உலகம் முழுவதும் கொவிட்-19 வைரஸ் பரவி வரும் நிலையில், முகக்கவசம் (Mask) குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள சுகாதார அமைப்புகளும் (உ.தா. அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) முகம்/வாய் கவசங்கள் குறித்து பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது)
இதேவேளை, செல்லப்பிராணிகளின் பாதுகாப்பிற்காக டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ உருவாக்கிய முகக்கவசம் என்ற முகநூல் பதிவு பெப்ரவரி 14ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அதன் ஸ்கிரீன் ஷாட் கீழே உள்ளது.

கொவிட்-19 வைரஸ் செல்லப்பிராணிகளையும் தாக்கும், என உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது. இங்கே
செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் கொவிட் தொற்று குறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப்பிரிவு வெளியிட்ட தகவல். இங்கே
மேலும் செல்லப்பிராணிகளுக்கு முகக்கவசம் அணிவிக்க வேண்டாம் என்றும் அந்த மையம் அறிவுறுத்துகிறது.
யசித் தில்ஷான் என்ற முகநூல் கணக்கினால் மேற்கண்ட பதிவு பகிரங்கப்படுத்தப்பட்டது.
இந்த கணக்கினை பார்க்கும்போதே இது ஒரு போலியான முகநூல் கணக்கு(Fake Account), என தெரிகின்றது. மேலும் குறித்த முகநூல் பதிவில் தொலைபேசி இலக்கமொன்று குறிப்பிடப்பட்டிருந்ததுடன், அதனை நாங்கள் தொடர்பு கொண்டோம்.
அப்போது குறித்த இலக்கமானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவுடைய தொலைபேசி இலக்கம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் மேற்கண்ட முகநூல் பதிவு குறித்து அவரிடம் கேட்டோம், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறான போலிச் செய்திகளுக்கு தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
முடிவுரை: செல்லப்பிராணிகளின் பாதுகாப்பிற்காக டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தயாரித்ததாக பேஸ்புக்கில் பதிவிட்ட முகக்கவசம் பற்றிய செய்தி போலியானது.
எமது Hashtag Generation உண்மைச் சரிபார்ப்புகளுக்கு (FACT CHECK) இங்கே கிளிக் செய்யவும்