FACT CHECK : ஊடகங்கள் வாயிலாக திரிபுபடுத்தப்பட்ட பேராசிரியர் நீலிகா மலவிகேவின் கருத்துக்களும் அவற்றின் உண்மையும்

கொவிட் வைரஸ் தொற்றானது கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் ஊடகங்களிலே, குறிப்பாக சமூக ஊடகங்கள் வாயிலாக இது பற்றிய பல்வேறு தகவல்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களின் கருத்துக்கள் என்பன பகிரப்பட்டன. அதன்பின்னர் உலகலாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான தொற்றுநோயாக பரவிய பின் மேலே குறிப்பிட்ட தகவல்களின்   பரவலும் அதிகமானது. 

ஊடகங்கள் வாயிலாக இந்த வைரஸின் பரவல் பற்றிய செய்திகளை வெளியிடும் போது வெவ்வேறு நுட்பங்களையும் அவர்கள் கையாண்டனர். அதுமட்டுமன்றி துறைசார் நிபுணர்கள் குறிப்பாக வைத்தியர்கள் ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் தமது கருத்துக்கள், ஆராய்ச்சிகளின் முடிவுகள் மற்றும் மக்களுக்கான அறிவுறுத்தல்கள் என்பவற்றை பிரதான ஊடகங்களுக்கு மேலதிகமாக தமது உத்தியோகபூர்வ Facebook Twitter போன்ற சமூகவலைத்தள பகுதிகளிலும் பதிவேற்றினர். 

ஆனால் துரதிஸ்டவசமாக அவ்வாறு அவர்கள் பதிவு செய்கின்ற பதிவுகளை தவறாக மேற்கோள் காட்டுகின்ற  பல சம்பவங்களையும் நாம் அவதானித்தோம். குறிப்பாக தமது அரசியல் நோக்கங்களுக்காக ஊடகங்கள் அவ்வாறு அவர்களுடைய கருத்துக்களை திரிபுபடுத்தி பகிரங்கப்படுத்தி இருந்தார்கள். 

அதனோடு இணைந்ததான இரண்டு அண்மைய நாள் சம்பவங்களை நாம் ஆராய்ந்தோம். 

கொவிட்-19 வைரஸ் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்ற எமது நாட்டின் முன்னணி விஞ்ஞான ஆராய்ச்சியாளரான, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே அவர்கள்  குறுகிய இரு வார காலத்தினுள் இரு முறைகள்  ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை திரிபுபடுத்தி மக்களை தவறாக வழிநடத்தியிருந்தார்கள். 

முதலாவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி பேராசிரியர் தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்த ஒரு டிவிட்டர் பதிவினை தவறாக திரிவுபடுத்தி ஊடகங்களில் பிரசுரித்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து வந்த நாட்களிலும் அதேபோல் அவருடைய கருத்துக்களை ஒரு சில ஊடகங்கள் திரிபுபடுத்தி கூறியிருந்தார்கள். 

இங்கே 

இங்கே 

மேலும் அதனை தொடர்ந்து ஒரு சில நாட்களுக்கு பின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்னவும் அந்த கருத்தை தவறாக பயன்படுத்தியிருந்தார். 

இங்கே

மேலும் ‘ஸ்ரீ புவத்’ என்ற youtube அலைவரிசையும் பேராசிரியர் உடைய கருத்தை தவறாக பயன்படுத்தி இருந்தார்கள். 

இங்கே

பேராசிரியர் அவர்கள் பஹ்ரைன் நாட்டின் ஆராய்ச்சி ஒன்று பற்றிய ட்விட்டர் செய்தியினை ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஆறாம் திகதி காலை 7.03 மணிக்கு பதிவேற்றி உள்ளதுடன் அதனை ஒரு சிலர் தவறாக மேற்கொள்காட்டி உள்ளதாக மீண்டும் ஒரு பதிவினை பிற்பகல் 2.51 ற்கு பதிவேற்றி உள்ளார்கள். 

முதலாவது ட்விட்டர் பதிவு இங்கேhttps://twitter.com/GMalavige/status/1430704908194353164.

தனது கருத்தினை தவறாக சுட்டிக்காட்டி உள்ளதாக தெரிவித்த இரண்டாவது பதிவு இங்கே. 

எனவே நாங்கள் இதுபற்றி பேராசிரியர் நீலிகா மலவிகேவிடம் வினவினோம். 

“நான் இன்று காலை பதிவேற்றிய டிவிட்டர் பதிவினை முற்றிலும் தவறாக திரிபுபடுத்தியுள்ளார்கள். முதலில் இது பஹ்ரைன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு என்பதை கூற விரும்புகின்றேன். எனினும் இது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு என்றே பலரும் புரிந்து கொண்டுள்ளார்கள். 

நான் பொதுவாக ஆய்வுகள் ஆராய்ச்சி முடிவுகள் என்பவற்றை டிவீட் செய்கின்றேன். எவ்வாறாயினும் தரவுகள் மற்றும் புள்ளி விபரங்கள் என்பவற்றை தவறாக புரிந்து கொண்டு ஒருசிலர் என்னை தவறாக மேற்கோள் காட்டியுள்ளார்கள். பொதுவாக நான் டிவீட் செய்வது  ஏனைய ஆராய்ச்சியாளர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காகும். ஏனையவர்களின் கருத்துக்களை நான் மிகவும் மதிக்கின்றேன். எவ்வாறாயினும் இதைப் பற்றி அறியாத எவரோ ஒருவர், நான் கூறியதாக “சினபோம்” தடுப்பூசி பயனற்றது என கூறியுள்ளார். நான் என்ன கூறுகின்றேன் என்பது புரியவில்லை என்றால் அதுபற்றிய முடிவுகளுக்கு செல்லாமல் இருக்க வேண்டும். ” எனக் கூறினார்.  

இதுபற்றி The Island பத்திரிகையில் வெளிவந்த செய்தி, இங்கே.. 

Neelika says her tweet has been misconstrued to run down Sinopharm vaccine

பின்னர் மீண்டுமொரு முறை குறுகிய இரண்டு வாரத்திற்குள்  பேராசிரியர் கூறியதாக தவறான கருத்தொன்றை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. 

கெட்வே பாடசாலையில் (Geteway College) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது பேராசிரியர் ஆற்றிய உறையின் ஒரு பகுதியை தவறாக மேற்கோள் காட்டி மீண்டும் ஒரு முறை தவறான ஒரு கருத்தை மக்களுக்கு ஊடகங்கள் வழங்கியிருந்தன. 

அந்த நிகழ்வு நடைபெற்றது செப்டம்பர் மாதம் மூன்றாம் திகதியாகும். 

Getway பாடசாலையின் உத்தியோகபூர்வ முகநூல் பகுதியில் அந்த நிகழ்வு பற்றி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த இரு பதிவுகள் இங்கே.. 

பேராசிரியர் நீலிகா அவர்கள் அந்நிகழ்விலே, கொவிட்-19 மற்றும் இலங்கையின் பாடசாலை கட்டமைப்புக்கு அதன்மூலம் உள்ள பாதிப்புகள், “Dab situation in Sri Lanka and the impact of schooling – Professor Neelika Malavige” என்ற தலைப்பில் அவர் அங்கே உரையாற்றியுள்ளார். 

பேராசிரியர் ஆற்றிய முழுமையான உரை : https://www.youtube.com/watch?v=op1tCk73qzc&t=352s

சமூக ஊடகங்கள் உட்பட பிரதான ஊடகங்கள் பலவும் பேராசிரியர் ஆற்றிய உரையை தவறாக கூறியிருந்தார்கள். குறிப்பாக பேராசிரியர் அவர்கள் பாடசாலைகளை மீண்டும் திறக்குமாறு கூறியதாக அந்த செய்திகள் அமைந்தன. 

அவ்வாறு வெளியிடப்பட்ட செய்திகளின் Screenshots.

எனவே தொடர்ந்து பேராசிரியரின் கருத்துக்கள் இவ்வாறு தவறாக சுட்டிக் காட்டப்படுவது தொடர்பில், அவர் தனது முகநூல் பகுதியில் ஒரு பதிவையும் இட்டிருந்தார். அதிலே தான் கூறுகின்ற கருத்துக்கள் மீண்டும் மீண்டும் தவறாக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு சொல்லப்படுவதாகவும் அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் அவர் கூறியிருந்தார். 

பேராசிரியர் இட்ட Facebook பதிவின் Screenshot, 

இதுபற்றி வெளியான ஊடக அறிக்கைகள்:

பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என நான் கூறவில்லை. 

இங்கே : https://www.lankadeepa.lk/news/%E2%80%98%E2%80%98%E0%B6%B4%E0%B7%8F%E0%B7%83%E0%B6%BD%E0%B7%8A-%E0%B7%80%E0%B7%92%E0%B7%80%E0%B7%98%E0%B6%AD-%E0%B6%9A%E0%B7%85-%E0%B6%BA%E0%B7%94%E0%B6%AD%E0%B7%94-%E0%B6%BA%E0%B7%90%E0%B6%BA%E0%B7%92-%E0%B6%B8%E0%B7%8F-%E0%B6%BA%E0%B7%9D%E0%B6%A2%E0%B6%B1%E0%B7%8F-%E0%B6%9A%E0%B7%85%E0%B7%9A-%E0%B6%B1%E0%B7%91%E2%80%98%E2%80%98/101-598774

இந்த சம்பவம் தொடர்பில் ஊடக அமைச்சர் டலஸ் அலகப்பெரும பேராசிரியர் நீலிகா மலவிகே விடம் மன்னிப்புக் கோரியிருந்தார் : https://island.lk/prof-malavige-says-media-misquoting-her-posting-lies/

Link மற்றும் Screenshot : 

பேராசிரியர் அவர்களுடைய Facebook பதிவின் அடிப்படையில் கடந்த எட்டு மாத காலங்களுக்குள் அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டிருப்பது சண்டே டைம்ஸ் ஆங்கில பத்திரிகை மட்டுமே ஆகும். அத்துடன் ரூபவாஹினி அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட ஹுஸ்ம என்ற நிகழ்ச்சிக்கு அவர் பங்கேற்றுள்ளார். இது தவிர்ந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் சமூக ஊடகங்கள் உட்பட பிரதான ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருப்பது தனது உரைகள் முகநூல் டுவிட்டர் பதிவுகள் என்பவற்றிலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் ஆகும். அவற்றில் பெரும்பாலானவை பிழையான கருத்துக்கள் எனவும் பேராசிரியர் பதிவிட்டிருந்தார். 

இதுபற்றி ஊடக அமைச்சர் கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது கூறிய கருத்துக்கள்: https://www.facebook.com/DepartmentOfGovernmentInformation/videos/603160394178349

இங்கே: 54 : 08 

இதுபற்றி நாம் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அத்தியட்சகர் டாக்டர் ரன்ஜித் படுவன்துடாவவிடம் வினவிய போது, வைத்திய அதிகாரிகளின் கருத்துக்களை திரிபுபடுத்தி அல்லது தவறாக மேற்கோள் காட்டி மக்கள் மத்தியில் பரப்புகின்றமை மிகவும் ஆபத்தானது எனவும் தொடர்ந்து இவ்வாறான போலியான செய்திகள் மக்களுக்கு சென்றடைவதால், சுகாதார விடயங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் எனவும் தெரிவித்தார்.

Share this post

Share on facebook
Share on twitter
Share on linkedin

Related Projects

Fact Check

FACT CHECK : 2022 ஆம் ஆண்டு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா செல்ல முடியுமா? முடியாதா?

உலகம் பூராகவும் வாழ்கின்ற முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணமே “ஹஜ்” ஆகும்.  அதற்கு அமைய வருடம் தோறும் …

Fact Check

FACT CHECK : Will Sri Lankan Muslims be able to go to Saudi Arabia in 2022 to perform Hajj?

Hajj is the annual pilgrimage to Mecca in Saudi Arabia by Muslims from all over the world. During the month …

Fact Check

FACT CHECK : ඉන්ධන බවුසරයෙන් තෙල් ගත්තේ කවුද?

රටේ පවතින ඉන්ධන හිඟය හේතුවෙන් මාස ගණනාවක සිට ඉන්ධන පිරවුම්හල් අසළ දිගු පෝලිම් දක්නට ලැබේ. එම තත්ත්වය මධ්‍යයේ මෝටර් රථයකින් …

Fact Check

FACT CHECK : අයර්ලන්තේ අයිති ලංකාවට ද ?

ශ්‍රී ලංකාවට පැමිණි එරෝෆ්ලොට් (Aeroflot) ගුවන් සමාගමට අයත් ගුවන් යානය සම්බන්ධයෙන් අපි මීට පෙර සවිස්තර කරුණු පැහැදිලි කිරීමක් කරන ලදි.  …

Fact Check

FACT CHECK : Has the Russian Aeroflot plane caused a diplomatic crisis?

The suspension of flight SU289 to Moscow resulted in public interest during the first week of June. The flight was …

Fact Check

FACT CHECK : ලෝක බැංකුව ශ්‍රී ලංකාවට ඩොලර් මිලියන 700ක් දෙනව ද ?

ඉදිරි මාස කිහිපය තුළ ලෝක බැංකුව ශ්‍රී ලංකාවට ඩොලර් මිලියන 700ක පමණක් මුදලක් ලබාදෙන බව මෙරට විදේශ කටයුතු අමාත්‍යාංශය ඉකුත් …