ஆயுர்வேத திணைக்களம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அல்லது தடுப்பூசி மருந்துகள் தொடர்பான அட்டைகளை வழங்க எவருக்கும் அனுமதி வழங்கவில்லை.
‘கொவிட்-19’ இற்கான தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பின்னர் வழங்கப்படும் அட்டையினை கைவசம் வைத்திருத்தல் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போது அட்டையினை கொண்டு செல்வதை கட்டாயமாக்குதல் போன்ற விடயங்களில் தற்போது அரசாங்கம் தமது கவனத்தைச் செலுத்தியுள்ளது. மேலும் சமூக ஊடகங்களிலும் இது பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
‘கொவிட்-19’ தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பின்னர் வழங்கப்படும் அட்டை தேவையில்லை எனவும் தடுப்பூசி பெறாமல் அட்டை ஒன்றை/ நோய்த்தடுப்பு அட்டையினை பெற்றுக்கொள்ள முடியும் என Facebookஇல் ஒரு சிலர் பதிவுகளை இட்டு இருந்தமையை அவதானிக்க முடிந்தது.
அந்த பதிவு.

இந்த விடயம் மேலும் பல Facebook குழுக்களிலே பகிரப்பட்டு இருந்தமையை நாம் அவதானித்தோம். அவ்வாரான ஒரு சில பதிவுகளில் Screenshots.







அவற்றிலே உள்நாட்டு ஆயுர்வேத வைத்தியர்கள் மூலம் தடுப்பூசி அட்டையொன்று வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே நாம் குறித்த அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டோம்.
குறித்த அழைப்புக்கு பதிலளித்த ஒருவர், அவர்களுடைய மருத்துவ நிலையத்தினால் வழங்கப்படும் மருந்தினை பெற்றுக் கொண்டதன் பின்னர் குறித்த அட்டை வழங்கப்படுவதாக கூறினார். மேலும் அவர் குறிப்பிட்ட ஆயுர்வேத மருந்துக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளார்களா? என கேட்டபோது “இல்லை” என்றே பதில் வந்தது. அத்துடன் அவர்கள் பெயர் குறிப்பிட்ட ஆயுர்வேத வைத்தியரை தொடர்பு கொள்ள முடியுமா என வினவியபோது அதற்கான சரியான பதில்கள் எதனையும் அவர் வழங்கவில்லை.
நாம் இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத்திடம் வினவினோம். அவர் எமக்கு வழங்கிய முழுமையான பதில்.
” ஏதேனும் ஒரு முறையில் அட்டை ஒன்றினையோ அல்லது அது போன்ற ஏதேனுமொன்றை வழங்குவதாயின் முதலில் அது குறித்து உள்ள உரிய அதிகாரி முதலில் அனுமதி வழங்க வேண்டும்.
எமக்கு மேலே குறிப்பிட்ட ஆயுர்வேத அட்டை பற்றி எதுவும் தெரியாது. இந்த செயற்பாடுகளுடன் குறித்து ஆயுர்வேத திணைக்களம் தொடர்பு பட்டிருப்பின் அவர்கள் முதலில் இதிலே தலையிட வேண்டும். அவர்கள் வழங்குகின்ற மருந்து வகை ஆயுர்வேத திணைக்களத்தினால் அனுமதி வழங்கிய மருந்தாயின் ஆயுர்வேத திணைக்களம் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், குறித்த மருந்துகள் ஏதேனும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதா என்பதை காவல்துறையினர் ஆராய வேண்டும். இது பற்றி சுகாதார அமைச்சு தேவையான தகவல்களை ஆராய்ந்து உரிய விடயம் குறித்து உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தினால் எமக்கு அது பற்றிய பதில்களை வழங்க முடியும்.
அவ்வாறும் இல்லாவிட்டால் மூன்றாவதாக எமது வைத்தியசாலைகளுக்கு அல்லது எமது பொது சுகாதார எல்லைக்கு உட்பட்ட பொதுமக்கள் குறித்த பிரதேசத்தின் பொது சுகாதார அதிகாரிக்கு முறைப்பாடு ஒன்றை மேற்கொள்வதன் மூலம் இது பற்றி ஆராய முடியும், என்ற போதிலும் எம்மால் செய்ய முடியுமான ஒரே விடயம் பொலிசாருக்கு இது பற்றி தெரியப் படுத்துவதாகும்.. ஏனென்றால், இதுபற்றி செயற்படுவதற்கு எமக்கு எவ்வித சட்டமும் இல்லை. எனவே நாம் காவல்துறை உட்பட உரிய அதிகாரிகளுக்கு இதுபற்றி அறிவிப்போம். ”
மேலும் நாம் இது பற்றி ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் தம்மிக அபேகுனவர்தனவிடம் வினவினோம்.
ஆயுர்வேத ஆணையாளருடம் நாம் மேற்கொண்ட உரையாடல்.
கேள்வி – உள்நாட்டு மருத்துவ அல்லது ஆயுர்வேத திணைக்களத்தினால் ஏதேனும் நோய்த்தடுப்பு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதா ?
பதில் – ஆயுர்வேத திணைக்களத்தினால் கொவிட்-19 தடுப்பூசி சம்பந்தமான எந்தவொரு அட்டையும் வழங்கப்படுவதில்லை. மேலும் வேறு எந்த முறைகளிலும் வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுதல் பற்றி நாம் உறுதிப்படுத்தல்களையோ அங்கீகாரங்களையோ எவருக்கும் வழங்கவில்லை. எனினும் நீங்கள் கூறியது போன்று செய்திகளை நானும் சமூக ஊடகங்களில் அவதானித்தேன். குறிப்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு இடத்திலும் எமக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த செயற்பாடுகளை மேற்கொள்வதாக நான் அறிந்தேன். அந்த செயற்பாடுகளுடன் ஆயுர்வேத திணைக்களம், சுகாதார அமைச்சு அல்லது சுகாதார சேவைகள் திணைக்களம் என்பன எவ்விதத் தொடர்புகளும் இல்லை.
கேள்வி – நோய் தடுப்பு தொடர்பில் ஏதேனும் மருந்துகள் உள்ளதா ?
பதில் – அவ்வாறு விசேடமான நோய் எதிர்ப்பு மருந்துகள் எதுவும் இல்லை. ஒரு சில மருந்துகள் காணப்படுகின்றன எனினும் அவற்றை பெற்றுக்கொண்ட பின்னர் கொரோனா தொற்று ஏற்படாது, என எவராலும் கூற முடியாது. மேலும் எந்தவிதமான ஆய்வுகள் மூலமும் இதுபற்றிய உறுதியான முடிவுகள் எதனையும் நாம் வழங்கவும் இல்லை.
கேள்வி – ஏதேனும் மருந்துகளுக்கு நீங்கள் அனுமதி வழங்கி உள்ளீர்களா?
கோவிட்-19 உடன் இணைந்ததாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மருந்து வகைகள் 14 ற்கு நாங்கள் அனுமதி வழங்கி உள்ளோம். மேலும் அவை ஆயுர்வேத திணைக்களத்தில் உறுதிப்படுத்தப்பட்டவை ஆகும். மேலும் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் “சுவதரனீ, குடுஜ்ஜாதீ மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய பான வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். அவை மூலமும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எனினும் இவற்றை பெற்றுக்கொண்ட பின்னர் கொரோனா நோய் ஏற்படாது என உறுதியாக கூற முடியாது. இந்த நோயிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டுமானால் தவறாமல் சுகாதார நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அத்துடன் மேற்கத்தைய வைத்திய முறையினால் வழங்கப்படுகின்ற தடுப்பூசியினை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் ஆயுர்வேத திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட 14 வகையான ஆயுர்வேத மருந்துகள் பற்றிய அரிக்கை. இந்த நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கக்கூடிய மருந்துகள் பற்றிய அறிக்கையினை ஆயுர்வேத திணைக்களம் வெளியிட்டிருந்தது. அந்த அரிக்கை,
கேள்வி – தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பின்னர் சுகாதார அமைச்சினால் வழங்கப்படுகின்ற அட்டை போன்ற ஏதேனும் அட்டைகளை ஆயுர்வேத திணைக்களத்தினால் அல்லது ஆயுர்வேத மருந்துகளை பெற்றுக்கொண்டு பின்னர் ஆயுர்வேத வைத்தியர்கள்/ சிகிச்சை நிலையங்கள் என்பன மூலம் வழங்கப்படுகின்றதா?
பதில் – தடுப்பூசி பற்றிய பொறுப்புகள் காணப்படுவது ஆயுர்வேத திணைக்களத்திடமும் சுகாதார பணிப்பாளர் நாயகத்திடமும் ஆகும். அதேபோல் ஆயுர்வேத வைத்திய துறையில் ஏதேனும் வெளியீடுகளை வெளியிடுவதாயின் அதற்கான பொறுப்பு ஆயுர்வேத ஆணையாளருக்கே உள்ளது. எனவே ஆயுர்வேத ஆணையாளர் இதுவரை எந்தவொரு தனியார்/அரச நிறுவனத்திற்கோ அல்லது தனிநபர்களுக்கோ அவ்வாறு அட்டைகளை வெளியிடுவதற்கான அனுமதி வழங்கவில்லை.
இதற்கு முன்னர் ஆயுர்வேத திணைக்களம்/ சுதேச மருத்துவம் என்பன பற்றி நாம் மேற்கொண்ட உண்மை சரிபார்ப்புக்கான இணைப்பு.
இங்கே:
எமது கருதுகோள்.
இலங்கை அரசு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
சுகாதார அமைச்சு தொற்றுநோய் தடுப்பு பிரிவு மற்றும் குரோன் நோய் தடுப்பு மையம் ஆகிய அரச நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இந்த வேலைத்திட்டத்தை மும்புரமாக நடத்திவருகின்றனர்.
இலங்கையிலே “கொவிசீல்ட்/அஸ்ட்ராஸெனிகா, சய்னோபாம், ஸ்புட்னிக் V, பfய்சர் (ப்fய்ஸர்/பயோஅன்டெக்) மற்றும் மொடர்னா போன்ற தடுப்பூசிகள் வழங்கப்படுகின்ற.
குறித்த தடுப்பூசிகளை வழங்கிய பின்னர் சுகாதார அதிகாரிகள், தடுப்பூசியின் பெயர், தடுப்பூசி வழங்கப்பட்ட திகதி, எத்தனையாவது தடுப்பூசி போன்ற விடயங்களை குறித்து அட்டையில் எழுதுகின்றனர்.
இதனை தவிர வேறு எந்தவிதமான உத்தியோகபூர்வ தடுப்பூசிகளையோ, தடுப்பூசி அட்டைகளையோ இலங்கை அரசு வழங்குவதில்லை.
தடுப்பூசி வழங்குதல் பற்றிய சகல விதமான தகவல்களையும் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.