FACT CHECK : சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாமைக்கான காரனம் போராட்டக்காரர்களா ?

இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மிகவும் அவசியம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் சமூக ஊடகங்களிலும் அதற்கு வெளியிலும் கணிசமான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. மேலும் நாட்டில் உள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் சேர்த்தே இந்தப் பேச்சுக்கள் யாவும் உருவாகியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் (Senior Staff) உடன்படிக்கைக்கு வரவிருந்த போதிலும் நாட்டில் நிலவி வருகின்ற நிலையற்ற சூழ்நிலை காரணமாக அது தாமதமாகியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜூலை மாதம்  25ம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது தெரிவித்தார். எனினும் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் இந்த கூற்று பொய்யானது. செய்தியாளர் சந்திப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் பணியாளர் மட்ட (ஊழியர்) ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்த கருத்துக்கள் கீழே உள்ளது.

“ஐ.எம்.எஃப் (IMF) ஆகஸ்ட் முதல் வாரத்தில் எங்களுக்கு வழங்க வேண்டிய ஊழியர் மட்ட ஒப்பந்தமும் (staff level agreement) அந்த ஒப்பந்தத்தின் மூலம் எங்களுக்கு கிடைக்க வேண்டிய பணமும் இந்த அமைதியின்மை சூழ்நிலையால் தாமதமாகி வருகிறது.

அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் அறிக்கையை மேற்கோள்காட்டி பிரதான ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தன. இங்கே,

இது தொடர்பாக ஃபேஸ்புக்(Facebook) சமூக வலைதளத்தில் வெளியான சில பதிவுகளின் (Posts) ஸ்கிரீன் ஷாட்கள்(Screenshots) கீழே.

நாம் இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் வினவினோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் சார்பாக இலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் பின்வருமாறு பதிலளித்தனர்.

“இலங்கையின் நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணிப்போம். நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்களை நாங்கள் நடாத்தி வருகின்றோம். ஒரு விரிவான நிதி வசதிக்காக பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு புதிய நிர்வாகத்துடன் கொள்கை கலந்துரையாடலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்”

“We are closely monitoring the ongoing developments in Sri Lanka. We are continuing technical discussions with our counterparts in the Ministry of Finance and Central Bank of Sri Lanka and are ready for policy discussions with the new administration towards reaching a staff-level agreement on the EFF arrangement.”

அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே பணியாளர் நிலை (ஊழியர்கள்) உடன்படிக்கையை நோக்கி முன்னேற முடியும். முகாமைத்துவப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியதைப் போன்று, எமது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அரசாங்கம் அமைந்தவுடன், நாங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வோம். எங்களின் புரிதலின்படி இதுவே தற்போதைய நிலை எனவே எங்கள் கலந்துரையாடல்களை தொடர நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

“Progress towards a staff level agreement can only be made in discussions with the authorities. As the Managing Director indicated, as soon as there is a government that we can continue our discussions with, we will do so. Our understanding is that this is now the case and we look forward to continuing our discussion.”

இது தொடர்பில் கொழும்பில் உள்ள பொருளாதார நிபுணர்களிடமும் நாம் வினவினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் பின்வருமாறு இது பற்றி தெளிவு படுத்தினார்கள்:

“சர்வதேச நாணய நிதியத்துடன் எங்களால் ஒரு உடன்பாட்டை எட்ட முடியவில்லை, அது இந்த எதிர்ப்புகள் காரணமாக அல்ல. சர்வதேச நாணய நிதியம் போதுமான நிதி உத்தரவாதத்தை கோரியுள்ளது. கடன் நிலைத்தன்மை, இடைக்கால வரவு செலவு திட்டம், கடன் மறுசீரமைப்பு, கடன் பகுப்பாய்வு, கடனாளர் ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்புதல்கள் ஆகியவை இதில் அடங்குகின்றன. இந்த விடயங்களை அரசாங்கம் போதியளவு பூர்த்தி செய்யாத காரணத்தினால் தான் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை. எனினும் அரசாங்கம் ஒன்று இல்லாத போதுகூட சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகல் எதுவும் நடத்தவில்லை. அதுவும் கொஞ்ச காலத்திற்கு. எவ்வாறாயினும், அந்த நேரத்திலும் அதற்கு முன்னரும் பின்னரும் சர்வதேச நாணய நிதியம் இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தியது”

பொருளாதார நிபுணரான அட்வகேட் இன்ஸ்டிட்யூட் தலைமை நிர்வாக அதிகாரி தனநாத் பெர்னாண்டோவிடம் நாம் இது பற்றி வினவினோம்.

“பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான கட்டமைப்பு பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு வாக்குறுதியும் அனுமதியும் தேவை. சர்வதேச நாணய நிதியம், அரசாங்கம் சீர்திருத்த அர்ப்பணிப்பு எதுவும் இல்லை என்று சந்தேகித்தால், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு நேரம் எடுக்கும் அல்லது சம்பந்தப்பட்ட செயல்முறைகள் தாமதமாகும்”.

இது தொடர்பாக நாங்கள் நிதி அமைச்சு/ திறைசேரி மற்றும் இலங்கை மத்திய வங்கியிடம் வினவினாலும், அந்த தரப்பினரிடமிருந்து உரிய பதில்கள் எமக்கு கிடைக்கவில்லை. (ஜூலை 29)

முடிவு : போராட்டக்காரர்கள் மற்றும் கலகச் சூழல் காரணமாக சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்ட முடியவில்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்த கருத்து பொய்யானது.

இதை எப்போதும் இறுதியில் சேர்க்கவும் – ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.

Share this post

Related Projects

Fact Check

FACT CHECK : රාජ්‍ය නිලධාරීන්, දේශපාලඥයන් විශ්වාස නැති නිසා ලෝක බැංකුව සෘජුවම දිළිදු සහන බෙදයි ද?

“නිලධාරීන් දේශපාලනඥයන් විශ්වාස නැති නිසා ලෝක බැංකුව සෘජුවම දිළිදු සහන බෙදයි” යන සිරස්තලය යටතේ සැත්තැම්බර් මස 04 වන දින ඉරිදා …

Fact Check

FACT CHECK : ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு 129,000 சுற்றுலாப் பயணிகள் வந்தார்களா?

“கடந்த ஏப்ரலில் மாத்திரம் எங்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகை 129,000 இருந்தது” என ஆகஸ்ட் 25ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்த கருத்து பொய்யானது. கடந்த …

Fact Check

FACT CHECK : අප්‍රේල් මාසයේ දී ශ්‍රී ලංකාවට   සංචාරකයන් එක්ලක්ෂ විසිනමදාහක්?

“පහුගිය අප්‍රේල්වල අපේ සංචාරකයන්ගේ පැමිණීම එක්ලක්ෂ විසිනමදාහක් වුණා. අප්‍රේල්වල විතරක්” යැයි පාර්ලිමේන්තු මන්ත්‍රී එස්.බී.දිසානායක මහතා අගෝස්තු 25 වැනිදා කරන ප්‍රකාශය …

Fact Check

FACT CHECK : அவசரகாலச் சட்டம் இலங்கையில் உள்ள LGBTIQ+ சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்ததா ?

பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க,விசேட வர்த்தமானியொன்றின் மூலம் கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதி நாட்டில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தினார். குறித்த அவசரகால சட்டம் தொடர்பில் …

Fact Check

FACT CHECK : ශ්‍රී ලංකාව තුළ LGBTIQ+ ප්‍රජාවට හදිසි නීතිය තර්ජනයක් වුණා ද?

වැඩබලන ජනාධිපතිවරයා ලෙස පත් වූ රනිල් වික්‍රමසිංහ මහතා 2022 ජූලි 17 වැනිදා අති විශේෂ ගැසට් පත්‍රයක් මඟින් රට තුළ හදිසි …

Fact Check

FACT CHECK : Did the Central Bank Governor make a statement stating “Inflation is not a problem, it is the perfect solution”?

Sri Lanka is currently facing an acute economic crisis. One of the main issues is the high inflation. As announced …