பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க,விசேட வர்த்தமானியொன்றின் மூலம் கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதி நாட்டில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தினார். குறித்த அவசரகால சட்டம் தொடர்பில் நாட்டிலே தொடர்ந்தும் பல வாத விவாதங்கள் இடம்பெற்றன. மேலும் இந்த அவசரகால சட்டம் காரணமாக LGBTIQ+ சமூகம் மிகப்பெரிய அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் பேசப்பட்டது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் குறிப்பாக ஃபேஸ்புக்,(Facebook) ட்விட்டர்,(Twitter) வாட்ஸ்அப்(Whatsapp) போன்றவற்றில் அதிகம் பேசப்பட்டது.
அதுபற்றி பகிரப்பட்ட சமூக வலைத்தள பதிவுகளில் Screenshots

ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அரசியலமைப்பின் 40 (1) அ க்கு இணங்க விசேட வர்த்தமானி ஒன்றின் மூலம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தினார். 17 ஜூலை 2022 திகதி வெளியிடப்பட்ட இலக்கம், 2288/30 விசேட வர்த்தமானி இங்கே,
இது தொடர்பில் வெளியான செய்திகள், இங்கே.
அவசரகால சட்டம் தொடர்பில் ஹேஷ்டக் தலைமுறை நாங்கள் இதற்கு முன்னர் வெளியிட்ட விழிப்புணர்வு பதிவுகள் இங்கே, இங்கே.
சட்டத்தரணி ஜெகத் லியனாராச்சி, அவசரகாலச் சட்டம் எவ்வாறு பொதுமக்களை பாதிக்கிறது என்பது பற்றி எழுதிய கட்டுரை, இங்கே.
அவசரகால சட்டம் LGBTIQ+ சமூகத்தை எவ்வாறு பாதிக்கின்றது ?
இலங்கையின் தண்டனைச் சட்டத்தின் கீழ் (1883) பிரிவு 365 மற்றும் 365ஆ, “இயற்கைக்கு எதிரான உடலுறவு” குற்றமாக்குகிறது மேலும் அதனை “மோசமான அநாகரீகம்” என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டு பிரிவுகளையும் பயன்படுத்தியே LGBTIQ+ மக்கள் குற்றவாளிகளாக ஆக்கப்படுகின்றனர். மேலும் இந்த குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
பொதுவாக இலங்கையில் கைது செய்யப்படும் LGBTIQ+ சமூகத்திற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த இந்த இரண்டு பிரிவுகளும் பயன்படுத்தப்படுகின்றன. தண்டனைச் சட்டம் அல்லது அரசியலமைப்பில் LGBTIQ+ பற்றி நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை, மேலும் மேற்கண்ட பிரிவு அந்த சமூகத்தை உள்ளடக்கியது.
அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும் போது, எந்த ஒரு நபரையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொறு குற்றப்பத்திரிகையும் இல்லாமல் வலுக்கட்டாயமாக இருக்கும் இடங்களுக்குள் நுழைந்து கைது செய்யலாம்.
வர்த்தமானி அறிவித்தலில் இருந்து 365 மற்றும் 365அ பிரிவுகள் நீக்கப்பட்டதா?
LGBTIQ+ ஆர்வலர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் சிவில் ஆர்வலர்கள், தொடர்ந்தும் இதற்கு எதிராக குரள் கொடுத்ததுடன் இதுபற்றி விளிப்புனர்வுகலையும் ஏற்படுத்தி வந்தனர், இங்கே.

பின்னர், இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வெளியிட்டது.
குறித்த அறிக்கை,
அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானியொன்ரை வெளியிட்டார்.
அதன்படி, தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 365 (அ) மற்றும் 365 (ப்) என்பன நீக்கப்பட்டு, அவசரகாலச் சட்டங்கள் தொடர்பாக சட்டத்தின் 408 மற்றும் 410 முதல் 420 வரையிலான பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
குறித்த சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு, இங்கே.
இது தொடர்பாக வெளியான செய்திகள் இங்கே.
இது தொடர்பில் சட்டத்தரணி திருமதி இஷாரா ஜயசேனவிடம் Hashtag தலைமுறை நாங்கள் வினவினோம்.
இந்த விவகாரம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் கீழே.
“தண்டனைச் சட்டத்தின் 360 மற்றும் 365 பிரிவுகள், இயற்கைக்கு மாறான குற்றங்களைக் குறிப்பிடுகின்றன. இது LGBTIQ+ சமூகத்தை நேரடியாக குறிவைக்கிறது. அதன்படி, அவசரகாலச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் வர்த்தமானி அறிவிப்பால் LGBTIQ+ சமூகத்தின் உரிமைகள் அச்சுறுத்தப்பட்டு பாதிக்கப்பட்டன. அதாவது இலங்கையின் அரசியலமைப்பின் 12.1வது சரத்தில் “சட்டத்தின் முன் சமத்துவம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் LGBTIQ+ சமூகத்தின் சமத்துவம் அச்சுறுத்தப்படுகின்றது.
அரசியலமைப்பின் 12.2 வது பிரிவின்படி, இனம், மதம், மொழி, சாதி, பாலினம், ஆகியவற்றின் அடிப்படையில் யாருக்கும் பாகுபாடு காட்ட முடியாது.
இந்த சந்தர்பத்திலே, அவசரகால சட்ட ஒழுங்குமுறைகளின் நோக்கத்திற்குப் புறம்பாக LGBTIQ+ சமூகத்திற்கு எதிராக அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக LGBTIQ+ சமூகத்திடம் இருந்து பாரிய எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் அதற்கு எதிராக அவர்கள் தொடர்ந்தும் குரல் எழுப்பினர்.
அதன் பின்னர், ஆகஸ்ட் 5, 2022 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், LGBTIQ+ சமூகத்தின் உரிமைகளை அச்சுறுத்தும் அவசரகால சட்ட ஒழுங்குமுறைகளில் இருந்து 360 மற்றும் 365 A உறுப்புரைகள் நீக்கப்பட்டன.
முடிவுரை : மேற்கூறிய விடயங்களை நோக்கும்போது, ஜூலை 17 அன்று நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரச் சட்டத்தின் காரணமாக, LGBTIQ+ சமூகத்தில் நேரடிப் பாதிப்பு ஏற்பட்டது என்ற முடிவுக்கு வரலாம்.
அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்கள் மற்றும் எதிர்ப்புகளின் விளைவாக, அவசரகாலச் சட்டத்தின் மூலம் LGBTIQ+ சமூகத்திற்கு அச்சுருத்தலாக கானப்பட்ட தண்டனைச் சட்டத்தின் 365 மற்றும் 365அ பிரிவுகளின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 5 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டது.