கனடா நாட்டின் விசா லொத்தர் அதிர்ஷ்ட சீட்டு பற்றிய செய்திகள் போலியானவை.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவிற்கு குடிபெயர்வதற்காக வீசா லொத்தர் சீட்டு பற்றிய ஒரு செய்தி வாட்ஸ்அப் மூலம் பரிமாறப்பட்டது.
Canada resident card visa lottery என அதில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், கனடாவில் குடியேர விரும்புவோர், குறித்த பதிவில் காணப்படுகின்ற லிங்க் Link ஊடாக சென்று விண்ணப்பிக்குமாறும் அதிலே குறிப்பிடப்பட்டிருந்தது.
வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட குறித்த செய்தி.
அதிலே காணப்படுகின்ற லிங்கினை கிளிக் செய்ததும் இவ்வாறான ஒரு இணைய பகுதி தோன்றுகிறது.
எனவே இதுபற்றி நாங்கள் இலங்கைக்கான கனேடிய உயரிஸ்தானிகர் காரியாலத்திடம் வினவினோம்.
அப்போது அவர்கள் இந்த செய்தி முற்றிலும் போலி எனவும் இது பற்றி தமது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) மற்றும் ட்விட்டர்( Twitter) பகுதிகளில் விளக்கங்களை வழங்கியுள்ளதாகவும் கூறினார்கள்.
இலங்கைக்கான கனேடிய உயரிஸ்தானிகர் காரியாலயத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பகுதியில் காணப்படுகின்ற அறிவித்தல்,
குறித்த அறிவித்தலின் படி Resident Card Lottery Program அல்லது Visa Lottery Program ஊடாக கனடா செல்வதற்கான வாய்ப்புக்களோ அல்லது விசாவோ வழங்கப்படவில்லை.
இலங்கைக்கான கனேடிய உயரிஸ்தானிகர் காரியாலயத்தின் உத்தியோகபூர்வ Twitter தளம்,
எமது கணிப்பு
இது முற்றிலும் போலியானதுடன் மக்களின் தகவல்களை மிகவும் சூட்சமமான முறையில் பெற்றுக் கொள்வதற்கான ஒரு திட்டமாகும்.
தனிப்பட்ட நோக்கங்களுக்காக இவ்வாறு வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன links களில் உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை உட்செலுத்த முன் இரு முறை சிந்தித்து அவை உண்மையானவையா? என்பதை ஆராய்ந்து பாருங்கள். மேலும் உங்களுடைய நண்பர்களுடன் இவற்றைப் பகிர்ந்து கொள்ளும் போதும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டியதோடு உங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் (கடன் அட்டை) இலக்கங்களையோ அல்லது வங்கி கணக்கு விவரங்களையோ ஒரு போதும் இவ்வாறான இணைப்புகளில் (லிங்க்) பதிவேற்ற வேண்டாம்.
மேலும் இது போன்ற செய்திகள், குறிப்பாக பிரசித்தி பெற்ற வியாபார நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள், பரிசில்கள் அல்லது இதுபோன்ற வெளிநாட்டு தூதுவர் காரியங்கள் மூலம் வழங்கப்படுகின்ற விசா வாய்ப்புகள் போன்ற ஏதேனும் செய்திகளை கண்டதும் முதலில் அந்த இணைப்புகளுக்கு (லிங்ஸ்) உள்ளே செல்வதற்கு முன்னர் குறித்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையொ முகநூல் பகுதியையோ அல்லது ட்விட்டர் பகுதியையோ ஆராய்ந்து பாருங்கள். ஏனென்றால் குறித்த நிறுவனங்கள் அவ்வாறான கொடுப்பனவுகள் அல்லது பரிசில்கள் பற்றிய செய்திகளை முதலில் அவர்களுடைய உத்தியோகபூர்வ இணையதளங்களில் பதிவிடுவார்கள்.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொவிட் நெருக்கடி காரணமாக மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை பெரும்பாலும் இணையதளம் வாயிலாகவே மேற்கொள்கிறார்கள். எனவே அதனை உபயோகித்து பெரும்பாலான மோசடி கும்பல்கள் அல்லது தனிநபர்கள் உங்களுடைய தகவல்களை பெற்றுக் கொள்ள முற்படுவார்கள்.
எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களையும் குறித்த சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வழங்க வேண்டும். அப்போது தேவையான அத்தியாவசிய தகவல்களுக்கு புறம்பாக மேலதிகத் தகவல்களையும் வினவி இருப்பின் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து உங்களுடைய தகவல்களை வழங்குங்கள்.
மிக முக்கியமாக நீங்கள் யாருக்கு தகவல்களை வழங்குகிறீர்கள்? அவர்கள் யார் ? இது அவர்களுடைய உத்தியோகபூர்வ இணையத்தளமா ? என்பன பற்றி மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இணையத்தளம் வாயிலாக நடைபெறுகின்ற இவ்வாறான போலி சம்பவங்கள் பற்றி இதற்கு முன்னரும் நாங்கள் உண்மை சரி பார்ப்புகள் சில மேற்கொண்டுள்ளோம். அவற்றின் இணைப்புகள் கீழே,
- https://hashtaggeneration.org/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%95/
- https://hashtaggeneration.org/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2/
- https://hashtaggeneration.org/fact-check-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-60%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%a3/