சிரின் அப்துல் சரூர்
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் அப்பாவிகளின் உயிர்கள் காவூகொள்ளப்பட்டு இன்றுடன் வலிமிகுந்த ஒரு வருடம் நிறைவடைகின்றது. நாள் புலர்ந்து நாண்கு மணி நேரத்தினுள் ஐஎஸ் பயங்கரவாதிகள் எண்மர் ஆடிய குரூர வெறியாட்டத்தினால் கத்தோலிக்கஇ கிறிஸ்தவ வழிபாட்டாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் உள்ளிட்ட 269 அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டு எமது ஒற்றுமையினதும் ஐக்கியத்தினதும் உணர்வூகள் சிதைக்கப்பட்டன. கிறிஸ்தவர்கள் புனித நாளாகக் கருதும் உயிர்த்த ஞாயிறு தினத்தினைக் கொண்டாடிய குடும்பங்களும் எம் மண்ணின் அழகைக் காண ஆசைப்பட்டு கடல்கடந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் தம் பெயரில் மட்டும்; இஸ்லாத்தினைச் சுமந்த கயவர்களினால் கனப்பொழுதில் துடைத்தழிக்கப்பட்ட ஆறாத ரணத்தினைச் சுமந்தவளாக நான் இதனை எழுதுகின்றேன்.
நீர்கொழும்பில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் ஜோ அவரின் அன்பு மனைவியையூம் பிள்ளையையூம் இழந்துள்ளார். இத்தேவாலயத்தில் 27 சிறார்கள் உள்ளடங்கலாக 115 பக்தர்கள் கோயிலுக்குள்ளேயே மரித்துப்போனார்கள். தன் மனைவி மற்றும் பிள்ளையின் புகைப்படத்தினை வைத்திருந்த ஜோஇ அவர்களைப் பற்றிப் பேசுகையில் அப்புகைப்படங்களை இறுகப் பற்றிக்கொண்ட காட்சி என் கண்முன் வருகின்றது: “அந்த நாள் என் வாழ்வில் வந்திருக்கவே கூடாது என்றே நான் விரும்புகின்றேன். அது மிகக் குரூரமான குருதிதோய்ந்த நாள்”. “அவர்கள் ஏன் இதனை எமக்குச் செய்தனர்?” என ஜோ கேட்கும் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை. “நாங்கள் இங்கே அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்தோம். அதையே நான் மீண்டும் பார்க்க விரும்புகின்றேன். ஆனால் பலரின் வாழ்வூ சிதைக்கப்பட்டிருக்கையில் ரணங்களை ஆற்றுவதுதான் க~;டம். அவர்களின் நினைவூகளும் குண்டுவெடிப்புமே எங்களின் நினைவூகளை ஆட்கொண்டுள்ளன”.
தீபமலரின் மகன் அருண் பிரசாந் மட்டக்களப்பின் புரட்டஸ்தாந்து ஜியோன் தேவாலயத் தாக்குதலில் கொல்லப்பட்டவர். 30 வயதான அருணின் தந்தையூம் அருண் ஒரு வயதாக இருக்கையில் யூத்தத்தினால் கொல்லப்பட்டுவிட்டார். தனது கண்ணீரை அடக்க முடியாத தீபமலர் இவ்வாறு குறிப்பிட்டார்: “எனது மகன் அருண்தான் தந்தை இறந்த பின்னர் என்னைப் பார்த்துக்கொண்டார் நான் அருணைக் கவனமாக வளர்த்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவூ அவனுக்கு வரும் என யார் நினைத்தது? எனக்கு இப்போது வீடும் இல்லை. நாளைக்கு கோவிலில் பூசை நடக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் அருணின் கல்லறைக்குச் செல்வேன்.”
வெர்ல் ஒரு முச்சக்கரவண்டிச் சாரதி. தனது மகன் (13 வயது)இ தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் என மூன்று குடும்ப உறுப்பினர்களின் இழப்பினால் துவண்டுபோயூள்ளார். வெர்லின் ஏனைய இரண்டு சகோதரிகளும் இறந்த சகோதரியின் ஏழு வயதுப் பிள்ளையூம் படுகாயமடைந்துள்ளனர்; அவயவங்கள் செயலிழந்து பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. “ஒரு வருடம் கடந்துவிட்டது. அவர்களின் சிரிப்பொலியூம் குரல்களும் எனக்கு இந்த வீட்டில் இன்னும் கேட்கின்றன. எல்லோரும் எங்களை மறந்துவிட்டார்கள். யூத்தத்தின் போது கூட நாங்கள் உயிர்காத்து வாழ்ந்தவர்கள். ஆனால் யூத்தம் முடிந்து இயல்பு வாழ்க்கை வாழந்துகொண்டிருக்கையில் இந்தத் துயரமும் வலியூம் எங்கள் வாழ்வினையே புரட்டிப் போட்டுவிட்டது. எல்லோரும் அவரவரின் வாழ்க்கையைச் சாதாரணமாக வாழந்துகொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஸ்தம்பித்து நிற்பது என்னவோ எம் வாழ்வூ மட்டுமே. கொள்ளை நோயான கொவிட் 19 காரணமாகக் கோவிலில் பூசை நடக்காது. ஆனால் நாங்கள் மாலையில்; சேமக்காலைக்குச் சென்று தீபம் ஏற்றுவோம். ஏனையோரும் அதைத்தான் செய்வார்கள்.”
53 வயதான சுமதி தனது ஒரு கண்ணையூம் தான் கண் போல் காத்த தனது அன்பு மகள் உமாவினையூம் இழந்து நிற்கின்றார். “எனது மகள் போய்விட்டாள். ஒரு வருடமாகிவிட்டது. அவள் என்னிடம் வருவாள் என்றே நான் நினைக்கின்றேன். அவள் செய்யாத சமூகப் பணிகளே இல்லை. அவள் மிகவூம் துடிப்பானவள். நான் அவள் பற்றிப் பெரும் கனவூ வைத்திருந்தேன்.” சுமதியின் 22 வயது மகள் உமா இறக்கும்போது கிழக்குப் பல்கலைகக்கழகத்தின் 1 ஆம் ஆண்டு கலைப் பீட மாணவியாக இருந்தார்.
துல்சினி அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமைக்குக் காரணம் அவரின் மகன் கிரன் அவரின் பாட்டியினைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே. சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் துல்சினி கிரனை இழந்துவிட்டார். ஒரு வருடம் கடந்துவிட்டது. சிதறிய தனது வாழ்வினை பதில்களின்றி மீண்டும் கட்டமைக்கவே துல்சினி போராடுகின்றார். அவர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியொன்றில் “எமது வாழ்வின் பொக்கிசத்தினைஇ விலைமதிப்பற்ற ஓர் உயிரினை நாம் இழந்துவிட்டோம் என்பதை இலங்கை அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை. சலனமின்றி இருக்கின்றது அரசாங்கம். ஓர் அனுதாபம் கூட அரச தரப்பில் வெளிப்படுத்தப்படவில்லை.”
மேலேயூள்ள கண்ணீர்க் கதைகளைக் கூறும் இந்தக் குடும்பங்களைப் போன்ற பல நூறு குடும்;பங்கள் என்ன நடந்தது என்பதைப் பற்றித் தம்மைச் சுதாகரித்துக்கொள்ள இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் ரணங்களும் வலிகளும் ஆறுவதற்குத் தேவைப்படுவதெல்லாம் எமது கூட்டு உதவியே. ஆனால் ஒரு வருடம் கடந்த நிலையில் இன்று கொவிட் 19 கொள்ளை நோயின் கரங்களில் எமது நாடு சிக்கியூள்ளது. உயிர்த்த ஞாயிறு பூசைக்காகக் குடும்பங்கள் ஒன்று கூடுவது கொள்ளை நோயினால் தடைப்பட்டுள்ளது. இழந்த உறவூகளைக் கூட்டாக நினைவூகூர்வதும் தடைப்பட்டுள்ளது. இவ்வாறான சவால்மிக்க ஒரு சூழலில் ஒன்றுசேர்ந்து பணியாற்றுவது இன்றியமையாததாகும். நேரில் சந்தித்து மனதைத் தேற்ற முடியாவிட்டாலும் எமது உள்ளங்களையூம் உணர்வூகளையூம் இணைக்க ஒற்றுமையில் நாம் வழி தேடவேண்டும்.
தாக்குதலைத் தொடர்ந்து உடனடியாகவே சாம்பலில் இருந்து ஒற்றுமையினைக் கட்டியெழுப்ப சமுதாயங்கள் கடினமாக உழைத்தன. மிதவாத சமயத் தலைவர்கள் சமயங்களுக்கிடையில் நல்லுறவேற்படுத்தி கருத்துப் பரிமாற்றத்திற்கான பாதுகாப்பான தளத்தினை உருவாக்க உழைத்தனர். நீர்கொழும்பில் அருட்சகோதரிகள்இ தேவாலயத் தலைவர்கள்இ சிவில் சமூகக் குழுக்கள் முஸ்லிம் சமுதாய உறுப்பினர்களை வரவேற்று பதற்றத்தினைத் தணிப்பதற்கும் நம்பிக்கையினைக் கட்டியெழுப்புவதற்கும் உழைத்தனர். நீர்கொழும்பிலுள்ள தேவாலயத் தலைவர்கள் காடையர்களின் தாக்குதலில் இருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க முன்னணியில் நின்று பாடுபட்டனர்.
முஸ்லிம் சமுதாயமும் பங்கேற்றது. புனித செபஸ்தியார் ஆலயத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இறுதி நபர் அடக்கம் செய்யப்படும் வரை முஸ்லிம் வியாபாரிகள் தங்கள் கடைகள் அனைத்தையூம் மூடியே வைத்திருந்தனர். இஸ்லாம் எவ்வாறு அஹிம்சையினைப் போதிக்கின்றது என்பதை விளக்க சமுதாயத் தலைவர்கள் விரிவூரைகளுடனும் ஆக்கங்களுடனும் முன்வந்தனர். புனித குர்ஆனையூம் சிங்களத்தில் மொழிபெயர்த்துத் தந்தனர். சமயங்களுக்கிடையிலான கலந்துரையாடலுக்காகப் பள்ளிவாயல்கள் கதவூகளைத் திறந்தன. நீர்கொழும்பு முழுவதும் அனைத்து சமுதாயங்களுக்குச் சொந்தமான வியாபாரத் தலங்களிலும் வீடுகளிலும் துக்கம் அனு~;டிப்பதற்காகப் பல வாரங்கள் வெள்ளைக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.
சமயங்களுக்கிடையிலான பரிமாற்றங்கள் தனிப்பட்ட மட்டத்தில் தொடர்கின்ற போதிலும் பரந்த முயற்சிகள் வீழ்ச்சியடைந்துவிட்டன. அவை மீண்டும் தொடங்கப்பட்டுத் தொடரவேண்டும். எந்த மதமும் சகமனிதனை வெறுக்கச் சொல்லவில்லை. இலங்கையர்கள் என்ற ரீதியில் நாம் வரலாறு நெடுகிலும் வித்தியாசமான ஒரு வைரசினால் பாதிக்கப்பட்டிருக்கின்றௌம் – இனவாதம். மாற்று இனத்துவங்களின் மீதும் மாற்றுக் கலாசாரத்தின் மீதும் மாற்று மதத்தின் சமய விழுமியங்களின் மீதும் நாம் கருணை கொள்ளும் வரை இந்த வைரசிற்கு மருந்தில்லை. கொள்ளை நோய் பரவூம் இக்காலகட்டத்தில் எம்மைப் பாதுகாக்கவூம் பகிரப்பட்ட மகிழ்ச்சியான எதிர்காலத்தினைக் கட்டியெழுப்பவூம் அவசியமாகத் தேவைப்படுவது நாம் ஒருவர் மற்றவரில் வைக்கும் நம்பிக்கையே.
இன்று நாம் எதிர்கொண்டுள்ள இந்தக் கொள்ளை நோய்க் காலகட்டத்தில் எமக்கு முன்னால் தென்படுவது ஒரு கடினமான பாதையே. வைரசினைப் பரப்புவர்கள் முஸ்லிம்களே என்று முஸ்லிம்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு முத்திரை குத்தப்படுகின்றது. தொற்றால் இறந்தவர்களைக் கட்டாயம் தகனம் செய்தே ஆகவேண்டும் என்று அரசாங்கம் விதிமுறை வகுத்திருப்பது சமுதாயத்தினை இன்னும் தூரப்படுத்தும் முட்டாள்தனமான தீர்மானமாகும். இதனால் மக்கள் நோய்க்குச் சிகிச்சை பெறவூம் தயக்கம் காட்டலாம். கொள்ளை நோய்க்கு எதிராகப் போராடச் சமுதாயங்களை பலப்படுத்துவதற்கு மாறாக சில குறிப்பிட்ட இனவாத ஊடகங்கள் நோயாளர்கள் இறந்த பிறகும் அவர்கள் மீது வன்மத்தைச் சொரியூம் ஈனத்தனமான ஊடகக் கலாசாரத்தினை விதைத்துக் கொண்டிருக்கின்றன.
பொதுவாக யூத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுடன் பணியாற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இப்போது செயலிழந்துள்ளன. கொள்ளை நோயினைக் கையாளுவது முற்றுமுழுவதும் இராணுவமயமாக்கப்பட்டிருப்பதற்கு எதிராக நாம் போராடுவது இதனால் முடக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்களைச் சேகரிப்பதற்கும் குற்றங்கள் என்ன என்று விசாரிப்பதற்கும் நாம் சக்தியற்றவர்களாக உள்ளோம். புதிய வர்த்தமானி அறிவித்தல்களும் அரசாங்க வழிகாட்டல்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் எமக்கு ஊடகங்கள் வழியேதான் தெரியவருகின்றன. மார்ச் 2 இல் இருந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பூரண அடைப்பால் நீதிமன்றக் கதவூகளும் இழுத்து மூடப்பட்டுள்ளன. தனிமனிதனாக ஜனாதிபதியே எல்லாத் தீர்மானங்களையூம் எடுத்துக்கொண்டிருக்கின்றார்.
எம்மைக் காப்பதற்காக முன்னரங்கில் நின்று தம் உயிரைப் பணயம் வைத்து சுகாதாரப் பணியாளர்கள் ஆற்றும் சீரிய பணிக்கு நாம் கௌரவமும் நன்றியூம் செலுத்தும் அதேவேளை அரசியல் ஆதாயத்திற்காக இந்த வைரசினை ஆயூதமாக்கும் இழிசெயல் எமக்குப் பாரதூரமான பின்விளைவூகளை ஏற்படுத்தும் என்பது மட்டுமன்றி அது மானுடத்தினையே குழிதோண்டிப் புதைத்துவிடும் என்பதே சிந்திக்கத் தெரிந்தவர்களின் ஆழமான கரிசனையாக உள்ளது. சுகப்படுத்தல் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் பரிசீலிக்கப்படாது வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் சேறு பூசும் நடவடிக்கைகளினால் நாம் ஒருவர் மற்றவரில் இருந்து உள்ளத்தாலும் உணர்வூகளாலும் சமூக விலகலடைகின்றௌம் என்பதே கசப்பான உண்மையாக இருக்கின்றது.
குரூரத் தாக்குதல் நடைபெற்று ஒரு வருடம் கழிந்த நிலையில் நாம் பாதிக்கப்ட்ட குடும்பங்களுடன் ஒன்றுசேர்ந்து காவூகொள்ளப்பட்ட உயிர்களுக்காக துக்கம் அனு~;டிப்போம். தாக்குதலில் கொல்லபட்ட எமது சகோதர சகோதரிகளின் ஆன்மாவை கௌரவிப்பதற்கு நாம் அவர்களின் துயருரும் குடும்பங்களின் இழப்பினைப் பகிர்ந்து ஆறுதல் வழங்குவோம். கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காகவூம் நாம் பிரார்த்தித்துஇ எம்;மை அச்சுறுத்தும் கொவிடை விடக் கொடிய இனவாத வைரசினை அழிப்பதற்கும் பிரார்த்திப்போம்.
எமது வாழ்வில்இ சாதிஇ சமயம்இ செல்வம்இ அந்தஸ்துஇ அரசியல் சித்தாந்தம் என எம்மைப் பிரிக்கும் கோடுகள் பல காணப்படுகின்றன. ஆனால் இன்று அசுர பலமிக்க பொருளாதாரங்களையூம் எல்லைகளையூம் தடுப்புச் சுவர்களையூம் ஆட்டம்காண வைத்துள்ள கண்ணுக்குப் புலப்படாத வைரஸ் நம்மை ஒன்று சேர்த்திருக்கின்றது. இனிவரும் மாதங்கள் சோதனையானவையாக இருக்கலாம். அரசியல்வாதிகளும் பிரித்தாளுவோரும் கயமை அரசியலில் லாபம் தேடுகையில் சுகாதாரப் பணியாளர்கள் பாரிய மன அழுத்தத்தின் கீழ் உயிர்களைக் காக்கப் போராடலாம். கொள்ளை நோயில் இருந்தும் இழிஅரசியலில் இருந்தும் மானுட விசுவாசத்தின் மீண்டெழும் தன்மையே எம்மையெல்லாம் காக்கககூடியதாகும். எவ்வாறாயினும் இவ்வாறான இருண்ட யூகத்திலும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுத் தென்படத்தான் செய்கின்றது. ஒன்றுசேர்வதன் மூலமும் தியாகங்களின் மூலமும் இந்தச் சவாலை நாம் முறியடிக்கலாம் என்பதே அந்த நம்பிக்கை ஒளியாகும். 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் எம்மிடமிருந்து பிரிக்கப்பட்டவர்களை கௌரவிக்குமுகமாக நாம் அப்பாடத்தினை இன்று கற்றுக்கொள்வோம்!