FACT CHECK : ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் பெயர்களில் காணப்படுகின்ற டிக் டொக் கணக்குகள் போலியானவை.

தற்போது, ​​உலகின் சமூக ஊடகங்களில் Tik Tok சமூக ஊடக வலையமைப்பு ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. தொழிலதிபர்கள், நடிகைகள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பு மக்களும் டிக் டாக்கின் மீது மதி மயங்கி உள்ளார்கள். இவ்வாறான சூழலில் இலங்கையின் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் பெயர்களில் ஏராளமான போலியான Tik Tok கணக்குகள் Tik Tok தளத்தில் காணப்பட்டன. குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பல அரசாங்க அமைச்சர்களின் பெயரில் இதுபோன்ற பல போலி கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. 

ஏனைய சமூக ஊடக வளைத்தளங்களை போலவே, Tik Tok ஆனது சமூக ஊடக வளைத்தளங்களில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு சரிபார்ப்பு குறியீட்டினை (Verification – Blue Tick) வழங்குகிறது.

இலங்கையின் அரசியல்வாதிகள் மத்தியில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தமது மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை பேணுவதற்காக உத்தியோகபூர்வமான Tik Tok கணக்குகளை பேணுவதை அவதானிக்க முடிந்தது.

Tik Tok சமூக ஊடக வலையமைப்பைக் கண்காணித்தபோது, ​​பல்வேறு அரசியல்வாதிகளின் பெயரில் போலி கணக்குகள் பராமரிக்கப்படுவதை நாங்கள் அவதானித்தோம்.

எனவே பல முக்கிய அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து நாம் அவர்களின் பெயரில் அதிகாரப்பூர்வ  TIK TOK கணக்குகள் உள்ளதா அல்லது போலி கணக்குகள் உள்ளதா என நாம் ஆராய்ந்தோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் உத்தியோகபூர்வ Tik Tok கணக்கு எதுவும் இல்லை என்பதை நாம் அவதானித்துள்ளோம்.

கோடாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இணையத்தளம்,

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இணையதளம்.

ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்.

இந்த இணையதளங்கள் எதிலுமே  அவர்களின் டிக்டோக் கணக்கு பற்றிய விவரங்கள் எதுவும் காணப்படவில்லை. 

இதுபற்றி ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவை தொடர்பு கொண்டு வினவியபோது, ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் உத்தியோகபூர்வ Tik Tok கணக்கு எதுவும் இல்லை என தெரிவித்தார். Tik Tok சமூக வலைத்தளத்தின் அவதானிப்புகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் பல போலி கணக்குகள் இருப்பதை அவதானிக்க முடிந்தது. 

அவற்றில் சிலவற்றின் Screen Shots கீழே உள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் உள்ள போலி Tiktok கணக்குகளை பின்வரும் இணைப்புகள் மூலம் அணுக முடியும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் உத்தியோகபூர்வ Tik Tok கணக்கு எதுவும் இல்லை என்பதுடன் அவரது பெயரிலும் பல போலியான கணக்குகள் இருப்பதை அவதானித்தோம்.

மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு.

இந்த இணையதளங்கள் எதிலுமே பிரதமரின் Tik Tok  கணக்கு தொடர்பான விபரங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை.

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் உத்தியோகபூர்வ Tik Tok கணக்கு எதுவும் இல்லை என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அவற்றில் சிலவற்றின் Screen Shots கீழே உள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் உத்தியோகபூர்வ டிக் டொக் கணக்கு ஒன்றினை வைத்திருப்பதை அவதானித்தோம்.

மேலும் குறித்த டிக் டொக் கணக்கிலே எதிர்க்கட்சித் தலைவரின் இணையதளத்திற்கான இணைப்பொன்றும் வழங்கப்பட்டிருந்தது. 

அதன்  Screen Shot கீழே, 

எதிர் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரில் உத்தியோகபூர்வ டிக்டோக் கணக்குகள் ஏதேனும் பராமரிக்கப்படுகின்றதா? என நாங்கள் ஆராய்ந்தோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வ Tik Tok கணக்கு ஒன்றினை பேணுவதாகவும், ஏனைய சமூக ஊடகங்களுடன் ஒப்பிடுகையில் அதன் புதுப்பிப்புகள் குறைவாக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக இணைப்பாளர் எங்களிடம் தெரிவித்தார்.

மேலும் மேற்கண்ட டிக்டோக் கணக்கு சஜித் பிரேமதாசவின் உத்தியோகபூர்வ டிக்டோக் கணக்கு என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

சஜித் பிரேமதாசவின் பெயரில் உள்ள மற்றைய அனைத்து டிக்டோக் கணக்குகளும் போலியானவை என்றும் அவர் எங்களிடம் கூறினார்.

அத்துடன் சஜித் பிரேமதாசவின் பெயரிலும் போலியான டிக் டொக் கணக்குகள் பேணப்படுவதை நாம் அவதானித்துள்ளோம்.

அவற்றின் சில Screen Shots கீழே, 

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் (ஜே.வி.பி. தலைவர்) பெயரில் உத்தியோகபூர்வ டிக்டோக் கணக்கு உள்ளதா என நாம் வினவினோம்.

அதன்போது அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரில் உத்தியோகபூர்வ Tik Tok கணக்கு எதுவும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) ஊடக இணைப்பாளர் எமக்கு தெரிவித்தார்.

மேலும் அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரில் போலியான  Tik Tok  கணக்குகள் பேணப்படுவதையும் நாம் அவதானித்தோம். 

அவற்றில் சில Screen Shots கீழே உள்ளன.

முடிவுரை;  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களில் எந்தவிதமான உத்தியோகபூர்வ Tik Tok கணக்குகளும் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறமதாசவின் பெயரில் உத்தியோகபூர்வ Tik Tok கணக்கொன்று உள்ளதுடன் அதிலே அவரது இணையத்தளத்திற்கான இணைப்பொன்றும் உள்ளது. மேலும், அவரது பெயரில் உள்ள மற்றைய கணக்குகள் யாவும் போலியானவை.

இது போன்ற போலி சமூக ஊடக கணக்குகளை Tik Tok இல் மட்டுமின்றி ஏனைய சமூக ஊடக தளங்களிலும் காணலாம். அவை உறுதிப்படுத்தப்பட்ட / உத்தியோகபூர்வமான கணக்குகள் (Verified Accounts / Pages) அல்லது அவர்களின் பெயர்ககளில் வேறு நபர்களால் பராமரிக்கப்படுகிறதா அல்லது அவர்களுக்கு சொந்தமானதா என்பதைக் கண்டறிய எளிய உபாயங்களை  பயன்படுத்தலாம். இது சமூக ஊடக வலைப்பின்னல்களால் எளிதாக்கப்படுகிறது. குறிப்பாக அதிகாரப்பூர்வமான நீல நிற டிக் குறியீடு (Blue colour Tick – Blue Tick – Blue Badge) அதனை அறிவதற்கான  வழிமுறையாகும். கூடுதலாக,தெரிந்தவர்கள்(நண்பர்கள் / பரஸ்பர நண்பர்கள்) மற்றும் தொடர்புடைய கணக்கை விரும்பிய அல்லது பின்தொடர்பவர்களை நீங்கள் சரி பார்த்துக்கொள்ளவதன் மூலமும் அறிந்து கொள்ளலாம்.

சரிபார்க்கப்பட்ட Tik Tok கணக்கை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும் இங்கேTik Tok கணக்கை எவ்வாறு சரிபார்ப்பது

ஏனைய சமூக ஊடக வளைத்தளங்களை போலவே, Tik Tok ஆனது சமூக ஊடக வளைத்தளங்களில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு சரிபார்ப்பு குறியீட்டினை (Verification – Blue Tick) வழங்குகிறது.

இலங்கையின் அரசியல்வாதிகள் மத்தியில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தமது மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை பேணுவதற்காக உத்தியோகபூர்வமான Tik Tok கணக்குகளை பேணுவதை அவதானிக்க முடிந்தது.

Tik Tok சமூக ஊடக வலையமைப்பைக் கண்காணித்தபோது, ​​பல்வேறு அரசியல்வாதிகளின் பெயரில் போலி கணக்குகள் பராமரிக்கப்படுவதை நாங்கள் அவதானித்தோம்.

எனவே பல முக்கிய அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து நாம் அவர்களின் பெயரில் அதிகாரப்பூர்வ  TIK TOK கணக்குகள் உள்ளதா அல்லது போலி கணக்குகள் உள்ளதா என நாம் ஆராய்ந்தோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் உத்தியோகபூர்வ Tik Tok கணக்கு எதுவும் இல்லை என்பதை நாம் அவதானித்துள்ளோம்.

கோடாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இணையத்தளம்,

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இணையதளம்.

ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்.

இந்த இணையதளங்கள் எதிலுமே  அவர்களின் டிக்டோக் கணக்கு பற்றிய விவரங்கள் எதுவும் காணப்படவில்லை. 

இதுபற்றி ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவை தொடர்பு கொண்டு வினவியபோது, ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் உத்தியோகபூர்வ Tik Tok கணக்கு எதுவும் இல்லை என தெரிவித்தார். Tik Tok சமூக வலைத்தளத்தின் அவதானிப்புகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் பல போலி கணக்குகள் இருப்பதை அவதானிக்க முடிந்தது. 

அவற்றில் சிலவற்றின் Screen Shots கீழே உள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் உள்ள போலி Tiktok கணக்குகளை பின்வரும் இணைப்புகள் மூலம் அணுக முடியும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் உத்தியோகபூர்வ tik Tok கணக்கு எதுவும் இல்லை என்பதுடன் அவரது பெயரிலும் பல போலியான கணக்குகள் இருப்பதை அவதானித்தோம்.

மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு.

இந்த இணையதளங்கள் எதிலுமே பிரதமரின் Tik Tok  கணக்கு தொடர்பான விபரங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை.

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் உத்தியோகபூர்வ Tik Tok கணக்கு எதுவும் இல்லை என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் பல போலியான கணக்குகள் உள்ளதையும் அவதானித்தோம்.

அவற்றில் சிலவற்றின் Screen Shots கீழே உள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் உத்தியோகபூர்வ டிக் டொக் கணக்கு ஒன்றினை வைத்திருப்பதை அவதானித்தோம்.

மேலும் குறித்த டிக் டொக் கணக்கிலே எதிர்க்கட்சித் தலைவரின் இணையதளத்திற்கான இணைப்பொன்றும் வழங்கப்பட்டிருந்தது. 

அதன்  Screen Shot கீழே, 

எதிர் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரில் உத்தியோகபூர்வ டிக்டோக் கணக்குகள் ஏதேனும் பராமரிக்கப்படுகின்றதா? என நாங்கள் ஆராய்ந்தோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வ Tik Tok கணக்கு ஒன்றினை பேணுவதாகவும், ஏனைய சமூக ஊடகங்களுடன் ஒப்பிடுகையில் அதன் புதுப்பிப்புகள் குறைவாக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக இணைப்பாளர் எங்களிடம் தெரிவித்தார்.

மேலும் மேற்கண்ட டிக்டோக் கணக்கு சஜித் பிறமதாசவின் உத்தியோகபூர்வ டிக்டோக் கணக்கு என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

சஜித் பிரேமதாசவின் பெயரில் உள்ள மற்றைய அனைத்து டிக்டோக் கணக்குகளும் போலியானவை என்றும் அவர் எங்களிடம் கூறினார்.

அத்துடன் சஜித் பிரேமதாசவின் பெயரிலும் போலியான டிக் டொக் கணக்குகள் பேணப்படுவதை நாம் அவதானித்துள்ளோம்.

அவற்றின் சில Screen Shots கீழே, 

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் (ஜே.வி.பி. தலைவர்) பெயரில் உத்தியோகபூர்வ டிக்டோக் கணக்கு உள்ளதா என நாம் வினவினோம்.

அதன்போது அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரில் உத்தியோகபூர்வ Tik Tok கணக்கு எதுவும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) ஊடக இணைப்பாளர் எமக்கு தெரிவித்தார்.

மேலும் அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரில் போலியான  Tik Tok  கணக்குகள் பேணப்படுவதையும் நாம் அவதானித்தோம். 

அவற்றில் சில திரைக்காட்சிகள் கீழே உள்ளன.

முடிவுரை;  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களில் எந்தவிதமான உத்தியோகபூர்வ Tik Tok கணக்குகளும் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறமதாசவின் பெயரில் உத்தியோகபூர்வ Tik Tok கணக்கொன்று உள்ளதுடன் அதிலே அவரது இணையத்தளத்திற்கான இணைப்பொன்றும் உள்ளது. மேலும், அவரது பெயரில் உள்ள மற்றைய கணக்குகள் யாவும் போலியானவை.

இது போன்ற போலி சமூக ஊடக கணக்குகளை Tik Tok மட்டுமின்றி பிற சமூக ஊடக தளங்களிலும் காணலாம். அவை (Verified Accounts / Pages) அல்லது அவர்களின் பெயர்களைக் கொண்ட நபர்களால் பராமரிக்கப்படுகிறதா அல்லது அவர்களுக்கு சொந்தமானதா என்பதைக் கண்டறிய எளிய உபாயங்களை  பயன்படுத்தலாம். இது சமூக ஊடக வலைப்பின்னல்களால் எளிதாக்கப்படுகிறது. குறிப்பாக அதிகாரப்பூர்வமான நீல நிற செக் மார்க் (Blue colour Tick – Blue Tick – Blue Badge) அதற்கான வசதியாகும். கூடுதலாக, உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் (நண்பர்கள் / பரஸ்பர நண்பர்கள்) மற்றும் தொடர்புடைய கணக்கை விரும்பிய அல்லது பின்தொடர்பவர்களை நீங்கள் சரிபார்க்கலாம்.

சரிபார்க்கப்பட்ட Tik Tok கணக்கை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும் இங்கே

Tik Tok கணக்கை எவ்வாறு சரிபார்ப்பது

Share this post

Related Projects

Fact Check

ආදායම් බදු ගෙවිය යුත්තේ කොහොම ද?

ආදායම් බදු අය කිරීම් සම්බන්ධයෙන් තවමත් රට තුළ විශාල කතාබහක් ඇති වී තිබෙන අතර රට පුරා විවිධ පාර්ශව විරෝධතා ද පවත්වමින් …

Fact Check

අදින් පසුව රටේ උද්‌ඝෝෂණ පැවැත්වීම තහනම් ද ?

‘අදින් පසු උද්ඝෝෂණ රටේ තහනම්, ජනපති පාර්ලිමේන්තුවේ දී කියයි’ යන සිරස්තලය සමාජ මාධ්‍ය ඔස්සේ ප්‍රවෘත්ති සංසරණය වන අයුරු ඉකුත් දින …

Fact Check

A tsunami threat to Sri Lanka?

A message issued under the heading “Be aware of tsunami threat” was observed circulating on WhatsApp during the past couple …

Fact Check

இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா ?

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் சுனாமி அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்ற தலைப்பில் ஒரு கடிதம் வலம் வருவதைக் காண முடிந்தது. 2023 …

Fact Check

ශ්‍රී ලංකාවට සුනාමි අවදානමක් ද ?

“සුනාම් අවදානම පිළිබඳව විමසිලිමත් වීම” යන ශීර්ෂය යටතේ නිකුත් කළ පණිවුඩයක් වට්ස්ඇප් (WhatsApp) ඔස්සේ සංසරණය වෙමින් තිබෙන අයුරු ඉකුත් පැය …

Fact Check

රට යද්දිත් බදු ගෙවන්න ඕනේ ද ?

“කටුනායකින් රට ගියොත් ඩොලර් 60ක බද්දක්” යනුවෙන් දැක්වෙන ප්‍රවෘත්තියක් සමාජ මාධ්‍ය තුළ සංසරණය වන ආකාරය ජනවාරි මස දෙවැනි හා තෙවැනි …