வாட்ஸ்அப் (WhatsApp), முகநூல் (Facebook) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், “அனைத்து காவல் நிலையங்களில் இருந்து அனைத்து குடிமக்களுக்கும் அவசர அறிவிப்பு” என பரப்பப்படுகின்ற செய்தி போலியானது.
கடந்த மே மாதமும் இந்த செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை நாங்கள் அவதானித்ததுடன்
அதுபற்றி நாங்கள் உண்மை சரிபார்ப்பு ஒன்றை மேற்கொண்டோம்.
இது தொடர்பாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் போது, வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்ட இந்த செய்தி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டுள்ளதை அவதானித்தோம்.
அவற்றின் சில திரைக்காட்சிகள் (ScreenShots) கீழே காட்டப்பட்டுள்ளன.


இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திரு. நிஹால் தல்துவாவிடம் ஹேஷ்டேக் தலைமுறை வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்:
“ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு அந்த செய்தி பகிரப்பட்டதுடன் அது போலி என நாங்கள் அறிவித்திருந்தோம், பின்பு மறுபடியும் அந்தச் செய்தி வெளிவந்துள்ளது. அதுவும் பொய்யான ஒரு செய்தியாகும்.”
மேலும் இந்த போலியான செய்தியின் இறுதியில், உள்துறை அமைச்சு கூறுகிறது, என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி அவ்வாறான எந்த ஒரு அமைச்சும் பெயரிடப்படவில்லை. இதற்கு பொறுப்பான பிரதான அமைச்சரவை ‘பொது பாதுகாப்பு அமைச்சு’ ஆகும்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் இங்கே,
பொது பாதுகாப்பு அமைச்சோ அல்லது காவல்துறையோ இதுபோன்ற எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உறுதிப்படுத்தினார்.
ஆகவே சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிரப்படுகின்ற மேற்கூறிய செய்தி முற்றிலும் போலியானது, என்ற முடிவுக்கு வரலாம்.
இது பற்றி ஹேஷ்டேக் தலைமுறையின் முந்தைய உண்மைச் சரிபார்ப்பை இங்கே பாருங்கள்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.