FACT CHECK : ‘கொவிட் – 19’ தடுப்பூசியினால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதாக பகிரப்படுகின்ற அறிக்கைகள் பொதுமக்களை தவறாக திசை திருப்புகின்றன.

கொவிட் – 19 வைரஸுக்கு எதிராக தற்போது காணப்படுகின்ற ஒரே தீர்வு, சரியான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதாகும். 

உலகில் பல்வேறு நாடுகளும் தற்போது மிகவும் வெற்றிகரமாக அவர்களது தேசிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். குறிப்பாக கடந்த இரு வருடங்களாக நீடித்த பயணத் தடைகள், நாடளாவிய முடக்கங்கள் (லொக் டவுன்)என்பவற்றை கட்டம் கட்டமாக தற்போது அகற்றி வருகின்றனர். 

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கொவிட்-19 வைரஸ் பற்றிய போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பின்னர் ஏற்படுகின்ற பக்க விளைவுகள் பற்றிய பதிவுகள் முகநூலிலே பகிரப்பட்டிருந்தன. மேலும் தனிப்பட்ட ஒருசில அனுபவங்களும் Comments களிலே எழுதப்பட்டிருந்தன. 

இங்கே, இங்கே, இங்கே, இங்கே 

மேலும் சில Screenshots.

இந்த பதிவுகளிலே அனேகமானவை தடுப்பூசிக்கான எதிர்ப்பினை தொடர்ந்து வந்தவை எனக்கொள்ளலாம். 

தடுப்பூசிக்கான எதிர்ப்பினை தொடர்ந்து தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதில் தயக்க நிலையொன்று ஏற்பட்டுள்ளது. எனவே இவை காரணமாக தடுப்பூசி பெற்றுக் கொள்ளுதல் மற்றும் தடுப்பூசியை பெற்றதன் பின்னர் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றிய போலியான தகவல்கள் பல சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதை அவதானிக்க முடிந்தது. 

கொவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானது, என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) உறுதிசெய்துள்ளது. மேலும் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதன் மூலம் கொரோனா நோய் தீவிர நிலைமையை அடைவது தடுக்கப்படுவதுடன் மரனத்தில் இருந்தும் அது உங்களை பாதுகாக்கின்றது.  மேலும் தடுப்பூசியினை பெற்றுக் கொண்டதன் பின்னர் உங்களுக்கு சிறிய அளவில் காய்ச்சல் அல்லது உடல் அசதி ஏற்படும். அதன் அர்த்தம் உங்கள் உடலில்  குறித்த தடுப்பூசி செயற்படுகின்றது என்பதாகும். 

இது பற்றிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் முழுமையான விளக்கம், இங்கே… 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான காரியாலயமும் இது பற்றிய பூரன விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்கள். 

இங்கே,

தடுப்பூசியினை பெற்றுக் கொண்டதன் பின்னர் சிறு சிறு நோய் நிலைமைகள் ஏற்படுவது சகஜமான ஒரு விடயம் என, உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட இது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்கின்ற பல நிறுவனங்களும் விஞ்ஞானிகளும் கூறியுள்ளனர். ஐக்கிய அமெரிக்காவின் “ஜோன்ஸ் ஹொப்கின்ஸ்” பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் இது பற்றி கூறிய கருத்து

இங்கே, இங்கே,

அமெரிக்காவின் “மியுரி பல்கலைக்கழகம்” இதுபற்றி கூறிய விளக்கம் இங்கே

இங்கிலாந்தின் சுகாதார சேவை இதுபற்றி கூறிய விளக்கம்

ஐக்கிய அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறிய விளக்கம்

சகல விதமான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் மூலமும் பக்க விளைவுகள் ஏற்படலாம், என்பதே மருத்துவர்களின் விளக்கமாகும். 

மேலும் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி அவ்வாறு ஏற்படுகின்ற பக்க விளைவுகள் தீவிரமான நிலைக்கு செல்லும் வீதம் மிகவும் குறைவாகும். தற்போது உலகளாவிய ரீதியில் பயன்பாட்டிலுள்ள தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் பற்றி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் இவ்வாறு கூறுகின்றது. 

கொவிட் தடுப்பூசி மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றி யூரோ நியுஸ் (EurobNews Next) செய்திச் சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது மேலும் இந்த அறிக்கை செப்டம்பர் மாதம் 25ம் திகதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அந்த அறிக்கை இங்கே,

ஜன்சென் (Johnson & Johnson (Janssen)) என இந்த தடுப்பூசி அழைக்கப்படுவதுடன் அதிலே இரண்டு பிரதானமான பக்கவிளைவுகள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த அரிக்கையின்படி இரத்த உறைவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியில் கோளாறு ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இரத்த உறைவுக்கோளாறு 10,000 பேரில் ஒருவருக்கு ஏற்படுவதுடன் Guilllain -Barre Syndrome என்ற நோயெதிர்ப்பு சக்தியினை குறைக்கின்ற நோய் 100 பேருக்கு மாத்திரமே ஏற்பட்டுள்ளது. 

இலங்கையில் கோவில் 400 தடுப்பு பற்றிய சகல விதமான வழிகாட்டல்களும் தொற்றுநோயியல் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணப்படுகின்றது. அவற்றைப் பார்வையிட இதனுள் செல்லவும். 

https://www.epid.gov.lk/web/

எமது கருத்து . 

கோவிட் -19 தடுப்பூசி மூலம் எற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றி தேவையற்ற பாதற்றமொன்றை திட்டமிட்ட முறையில் ஒரு சாரார் உருவாக்குவதை அவதானிக்க முடிந்தது. இதன்மூலம் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டுக்கு தடங்கள் விளைவிப்பதே இதன் பிரதான நோக்கமாகும். 

கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொண்ட பின்னர் ஏற்படக்கூடிய ஆபத்தான பக்க விளைவுகள் மிகவும் அரிது. எனவே மேலே காணப்படுகின்ற சகல பதிவுகளும் மக்களை தவறான முறையில் திசை திருப்ப கூடியவையாகும்.

Share this post

Share on facebook
Share on twitter
Share on linkedin

Related Projects

Uncategorized

A tale of two obscene publications acts

A brief and incomplete contextualisation of obscenity laws and imperial censorship in Sri Lanka Last month, the Sri Lankan Cabinet …

Towards A Feminist Future

வெளிநாட்டு பணிப்பெண் வேலைவாய்ப்புக்களும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும்

அதிகரிக்கும் சனத்தொகைக்கு தகுந்த வேலைவாய்ப்பு இன்மை அனைத்து நாடுகளிலும் நிலவும் பாரிய பிரச்சினையாக இருக்கும் அதேவேளை உள்நாட்டு வருமானங்கள் தாழ் நிலையில் இருப்பதால் இலங்கை முதலிய மனிதவளம் …

Towards A Feminist Future

ஊடக வெளிகளும் பெண்களுடைய சவால்களும்

இன்றைய காலகட்டத்தில் ஊடகம் என்று அணுகுகின்ற போது வானொலி தொலைக்காட்சி உட்பட சமூக வலைத்தளங்களையும் கருத்தில் கொண்டு அணுக இயலும். இவ்வாறான சமூக முன்றலில் நாம் ஒவ்வொருவரும் …

Towards A Feminist Future

THE DIGITAL GENDER DIVIDE

The digital gender divide I am at the age where most of my female friends are married and having children. …

Fact Check

FACT CHECK : ஆயுர்வேத திணைக்களம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அல்லது தடுப்பூசி மருந்துகள் தொடர்பான அட்டைகளை வழங்க எவருக்கும் அனுமதி வழங்கவில்லை.

ஆயுர்வேத திணைக்களம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அல்லது தடுப்பூசி மருந்துகள் தொடர்பான அட்டைகளை வழங்க எவருக்கும் அனுமதி வழங்கவில்லை.  ‘கொவிட்-19’ இற்கான தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பின்னர் வழங்கப்படும் …

Towards A Feminist Future

வன்முறைச் சங்கிலிகளுள் பெண்களின் கரங்கள்…

இருபத்தோராம் நூற்றாண்டில் அபிவிருத்தி, சமத்தும், சாதனைகள் என்று உலகளாவிய ரீதியில் முன்னேற்றங்களையும் மேம்பாடுகளையும் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நாம் இன்னும் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளில் முழுமையான தீர்வை …