உலகம் பூராகவும் வாழ்கின்ற முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணமே “ஹஜ்” ஆகும்.
அதற்கு அமைய வருடம் தோறும் துல்ஹஜ் மாதத்தில் (இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில்) இலங்கையில் வாழும் முஸ்லிம்களும் இந்த யாத்திரைக்காக சவுதி அரேபியாவை நோக்கி செல்கின்றார்கள். கடந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த ஹஜ் யாத்திரைக்கு செல்வதில் ஒரு சில சிக்கல்கள் காணப்பட்டன.
எனினும் இந்த ஆண்டு சவுதி அரசாங்கம் 1585 இலங்கை யாத்ரீகர்களுக்கு ஹஜ் செய்வதற்கான ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.
மேலும் கோவிட் தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் செய்வதற்கான அனுமதி கிடைப்பது 65 வயதுக்கு குறைந்தவர்களுக்கே ஆகும். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து ஹஜ் செய்வதற்காக செல்பவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசிகள் அனைத்தையும் பெற்றிருக்க வேண்டியதுடன் சவுதி அரேபியாவில் நுழையும்போது அன்டிஜன் பரிசோதனை கட்டாயமாக அனைவரும் செய்து கொள்ள வேண்டும், என சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ் கடமைக்காக உலகளாவிய ரீதியில் இருந்து ஒரு மில்லியன் யாத்ரீகர்களுக்கு சவுதி அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.aljazeera.com/news/2022/4/9/saudi-arabia-sets-limit-of-1m-hajj-pilgrims-this-year
அண்மைய மாதங்களில் இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அதீத பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கம் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லுகின்ற “டொலர்” பெறுமானங்களை குறைத்துள்ளது.
எனவே அதற்கமைய ஜூன் மாதம் முதலாம் திகதி இம்முறை இலங்கையில் இருந்து எவரும் ஹஜ் யாத்திரை செல்ல மாட்டார்கள் என, தேசிய பேரவை சுற்றுலா அமைப்பு, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் உட்பட அமைப்புக்கள் சில ஏகமனதாக முடிவு எடுத்து இருந்தார்கள்.
https://www.virakesari.lk/article/128607
எனினும் பின்னர் ஜூன் மாதம் ஏழாம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதிலே இவ்வருடம் இலங்கையிலிருந்து 1585 யாத்ரீகர்களுக்கு ஹஜ் செய்வதற்கான ஒதுக்கீட்டை சவுதி அரேபியா அரசாங்கம் வழங்கி உள்ளதாகவும் அதற்கான பதிவுகளை உடனடியாக செய்து கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இதனை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஹஜ் பிரிவினை தொடர்பு கொண்டோம். அதன் போது எம்மை தொடர்பு கொண்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர் M I M முனீர், ஹஜ் யாத்ரீகர்களுக்கு தேவையான அளவு டொலர் பெருமானம் இல்லாமை மற்றும் மிகப்பெரிய ஒரு தொகை வேண்டும் என அரச தரப்பு கூறியதன் காரணமாக நாங்கள் முதலில் ஹஜ் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. எனினும் அதன் பின்னர் 1500 டொலர் என்ற இறுதி முடிவுக்கு வந்ததன் காரணமாக ஹஜ் முகவர்களுடன் இது பற்றி கலந்தாலோசித்து நாங்கள் இறுதியான முடிவு ஒன்றிற்கு வந்தோம். அதற்கமைய 1585 பேருக்கு இம்முறை ஹஜ் செய்வதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதைவிட அவர்கள் 65 வயது குறைந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் பதிவு செய்யப்பட்ட ஹஜ் பயண முகவர்கள் இன் பட்டியல் ஒன்றையும் நாங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். இதுவரை(17) எமக்கு கிட்டத்தட்ட 950 பேர் ஹஜ் பயணத்தை உறுதிப்படுத்தி உள்ளார்கள், எனத் தெரிவித்தார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் இதுவரை 73 ஹஜ் பயண முகவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
https://muslimaffairs.gov.lk/ta/news/english-list-of-registered-hajj-travel-operators-2022/
2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஹஜ் பயண முகவர்களின் பட்டியல்.
https://muslimaffairs.gov.lk/wp-content/uploads/2022/06/Registered-Hajj-Operator-2022-2.pdf
இம்முறை இலங்கையிலிருத்து ஹஜ் யாத்திரை செல்வதற்காக 1585 பேருக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. ஹஜ் யாத்திரை செல்ல இருப்பவர்கள் 1500 டாலர்களை வெளிநாட்டில் இருந்து இலங்கையில் குறித்தொதுக்கப்பட்ட டொலர் கணக்கிற்கு மாற்ற வேண்டும். மேலும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தமது பதிவுகளை மேற்கொண்டு யாத்திரைக்கு நமக்கு விருப்பமான ஹஜ் முகவர்களை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.