“கடந்த ஏப்ரலில் மாத்திரம் எங்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகை 129,000 இருந்தது” என ஆகஸ்ட் 25ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்த கருத்து பொய்யானது.
கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்திய எஸ்.பி. திஸாநாயக்க, காலி முகத்திடலை மையமாகக் கொண்ட போராட்டம் குறித்து குற்றம் சாட்டியதுடன் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொட்டு பற்றியும் கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்திருந்த கருத்துக்கள், இங்கே, இங்கே, இங்கே, இங்கே.
அவர் தெரிவித்த கருத்துக்கள் பரவலாக ஃபேஸ்புக்(Facebook) உட்பட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. அவற்றில் சிலவற்றின் ஸ்கிரீன் ஷாட்கள்(Screenshots) கீழே காட்டப்பட்டுள்ளன.


பாராளுமன்ற உறுப்பினர் எஸ் பி திசாநாயக்க கூறிய கருத்து கீழே.
“கடந்த ஏப்ரலில் எங்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகை 129,000 ஆக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் மட்டுமே. ரஷ்ய ஜனாதிபதி கூறினார், மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல வேண்டாம், இலங்கைக்கு செல்லுங்கள் என்று. ஆனால் கோல்ப்பேஸ் களியாட்டத்திற்கு பின் இவையாவும் சரிந்தன. இப்போது எங்கள் சுற்றுலா வணிகம் மீண்டும் தலைதூக்கி வருகிறது”
சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்த கருத்து தவறானது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 62,980 ஆகும். இங்கிருந்து, இங்கிருந்து
சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பான மாதாந்த தரவு அறிக்கைகளை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிடுகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கை இங்கே.
கடந்த ஐந்து ஆண்டுகளில், ஏப்ரல் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கீழே காட்டப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில், ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை | |
2018 | 180,429 |
2019 | 166,975 |
2020 | – |
2021 | 4,168 |
2022 | 62,980 |
இலங்கை மத்திய வங்கியினால் மாதாந்தம் வெளியிடப்படும் வெளிநாட்டுத் துறை செயற்பாடுகளில், சுற்றுலாப் பயணிகளின் வருகை பற்றிய தரவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள வருமானம் விபரங்கள் இங்கே காட்டப்பட்டுள்ளன. -இலங்கை மத்திய வங்கி.
அதுமட்டுமின்றி இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் சுற்றுலாத்துறையின் செயற்பாடுகள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை 2021. இங்கே
இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளை கருத்திற்கொண்டால், கடந்த ஐந்து வருடங்களில் (2018- 2022) சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளது.
மேலும், 2017 முதல் 2021 வரையிலான ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை, படிப்படியாகக் குறைந்துள்ளன.
முடிவுரை: ஏப்ரல் மாதத்தில் 129,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கூறிய கூற்று பொய்யானது.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.