இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஜனவரி மாதத்திலும் அதற்கு முன்பும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சாதக பாதகங்கள் இரண்டையும் பற்றி பேசப்பட்டது.
இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றை தொடர்புபடுத்தி WhatsApp இல் செய்தியொன்று பரிமாறப்பட்டதை நாங்கள் அவதானித்தோம்.
அந்த WhatsApp செய்தியின் ஸ்கிரீன்ஷாட் கீழே வழங்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள WhatsApp செய்தியின் சுருக்கமான மொழிபெயர்ப்பு கீழே உள்ளது.
“சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்து, இந்த இக்கட்டான நிலைக்கு ஒரே தீர்வு, திருடப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களை திருப்பி அனுப்புவதே என்று நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். கொள்ளையடிக்கும் நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் உதவி செய்வதில்லை. ஒரே கொள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருக்கும் நாட்டிற்கு உதவ (IMF) தயார் இல்லை என்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவின்மைக்கு மேலுமொரு காரனம் சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலம் வழங்கப்படும் பணம் மீண்டும் கொள்ளையடிக்கப்படுவதே என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இச்செய்தியினை முதலில் அவதானிக்கும்போது அதில் ஆங்கில மொழிப் பாவனையில் பிழைகள் இருந்ததையும் அவதானிக்கலாம்.
மேலும் இதுகுறித்து நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் வினவினோம்.
சர்வதேச நாணய நிதியத்தை (IMF) மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டதுடன், அதன் போது அவர்கள் பின்வருமாறு பதில் வழங்கினார்கள்.
இலங்கைக்கு அன்மையில் விஜயம் செய்த தூதுக்குழுவின் தலைவர் மசாஹிரோ நோசாக்கியின் கருத்துக்கள்:
- சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப ஆதரவு பிரதிநிதிகள் குழு தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பெப்ரவரி 2ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களை நாம் அறிவோம். இலங்கையில் எமது திறன்/திறன் அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நிதி அமைச்சின் மேக்ரோ பிஸ்கல் பிரிவுக்கு உதவுவது மற்றும் அப்பிரிவின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதை பிரதிநிதிகள் குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பணி பிப்ரவரி 9 வரை வீடியோ தொழில்நுட்பம் (இன்டர்நெட்) மூலம் இயங்கும்.
- இலங்கை இதுவரை (IMF) இடம் எந்தவொரு நிதியுதவியையும் கோரவில்லை, அவ்வாறு கோரினால் உதவுவதற்கு எமது ஊழியர்கள் தயாராகவே உள்ளனர்.
- இலங்கையின் பொருளாதார மற்றும் கொள்கை வளர்ச்சியை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றோம். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர்கள் டிசம்பர் 7 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்து IV ஆவது பிரிவின் கீழ் இலங்கையுடன் ஆலோசனைகளை நடாத்தியுள்ளனர். சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களின் பிரிவு IV இன் கீழ், சர்வதேச நாணய நிதியம் அனைத்து உறுப்பு நாடுகளுடனும் பொருளாதார வளர்ச்சி மற்றும் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய முறையான இருதரப்பு விவாதங்களை நடத்துகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகத்தின் ஒப்புதலுடன், இந்த முடிவுகளின் அடிப்படையில் பணியாளர் அறிக்கையைப் பற்றி விவாதிக்கிறது. உங்களின் பொது அறிவு/புரிதலுக்கு உறுப்புரை IVக்கு இங்கே கிளிக் செய்யவும். பிரிவு IV இன் கீழ் உள்ள ஆலோசனையின் பேரில் செயற்குழு கூட்டம் பெப்ரவரி இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் திரு. ஆட்டிகலவிடம் இது தொடர்பில் நாம் வினவினோம்.
இந்த செய்தி தனக்கும் கிடைத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சகல விடயங்களும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை எனவும் நிதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
மேலும் இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ஷவிடம் வினவிய போது, மேற்படி வட்ஸ்அப் செய்தியில் உள்ள விடயங்களை முற்றாக நிராகரிக்கப்பதாக தெரிவித்தார்.
எமது ஊகம்: எனவே, மேலே உள்ள வாட்ஸ்அப் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்ற முடிவுக்கு வரலாம்.
எங்கள்(Hashtag Generation) உண்மைச் சரிபார்ப்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்