கோவிட் -19 பரவல் மிகவும் வேகமாக பரவி வருவதுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே அவ்வாறு புதிதாக இனம் காணப்படுகின்ற நோயாளிகள் பற்றிய பல தகவல்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக சமூகத்தில் மிகவும் பிரபல்யமான பலரும் இந்த வைரஸ் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கை பொலிஸ் காவல்துறையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
அதனிடையே அவருடைய நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது என குறிப்பிட்டு கடந்த 25ம் திகதி முகநூல் வாயிலாக ஒரு காணொளியும் வாட்ஸ்அப்பில் ஒரு சில புகைப்படங்களும் பகிரப்பட்டு வந்தன. குறித்த புகைப்படங்கள் முதலில் எங்கிருந்து வெளிவந்தன என்பது பற்றி சரியாக கண்டுபிடிக்க முடியாமல் போனாலும் அவை “லஸ்ஸம்ன கவும் கடே” என்ற முகநூல் குழுவில் (Public Facebook Group) முதன் முதலில் இடப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் “அடு மிலட அதும்” என்ற குழுவிலும் அந்த புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்தன .
அதன் screenshots :

எனவே இது பற்றி ஆய்வு செய்த போது இவை இலங்கையில் எடுக்கப்பட்ட புகைப்படமே அல்ல என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டது.
அது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் வைரஸ் காரணமாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது எடுக்கப்பட்ட ஒரு காணொளி என்ற விடயம் உறுதியானது. மேலும் அதனை அவர் “Tik Tok” சமூகவலைத்தளத்தின் ஊடாக பகிர்ந்திருந்தார்.
அத்த டிக் டொக் பதிவு : https://vm.tiktok.com/ZSJv98uAP/
மேலும் ஒருசில ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் தமது சமூகவலைத்தள பகுதிகளில் இந்த காணொளி போலியானது என்பதை உறுதி செய்திருந்தார்கள்: https://tinyurl.com/pnb5enk2
மேலும் அந்த “Tik Tok” காணொளியில் காணப்படுகின்ற பெயரினை
Tik Tok வலைத்தளத்தில் Type செய்வதன் மூலம் அந்த கணக்கின் உண்மையான நபரை இலகுவாக இனங்காணலாம். அவரின் பெயர் Tiago Arieiv என்பதுடன் அவர் கோவிட் நோயிலிருந்து தற்போது பூரணமாக குணம் அடைந்துள்ளார். அதனை அவரே அந்த காணொளிக்கு கீழே ” கொவிட் 19 வைரஸை தோற்கடித்தேன் ” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பலரும் உதவிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன விற்கு உடனடி நிவாரணம் வேண்டி பிரார்த்தனை செய்திருந்ததுடன் எவரும் வெறுக்கத்தக்க எந்தவொரு பதவினையும் இட்டிருக்கவில்லை.
மேலும் இந்த பதிவு முதலிலே இடப்பட்டிருந்த “அடு மில்ட அதும்” என்ற முக நூல் பகுதியும் இந்த பதிவு போலியானது என்பதை பின்னர் குறிப்பிட்டிருந்தார்.
அதன் Screenshots :


உதவி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்ற செய்தி பற்றிய விபரம் : https://tinyurl.com/hn2cnysz
உதவி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார் என்ற விடயம் வெளியானதை தொடர்ந்து குறுகிய 24 மணித்தியாலத்திற்குள் (2021 ஆகஸ்ட் 24 மாலை தொடக்கம் ஆகஸ்ட் 25 மாலை 3 மணி வரை) அதுபற்றி 4,500ற்கும் மேற்பட்ட பதிவுகள் (Posts)பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் (Create/Generate) இடப்பட்டிருந்தன.
அத்துடன் கடந்த 26ம் திகதி தனியார் தொலைக்காட்சி ஒன்றின் காலை நேர பத்திரிகை செய்தியின் போது உதவிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தொலைபேசி வாயிலாக நேரடியாக தொடர்பு கொண்டு தனது நோய் நிலைமை குறைவடைந்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற தவறான புகைப்படங்கள் செய்திகளை நினைத்து மிகவும் மனம் வருந்துவதாகவும் தெரிவித்தார்.
அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி : https://youtu.be/NcLVXYY9Ugk
அத்துடன் கடந்த 27ஆம் திகதி உதவிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியும் உள்ளார்.
அந்த செய்தி :
நீங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுகின்ற தகவல்கள் மற்றும் செய்திகள் குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக அவற்றின் உண்மைத் தன்மை குறித்து உறுதி செய்தல் மிகவும் முக்கியமானது. மேலும் குறித்த செய்திகள் தொடர்பாக அவற்றின் அதிகாரப்பூர்வமான வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் என்பவற்றில் ஆராய்ந்து பார்த்து அவைபற்றி பதிவுகளை மேற்கொள்வது மிகவும் சிறந்தது.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் சுகாதார நடைமுறைகள் மிகவும் முக்கியமானது, அதேபோல் தகவல் தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தகவல்களை சரிபார்த்து பகிர்தல் மிகவும் முக்கியமானது.