(தெற்கு மற்றும் தென்கிழக்காசிய குடியியல் சமூகத்துக்கான வழிகாட்டி.)
URL: https://engagemedia.org/2022/internet-shutdowns-south-southeast-asia/
இன்றைய நவீன சமூகத்தில் இணைய அணுக்கலானது அன்றாடவாழ்வில் இன்றியமையாத அங்கமாக உள்ளது. வணிகம் மற்றும் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வது முதற் கொண்டு மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது மற்றும் நிகழ்நிலைக் கற்றல்கள் இணையவழிமூலமே இடம்பெறுகின்றது. அத்துடன் இணையத்துக்கான அணுகல் முடக்கப்பட்டால்- சில தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் சமூக அமைதி ஏற்பட்டுள்ள காலங்களில் உள்ளதைப் போல் – மக்களின் வாழ்க்கைமிகக் கணிசமான அளவு சீர்குலைக்கப்படும்.
இணைய முடக்கம் என்றால் என்ன, அரசாங்கம் அல்லது பிற வன்முறையில் ஈடுபடுவபர்கள் அவற்றைத் அமுல்படுத்தினால் என்ன நடக்கும்? இணைய அனுகலை முழுவதாக துண்டித்தல் என்பதைவிட அதிகமான விடயங்கள் இதன் வரவிலக்கணத்திற்குள் காணப்படுகின்றன. இணைய முடக்கமானது குறித்த ஒரு வலையமைப்பினத் தடைசெய்வதிலிருந்து இணைய வேகத்தினை மட்டுப்படுத்தல் வரை காணப்படுகிறது. இணைய முடக்கங்களின் பல்வேறு வகையினைனையும் அவை தொழிநுட்பரீதியாக எவ்வாறு செய்யப்படுகின்றது அறிந்து விளங்கி வைத்திருத்தலானது இவ்வாறான உரிமை மீறல்கள் தெடர்பான கவனத்தையீர்ப்பதிலும் இதனை புரிபவர்களினைப் பொறுப்பாக்குவதற்கும் ஒரு சிவில் சமூகத்தில் முக்கியமான ஒன்றாகும்.
இக் கட்டுரையானது பல்வேறு வகையான இணையமுடக்கங்கள், அவை எவ்வாறு தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகின்றன மற்றும் இணையத்திற்கான இலவச அணுகலை நிலைநிறுத்துவதற்குச் சிவில், சமூகக் குழுக்கள் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதை விளக்குகின்றது.
கட்டுக்கதைகள் மற்றும் தவறான எண்ணக்கருக்கள்.
இணைய முடக்கமானது இணையத்தனிக்கை அல்லது முழுமையான தகவல்களினை அணுக இயலாதவாறு ஒடுக்குவதுடன் தொடர்புடையதாக இருக்கும். #KeepItOn அமைப்பினடிப்படையில் இணைய முடக்கம் என்பது “இணையத்தளம் அல்லது இலத்திரனியல் தொடர்புகளை வேண்டுமென்றே சீர்குலைத்து ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு அல்லது மக்கள் குழுவினருக்கு அல்லது ஓர் குறிப்பிட்ட இடத்திற்குள் தகவல் பரிமாற்றத்தின்மீது மீது அடிக்கடி கட்டுப்பாட்டைச் செலுத்தி அவற்றை பயன்படுத்த முடியாதவாறு, அனுகமுடியாதவாறு ஆக்குவதாகும்” . இந்த வரையறையானது இணைய முடக்கமென்பது வெறுமனே இணைப்புகளை துண்டித்தலை விட அதிகமானது என்பதனை காட்டுகின்றது: தொலைபேசி சேவையில் இடையூறுகள் அல்லது இணைப்பினைத் துண்டித்தல், வேகத்தைக் குறைத்தல், இவற்றையும் தாண்டி சில தளங்களைத் தேர்ந்தெடுத்துத் தடுப்பது அனைத்துமே இணையமுடக்கமாக கருதப்படுகின்றது.
இணையத் தணிக்கை எனது எப்படி? இணைய முடக்கமானது இணையத் தணிக்கையின் வடிவங்களாகக் (ஏனென்னில் வலையமைப்பு இடைநிறுத்தல்களானது மக்கள் தமது பதிவுகளினை இடுவதிலிருந்தும் நிகழ்நிலையில் தம்மை வெளிப்படுத்துவதிலிருந்தும் மட்டுப்படுத்துகின்றது.) கருதப்பட முடியும். இணையத்தணிக்கையின் அனைத்து நிகழ்வுகளும் இணையமுடக்கமாக கருதப்படுவதில்லை. Access Now இன் அடிப்படையில் கூறின் வேறுபாடானது முடக்கப்பட்டுள்ள வலைத்தளத்தின் பிரதான நோக்கம் என்ன என்பதைப்பொறுத்தே காணப்படுகின்றது. மேற்கூறிய வரையறையானது இலத்திரனியல் தகவல் தொடர்புகளின் இடைநிறுத்தல்களை எடுத்துக் காட்டுக்கின்றது; வாட்சப், முகநூல் மற்றும் கீச்சகம் போன்ற பல வழித்தகவல் தொடர்புகளுக்காக வடிவமைக்கப்பட்ட தளங்கள் தடுக்கப்பட்டால் அவை இணையமுடக்கமாகவே கருதப்படும். ஆனால் செய்தி வெளியிடும் இணையத்தளங்கள் போன்ற முதன்மை உள்ளடக்கத்தை வெளியிடும் தளங்கள் முடக்கப்படும்போது இவை இணையத் தணிக்கையின் வடிவமாவே கருதப்படும்.
இணைய முடக்கத்தனை அமுல்படுத்த கூறப்படும் பொதுவான நியாயங்கள்.
தணிக்கை மற்றும் தகவல் கட்டுப்பாடு என்பதற்குப் புறம்பாக ஒவ்வொரு நாட்டிலும் இணைய முடக்கத்துக்கான குற்றவாளிகள் இதனை அமுல்படுத்துவதற்கு பல்வேறுபட்ட நியாயங்களை முன்வைக்கின்றனர். எனவே AccessNow இனுடைய முன்னாள் கொள்கை வடிவமைப்பாளர் டெனிஸ் துரு அய்டின் அவர்கள் மு சில பொதுவான அரச சாக்குகளைப் பட்டியலிட்டுள்ளார்;..
- தேசியபாதுகாப்பு: இணையமுடக்கம் அல்லது நிறுத்தம் செய்வதற்கான மிகவும் பொதுவான ஒரு காரணம் ஆகும். இதில் முரண்பாடான விடயம் என்னவென்றால் மக்கள் இணைய அல்லது வளைத்தளங்களை அணுகல் செய்யாத போது மிகவும் பாதுகாப்பாக உணரமாட்டார்கள் அத்துடன் அவர்களிற்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் இடையிலான தொடர்புதான் துண்டிக்கப்படுகின்றது.
- தேர்தல்: தேர்தல் காலத்தில் தேர்தல் பற்றிய போலியான தகவல்கள் விடயங்கள் பரவுவதை தடுப்பதற்காக இணைய முடக்கம் செய்யப்படுகிறது. நடைமுறையில் இது தேர்தல் கண்காணிப்பு, ஊடகவியலாளர்களது செயற்பாடடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கைகளினை அவதானிப்பவர்கள் போன்றோருக்கு தடங்கல் ஏற்படுத்துவதாகவே அமையும்.
- எதிர்ப்புப் போராட்டம்: போராட்டங்களின் போது இணைய முடக்கமானது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காகக் கூறி அமுல்ப்படுத்தப்படுகின்றது.
- ஆனால் இதன்போது முடக்கங்கள் தடைகளினைச் செய்வதனால் மக்கள் உண்மையான கள நிலவரம் என்ன என்பதனை அறிய இயலாது செய்கின்றது.
- பாடசாலைப் பரீட்சை – ஏமாற்றுமுயற்சகளை கட்டுப்படுத்துவதற்கு செயற்படுத்தப்பட்டாலும் விகிதாசாரத்தின் அடிப்படைகளில் இணையமுடக்கமானது கட்டுப்படுத்த எண்ணியவர்களிலும் பார்க்க மில்லியன் கணக்கான ஏனையவர்களை பாதிக்கின்றது.
- அரச அதிகாரிகளின் வருகை – அரசாங்க அதிகாரிகள் அல்லது வெளிநாட்டு அரசியல் தலைவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க அரசாங்கம் இணையமுடக்கம் செய்கின்றுது. ஆனால் அது தகவல்களை அணுகுவதற்கான மக்களின் உரிமைகளில் தலையிடுகின்றது.
சமீபகாலமாக பல தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள அரசாங்கங்களால் இந்தச் சாட்டுகள் அதிகமாகி சொல்லப்பட்டு வருகின்றன. Access Now உடைய அறிக்கையின்படி இந்த இரண்டு பிராந்தியங்களும் இணைய முடக்கத்தில் சில முக்கிய குற்றவாளிகளின் இருப்பிடமாக உள்ளன. 2021ம் ஆண்டில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா, இந்தோனேசியா மியன்மார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 128 இணைய முடக்கங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனினும் இதனுடைய உண்மையான புள்ளி விபரங்கள் அதிகமாகவே காணப்படக்கூடும்.
இணைய முடக்க தரவரிசையில் இந்தியாவானது முதலிடத்தில் தடைந்துகொண்டிருக்கிறது. 2012 ஆண்டு முதல் குறைந்தபட்சம் 665 இணைய முடக்கங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள. ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பினைத் தொடர்ந்து 2021 ம் ஆண்டில் குறைந்தபட்சம் 15 முடக்கங்களையாவது விதித்துள்ள மியன்மாரும் முதன்மையான குற்றவாளிகளில் ஒன்றாகும். பொது எதிர்ப்புகளுக்கு மத்தியில் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய அணுகலைத் தடுக்க இராணுவ ஆட்சிக்குழு உத்தரவிட்டது மற்றும் சமீப ஆண்டுகளில் மெய்நிகர் தனியார் வலைத்தளங்களின்பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஒரு கொடூரமான நடவடிமுறைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில், மேற்கு பப்புவாவில் 2019இல் பல முடக்கங்கள் பதிவுசெய்யப்பட்டமை குறித்து தலைப்புச் செய்திகள் பல உருவாகியது. மேலும் 2021 ல் சமூக அமைதியின்மைக்கு மத்தியில் இணைய அணுகலைத் தடுப்பது சட்டபூர்;வமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பங்களாதேசில் போராட்டங்களைத் தடுக்கவும் , மதப்பதற்றங்கள் மீதான உறுதியற்றதன்மையை கட்டுப்படுத்தவும், பொதுத்தேர்தல் தொடர்பான வதந்திகள் மற்றும் பிரச்சாரங்களைத் தடுக்கவும் இணையமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற இணையத் தடங்கல்கள் பாகிஸ்தானிலும் குறிப்பாக அதனது பரபரப்பான எல்லை பிரதேசங்களிலும் கூட பதிவாகியுள்ளன. பிலிப்பைன்ஸில் 2015 இல் பாப்பாண்டவர் வருகை மற்றும் பிற விழாக்களின் போது, இலங்கையில் அன்மையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின்போதும் இவ்வாறான இணைய முடக்கம் ஏற்பட்டது.
இணையம் எவ்வாறு செயற்படுகின்றது.
இணைய முடக்கத்தின் தொழிலுட்;ப விடயங்களினை நோக்க முன்னர் இணையம் எவ்வாறு செயப்படுகின்றது என்பதனை புரிந்துகொள்வது அவசியமானதாகும். ஒக்ஸ்போர்ட் அகராதியானது, இணையத்தை “நியமமான தொடர்பாடல் நெறிமுறைகளினைப் பயன்படுத்தி ஒன்றுடனொன்று இணைக்கப்பட்ட கணணிகளினை உள்ளடக்கிய, தொடர்பாடல் வசதிகள் மற்றும் பலதரப்பட்ட தகவல்களினை வழங்கக்கூடிய பூகோள ரீதியான கணனி வலையமைப்பு” என வரையறை செய்கிறதது. இதுவே உலகலாவிய வலையமைப்பை சாத்தியமாக்கும் தொழிநுட்ப உட்கட்டமைப்பாகும்.
இணையம் என்பது ஒரு திசைவியுடன்(router) இணைக்கப்பட்ட பல கணனிகளின் கூட்டமாகும். இது இதேபோன்ற பல கணனிகளின் கூட்டம் ஒன்றினை நிர்வகிக்கும் மற்றும் ஒரு திசைவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இணைய சேவையை வழங்குனர் (ISP) இந்த திசைவிகளை கம்பியுள்ள, கம்பியற்ற அற்ற இணைப்புகள் மூலம் இணைக்கின்றனர். இறுதிப் பயனர்கள் இணையத்தை அணுக அவர்கள் தங்கள் கணனிகளில் இணைய அணுகல் மென்பொருளை கொண்டு (இணைய உலாவிகள்) வலைப்பக்கங்கள், செயலிகளின் பயன்பாட்டுக்கான தகவல்களை சேமிக்க என சிறப்பாக காணப்படும் கணணிகளான சேவையங்களுடன் (servers) இணைக்கப் பயன்படுத்தப்படுகின்றனர்.
ஒருவர் தனது உலாவியில் இணையமுகவரியை உள்ளிடும் போது அதன் பின்னணியில் பல விடயங்கள் நடைபெறுகின்றன:
உலவி டொமைன் பெயர் அமைப்பு சேவையகத்தினுள் (domain name system) சென்று இணையத்தளத்தை வழங்கும் சேவையகத்தின் இணைய நெறிமுறை முகவரியை (IPaddress) கண்டறியும்.
- தற்போது அந்த உலாவியானது இணையத்தின் உண்மையான
இருப்பிடத்தை அறிந்துகொள்ளும், அது ஒரு Hypertext Transfer Protocol (HTTP) இணை சேவையகத்துக்கு அனுப்புகின்றது. அதாவது சேவையகத்திற்கு தனது பயனாளரினால் கோரப்பட்ட தகவலினை அனுப்புமாறு கேட்கிறது. இந்த செய்தி மற்றும் சேவையாகும் வாடிக்கையாளருக்கிடையில் பரிமாறப்படும் அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் Transmission Control Protocol (TCP)/IP. இனைப் பயன்படுத்தியே பரிமாறப்படுகிறது.
- பின்னர் சேவகமானது “200 OK” செய்தியினை வழங்குகிறது, மற்றும் குறித்த வலைத்தளத்தினுடைய கோப்புகளை தரவு பைகள் (data packets) என அழைக்கப்படக்கூடிய சிறிய துண்டங்களின் தொடராக உலாவிக்கு அனுப்புகிறது.
- உலவியானது அனைத்து தரவுப்பைகளிரையும் ஒரு முழுமையான வலைப்பக்கமாக சேர்த்து பயனாளருக்கு காண்பிக்கிறது.
இங்கு விளக்கப்பட்டுள்ளபடி, ஒரு வளையத்தளத்தினை கையாள்வதில் பல்வேறு கூறுகள் ஈடுபடுகின்றன. இணைய முடக்கமொன்று நிகழும் போது இந்தக் கூறுகளில் பலதே பொதுவாக இலக்கு வைக்கப்படுகின்றன. வலைத்தளத்தின் எந்தப்புள்ளிகளில் இணைய முடக்கம் நிகழ்கின்றது மற்றும் அது எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது என்பதை அடையாளம்கண்டுகொள்ள இணையத்தின் கட்டமைப்பு மற்றும் அது எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றுது என்பதனை புரிந்துகொள்வுது முக்கியமானதாகும்.
இணைய முடக்கம் தொழிநுட்பரீதியாக எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது
இணையம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதற்காக சுருக்கமான விளக்கத்தில் இருந்து அவதானித்ததனைப்போன்று, பல கூறுகள் சேர்ந்து வலையமைப்பு ஒன்றினுடைய கட்டமைப்பினை தோற்றுவிக்கின்றன. ஒரு வலையமைப்பின் பல்வேறுபட்ட புள்ளிகளிலிருந்து இணைய முடக்கமானது மேற்கொள்ளப்படலாம்.
Access Now, Jigsaw மற்றும் இணைய முடக்கம் தொடர்பாக ஆராச்சி செய்யும் பிற நிறுவனங்கள் பின்வருவனவற்றை மிகவும் பொதுவான செயற்படுத்தும் புள்ளிகளாக அடையாளம் கண்டுள்ளன.
- சர்வதேச இணைய முதுகெலும்பு(International internet backbone) – அதி வேகமான இணைய இணைப்பு வழங்கக்கூடிய நீருக்கு அடியில் காணப்படும் கேபிள் இணைப்புக்கள். இதன் வலைத்தளப் புள்ளியில் சேதம் அல்லது இடையூறு ஏற்பட்டால் அது ஏற்பட்டுள்ள நாட்டிலுள்ள அனைத்துப்பயனாளர்களும் அதன் சேவைகளும் தாக்கத்துக்கு உள்ளாகும்.
- இணைய நுழை வாயில் (Internet gateway) – இது சர்வதேச இணைய போக்குவரத்தினை உள்ளூருடன் இணைப்பதால் நாட்டில் இணைய தொடர்புபடுத்தலில் முக்கியமான ஒரு பங்கு வகிக்கின்றது.
- தேசிய மற்றும் உள்ளூர் இணைய சேவை வழங்குனர்கள்: சேவை வழங்குநர்கள் குறிப்பிட்ட சில பகுதிக்கு மட்டும் இணைய சேவையினை வழங்குதல்.இதன்போது ஏதாவது தடங்கல்கள் ஏற்பட்டால் அந்த சேவையில் பயன்பெறும் அனைவருமே பாதிப்படைவர்.
- ஒரே மையம் (ஒற்றை தொலைத்தொடர்புக் கோபுரம் அல்லது குறிப்பிடப்பட்ட சிறு பகுதி): இதுபோன்ற மட்டங்களில் தடங்கல்கள் ஏற்படும்போது குறித்த தொலைத்தொடர்புக் கோபுரத்தின் செயற்பாடானது மட்டும் பாதிப்படைவதனால் மிகவும் குறிவைக்கப்பட்ட அந்த தொலைத்தொடர்பு கோபுரத்துடன் தொடர்புடைய பயனாளிகள் மட்டும் பாதிப்படைவர்.
இணைய முடக்கத்தைச் செய்யும் குற்றவாளிகள் எவ்வாறு செயற்படுத்துகின்றார்கள்? இணையத்திற்கு “தொடங்கும்” மற்றும் “நிறுத்தும்” ஆழிகள் உள்ளனவா?
அரசாங்கம் இணைய உட்கட்டமைப்பை கட்டுப்படுத்தும் போது (சொந்தமான சேவை வழங்குநர்களைக் கொண்டு) அது வேறு தரப்பினரிடம் செல்லாமல் தாமே இணைய அணுகலினை கட்டுப்படுத்தலாம். இல்லையெனில், குறித்த சில வலைத்தளங்களுக்கான தொடர்புகளினை மட்டுப்படுத்த அல்லது முடக்குவதற்கு சேவை வழங்குனருக்கு உத்தரவிடுவார்கள். வலைத்தள நோக்கத்தைப் பொறுத்து சேவை வழங்குநர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றினைப் பிரையோகிப்பர்.
- அடிப்படை உட்கட்டமைப்பு முடக்கம் : இந்த வகையான முடக்கங்கள் இணைய சேவைகளுக்கு தேவையான பௌதீக உட்கட்டமைப்பின் செயலிழப்பு அல்லது சேதத்தால் ஏற்படுகின்றது. இதற்கு சிறந்த உதாரணம்: தொலையத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் மின்கட்டமைப்புகளின் சேதத்தினைக் குறிப்பிடலாம்.
- Routing: முக்கிய புள்ளிகளில் திசையியின் தகவல்களில் மாற்றம் செய்வதனால் வலையமைப்பினுடைய வழமையான செயற்பாடுகளினைக் கையாளுதல். (உதாரணமாக, இனிய வாசல்கள்) எனவே, அந்த வலையமைப்பு பரிமாற்றமானது முடக்கப்பட்டு குறித்த புள்ளிக்கு மேலாக தகவல் பரிமாற்ற இயலாது போகும்.
- DNS கையாள்கை: DNS என்னும் அமைப்பானது மனிதர்களினால் வாசிக்கக்கூடிய டொமைன் பெயர்களினை (google.com போன்றவை) இயந்திர மொழியான IP addresses (142.251.32.46)வடிவிற்கு மொழிபெயர்க்கும் அமைப்பாகும். இந்த அமைப்பினை கையாள்வதன்மூலம் குறிவைக்கப்பட்ட சேவையினை முடக்க முடியும். இது DNS தகவல் பயனர்களை இல்லாத சேவையகத்திற்கு அல்லது குற்றவாளியால் கட்டுப்படுத்தப்படும் சேவையகத்திற்கு வழிநடத்தும் போது இது நிகழும்.
- வடிகட்டல் (Filtering): இந்த வகையான முடக்கங்களில், வணிக ரீதியான வடிகட்டல் உபகருணங்கள் மற்றும் transparent proxy போன்ற சாதனங்கள் இணைய சேவைக்கான அணுகலை தடைசெய்யப் பயன்படுகின்றன. இந்த வடிகட்டல் சாதனங்கள் வலையமைப்பு நெரிசல்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளினை பகுப்பாய்வு செய்வதன்மூலம் செயற்படுகின்ற பின்னர் அந்த மெட்டா தரவுகளினடிப்படையில் அணுகலை அனுமதித்தல் மற்றும் முடக்கல் வேலைகளினச் செய்கின்றன.
- Throttling: இந்த வகையான முடக்கத்தின்போது, வலையமைப்புகளிடையான தரவுகளின் பாய்ச்சலானது மட்டுப்படுத்தப்படுகிறது, எனினும் முழுமையாக நிறுத்தப்படுவதில்லை. சேவையை அல்லது வளத்தைத் பயன்படுத்த இயலாததாக்கும் வகையில் இணையத்துக்கான அணுகல் அல்லது குறித்த சேவைக்கான வேகத்தினை மட்டுப்படுத்தல். உதாரணமாக தொலைபேசி வலையமைப்பினை 2G க்கு மாற்றுதல், இணைய வேகத்தினைக் குறைத்தல்.
- Deep Packet Inspection: இந்த வகையான முடக்கங்களில் வலையமைப்பின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு பரிசோதிக்கப்படும். ஏதாவது தரவுப்பையானது முடக்கத்தினை அமுல்படுத்துபவர்களால் இடப்பட்ட நியதிகளுடன் முரண்படுவனவாக காணப்படின் அந்த தரவானது ஆய்வுசெய்யப்படும் புள்ளியிலிருந்து மேலும் கடத்தப்படுவது தடுக்கப்படும்.
- Denial of Service (DoS) attack: இந்த தாக்குதலானது ஒரு இயந்திரத்தினை அல்லது வலையமைப்பினை முடக்கி அதனை அதனது பயனாளிகள் அணுக இயலாது செய்தலாகும்.குறிவைக்கப்பட்ட தளத்திற்கு போலியான தரவுகள் அனுப்பப்பட்டு அதனை பாவனையில் வைத்திருப்பதன்மூலம் பயனாளர்களுக்கு தகவல்கள் வழங்குவதிலிருந்து தடைசெய்தல்.
இணையத்தள முடக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தல்.
பல ஆராச்சி நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் உலகம் முழுவதும் இணைய முடக்கங்களைக் கண்காணித்து வருகின்றன. இது வலைத்தளங்களினை முடக்குவதனை அளவிடுவதற்கென செயலி ஒன்றினை உருவாக்கி OONI Explorer இல் வெளியிடுகின்ற Open Observatory of Network Interference (OONI) இனையும் உள்ளடக்கியது.
The Internet Outage Detection and Analysis (IODA) திட்டமானது வலையமைப்புகளின் ஓரங்களில் பாதிக்கக்கூடிய பெரியளவிலான இணைய செயலிழப்புகளினை கண்காணித்து அடையாளம் காண்கிறது. அதேவேளை Censored Planet ஆனது தணிக்கைகள் காணப்படுகின்றதா இல்லையா என்பதனைத் தீர்மானிக்க 200 கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தரவுகளினைச் சேகரிக்கின்றது. தனது வெளிப்படையான அறிக்கைகளினூடாக Google ஆனது முடக்கங்களைக் குறித்துக்காட்டும் நிகழ்நேர அணுகல் இடையூறுகளை ஆவணப்படுத்துவதன்மூலம் தனது தயாரிப்புக்களுக்கான நெரிசல் பற்றிய தரவுகளினை வெளியிடுகின்றது. OONI, Access Now, மற்றும் EngageMedia போன்ற குழுவினரினால் வெளியிடப்பட்ட உலகளாவிய இணைய முடக்கம் சம்பவங்களை ஆவணப்படுத்தி பல ஆராய்ச்சி அறிக்கைகள் மற்றும் ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு மற்றும் இணைய முடக்கங்களை ஆவணப்படுத்தலானது பொது விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் மற்றும் இதுபோன்ற உரிமைமீறல் குற்றங்களில் ஈடுபடுபவர்களினை பொறுப்பாக்குவதற்கு அதிகாரிகளினை அழுத்தம் கொடுப்பதற்கும் முக்கியமானதாகும். அரசானது இணைய முடக்கத்தினை தேசிய பாதுகாப்பு என்றவாறு நியாயப்படுத்தும் அதேவேளை, இந்த பரந்தளவிலான அளவீடுகள் கருத்தினை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தினை ஒடுக்குவதுடன் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தமது வேலையினைச் செய்வதிலிருந்து தடுக்கின்றன. மேலும் இது பல பொருளாதார அரசியல் மற்றும் சமூக விடயங்களை பலியாக்குகின்றது.
இணைய முடக்கங்களை தொடர்பாக ஆவணப்படுத்துவதன் மூலமும், கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பது மற்றும் அணுகலை மட்டுப்படுத்திடுவது தொடர்பாக முறையிடுதல் குறித்த பொது அறிவு மற்றும் விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும் , டிஜிட்டல் உரிமைகள் ஆதரவாளர்கள் மற்றும் சிவில் சமூகமானது இந்த வகையான டிஜிட்டல் சர்வாதிகாரத்தை எதிர்ப்பதற்கான தற்போதைய முயற்சிகளை மிகவும் திறம்பட வலுப்படுத்த முடியும்.