காரணமாக நாடு முழுவதும் தொடர் மின்வெட்டுக்கள் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், சூரிய சக்தியில் இயங்கும் சாதனங்கள் குறித்து சமூக வலைத்தலங்களில் அதிகமாக பேசப்பட்டது.
பல சூரிய சக்தியில் இயங்கும் உள்நாட்டு / வெளிநாட்டு சாதனங்கள் / இயந்திரங்கள் பல தற்போது சந்தையிலும் இணையதளத்திலும் கிடைக்கின்றன.
இதற்கிடையில், சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரம் ஒன்று குறித்து Facebook பதிவொன்று கடந்த மார்ச் 3ஆம் திகதி ஃபேஸ்புக்கில் வெளியானது.
அதன் ஸ்கிரீன் ஷாட் (Screenshot) கீழே உள்ளது.

டீ டூல் என்ற முகநூல் கணக்கின் மூலமே மேற்கண்ட இடுகை முதலில் பகிரங்கப்படுத்தப்பட்டது.
இந்தக் கணக்கினை பார்த்தவுடனே அது ஒரு போலிக் கணக்கு என்பதை கண்டறியலாம்.
மேலும் குறித்த பதிவிலே தொலைபேசி இலக்கமொன்று குறிப்பிடப்பட்டிருந்ததுடன் அதனை நாங்கள் தொடர்பு கொண்டோம்.
அதன்போது அந்த தொலைபேசி இலக்கமானது பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்துடையது, என்பது எமக்கு உறுதிப்படுத்தப்பட்டது.
சமீப காலமாக, முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் மற்றும் தனிப்பட்ட முகவரிகளைப் பயன்படுத்தி சமூக வலைத்தலங்களில் போலி இடுகைகளை உருவாக்கும் வீதம் அதிகரித்து வருகின்றது.
அத்துடன் மேற்கண்ட முகநூல் பதிவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்திடம் நாம் வினவியபோது, இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது போலியான பதிவு ஒன்று எனவும் அவர் கூறினார்.
கடந்த காலங்களில், சில போலி கணக்குகள் மூலம் சமூக வலைதளங்களில் இதுபோன்ற போலி செய்திகள் பல வெளியிடப்பட்டன.
கருதுகோள்: சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரம் என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மேற்கண்ட பதிவு போலியானது.
இதற்கு முன்னர் ஹேஷ்டேக் தலைமுறையால் செய்யப்பட்ட உண்மைச் சரிபார்ப்பு.