இலங்கையின் அரச தொலைக்காட்சியான ரூபவாஹினியின் உத்தியோகபூர்வ சின்னத்தில் காணப்பட்ட தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி வெளியான இத்த ட்விட்டர் செய்தியால் இந்த உரையாடல் தூண்டப்பட்டது.
அந்த ட்விட்டர் செய்தியின் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது. அந்த ட்விட்டர் செய்திக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ட்விட்டரில் மட்டுமின்றி பேஸ்புக்கிலும் இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
இது தொடர்பாக மேலும் சில ட்விட்டர் (Twitter) செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

முகநூலிலும் இது தொடர்பான உரையாடல்கள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா மிரர் (Sri Lanka Mirror) இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை. இங்கே
இது தொடர்பாக நியூஸ் 19 இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி. இங்கே
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ஷவிடம் வினவியபோது, உத்தியோகபூர்வ சின்னத்தில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சிங்கள ஊடகம் ரூபவாஹினி என்றும், நேத்ரா அலைவரிசை தமிழ் ஊடக அலைவரிசை என்றும், சனல் I அலைவரிசை ஆங்கில ஊடகம் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சோனாலா குணவர்தனவிடம் வினவினோம்.
“தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்தையும் நீக்கிவிட்டோம்.
இது மொழி சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. ரூபவாஹினியை டிஜிட்டல் மயமாக்குகிறோம். டிஜிட்டல் மீடியாவில் இந்த லோகோவைப் பார்க்கும்போது, இந்த மொழிகள் எதுவும் உங்களுக்குத் தெரியாது.
இதனால் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம். இதற்கு இயக்குநர் குழுவின் ஒப்புதலும் கிடைத்தது. இது தொடர்பில் அமைச்சருக்கும் அமைச்சுக்கும் அறிவித்துள்ளோம்.
எங்களிடம் மும்மொழிகளிலுமான அலைவரிசைகல் உள்ளன. எனவே, சிங்கள ஊடகத்தில் ரூபவாஹினியும், தமிழ் ஊடகத்தில் நேத்ரா அலைவரிசையும், ஆங்கில ஊடகத்தில் சேனல் I அலைவரிசையும் செயல்படுத்தப்படும்.
இது தொடர்பாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு.சந்தன செனவிரத்னவிடமும் வினவினோம்.
அவரது பதில் பின்வருமாறு.
“தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலமும் நீக்கப்பட்டுள்ளது. இது பிப்ரவரி 22ம் திகதி முதல் செயல்படும்.
நாங்கள் ஒருசில மாற்றங்களைச் செய்து வருகின்றோம். மொழி அடிப்படையில் எங்களிடம் மூன்று சேனல்கள் உள்ளன. சிங்களத்தில் ரூபவாஹினியையும், தமிழில் நேத்ராவையும், ஆங்கிலத்தில் சேனல் ஐயையும் தொடங்குவோம் என்று நம்புகிறோம்.
அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த சேனல்கள் அனைத்தையும் குறித்த மொழி மூலம் மாத்திரமே பிரத்தியேகமாக தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
உரிய கவரேஜ் இல்லாததால், சேனல் I மற்றும் நேத்ரா ஆகிய அலைவரிசைகள் தற்போது இணைந்தே செயல்படுகின்றன.
ரூபவாஹினி அலைவரிசையின் 2022 பெப்ரவரி மாதம் 21 இரவு 8 மணி செய்தி ஒளிபரப்பு
ரூபவாஹினி அலைவரிசையின் 2022 பெப்ரவரி மாதம் 22 மதியம் 12.30 செய்தி ஒளிபரப்பு
ரூபவாஹினி அலைவரிசையின் 2022 பெப்ரவரி மாதம் 22 இரவு 6.50 செய்தி ஒளிபரப்பு
நேத்ரா அலைவரிசை – நேத்ரா டிவி – நேத்ரா டிவி சேனலின் இணையதளம்
முடிவுரை: ரூபவாஹினி அலைவரிசை தனது உத்தியோகபூர்வ சின்னத்தில் இருந்து ஆங்கிலத்தையும் தமிழையும் நீக்கிவிட்டதாக கூறப்படுவது உண்மை.
இது போன்ற நிகழ்வுகளைப் பற்றி ஹேஷ்டேக் தலைமுறை நாங்கள் செய்த முந்தைய உண்மை சரிபார்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.