමින් තිබෙන අයුරු ඉකුත් පැය …

Fact Check

රට යද්දිත් බදු ගෙවන්න ඕනේ ද ?

“කටුනායකින් රට ගියොත් ඩොලර් 60ක බද්දක්” යනුවෙන් දැක්වෙන ප්‍රවෘත්තියක් සමාජ මාධ්‍ය තුළ සංසරණය වන ආකාරය ජනවාරි මස දෙවැනි හා තෙවැනි …