“covid – 19” தடுப்பூசி வழங்குவதில் இலங்கை முதலாம் இடத்தில் இல்லை.
எவ்வாறாயினும் தடுப்பூசி வழங்குவதில் இலங்கை குறிப்பிடத்தக்க அளவு முன்னிலையில் உள்ளது.
தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தில் இலங்கை உலகளாவியரீதியில் முதலிடத்தில் உள்ளதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் அறிக்கைகளும் வரைபுகளும் பகிரப்பட்டன.
அவ்வாறு பகிரப்பட்ட ஒரு சில பதிவுகளின் screenshots:
“covid – 19” தடுப்பூசி வழங்குகின்றமை தொடர்பில் ஏதேனும் மதிப்பீடுகள் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டதா? என நாம் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் வினவினோம்.
அதற்கமைய அவ்வாறு எந்தவொரு மதிப்பீட்டையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான காரியாலயம் தெரிவித்தது.
எனினும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளும் தற்போது மும்முரமாக தடுப்பூசியினை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அத்துடன் குறித்த நாடுகள் பகிரங்கப் படுத்துகின்ற தமது நாட்டின் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் பற்றிய தகவல்களை, ரொய்டர்ஸ் (Roiters) போன்ற செய்தி நிறுவனங்கள், நியூயோர்க் டைம்ஸ்(New York Times) போன்ற செய்தித்தாள்கள், சீ.என்.என் (CNN) போன்ற நிறுவனங்கள், சில புகழ்பெற்ற இணைய தளங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் என்பன பெற்றுக் கொண்டு அவற்றை தரப்படுத்தி குறித்த தரவுகளை பகிரங்கப்படுத்துகின்றனர்.(Vaccine Tracker)
தடுப்பூசி வழங்குதல் பற்றிய The New York Times பத்திரிகையின் தரப்படுத்தல்:
https://www.nytimes.com/interactive/2021/world/covid-vaccinations-tracker.html
தடுப்பூசி வழங்குதல் பற்றிய Royters செய்திச் சேவையின் தரப்படுத்தல்:
https://graphics.reuters.com/world-coronavirus-tracker-and-maps/vaccination-rollout-and-access/
தடுப்பூசி வழங்குதல் பற்றிய CNN செய்தி நிறுவனத்தின் தரப்படுத்தல்:
https://edition.cnn.com/interactive/2021/health/global-covid-vaccinations/
தடுப்பூசி வழங்குதல் பற்றிய Our world in Data இணையத்தளத்தின் தரப்படுத்தல்:
https://ourworldindata.org/covid-vaccinations
அத்துடன் எமது நாட்டின் சுகாதார அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தொற்று நோய்கள் பற்றிய பிரிவு தடுப்பூசி வழங்குதல் தொடர்பிலான தரவுகளை தினம்தோறும் புதுப்பிக்கின்றனர். மேலும் அவை மும்மொழிகளிலும் காணப்படுகின்றது:
https://www.epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=231&lang=si
“கொவிட்-19” தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தொற்றுநோயியல் பிரிவு ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி ஒரு செய்தி அறிக்கையினை வெளியிட்டிருந்தது:
https://www.epid.gov.lk/web/images/pdf/corona_vaccination/covid_vaccination_2021-08_09.pdf
தொற்றுநோயியல் பிரிவின் தரவுகளின்படி எமது நாட்டு சனத்தொகையில் covid-19 வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் டோஸினை மாத்திரம் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 11,260,795 ஆகும். (ஆகஸ்ட் மாதம் 09ம் திகதி இரவு 111.30 மணிவரை)
முழுமையாக (இரண்டு டோஸ்களையும்) தடுப்பூசியினை பெற்றுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 3,249,670 ஆகும்.
அது பற்றிய மேலதிக தகவல்:
https://www.epid.gov.lk/web/index.php?lang=en
Covid-19 வைரஸ் பற்றிய மேலதிக தகவல்கள், தடுப்பூசி வழங்குதல், தினமும் பதிவு செய்யப்படுகின்ற புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, மக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் போன்ற சகல விடயங்களையும் ஜனாதிபதி செயலகம், தொற்றுநோயியல்பிரிவு, சுகாதார மேம்பாட்டு பணியகம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகிய நிறுவனங்களின் இணையத்தளங்கள் வாயிலாக வெளியிடுகின்றனர். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அங்கே பெற்றுக்கொள்ளலாம்.
அந்த இணைய தளங்களுக்கான இணைப்பு Link :
https://www.epid.gov.lk/web/index.php?lang=en
https://www.hpb.health.gov.lk/en
மேலும் இந்த தொற்று நோய் பற்றிய புதிய தகவல்களை இடுவதற்கான இலங்கை அரசு புதியதொரு இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்:
https://covid19.gov.lk/sinhala/
சுகாதார அமைச்சின் இணையத்தளம்:
http://www.health.gov.lk/moh_final/english/
இந்த சகல இணையத்தளங்களையும் சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அணுகலாம்.