Hashtag Generation

சஜித் பிரேமதாஸவின் ஆட்சி சிங்கள பௌத்த ஆட்சியென சம்பிக்க கூறவில்லை

“சஜித் பிரேமதாசா தலைமையிலான எங்கள் ஆட்சி நூறுவீதம் பௌத்த ஆட்சி; அரசாங்கம் சிறுபான்மையினருக்கு பணிந்து போகிறது” என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியதாக தலைப்பிடப்பட்ட மெட்ரோ பத்திரிகையின் செய்தி ஒன்று Kiyas288 என்கிற TikTok கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

ஸ்கிரின்ஷாட்  (Screenshot)

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுபோன்ற செய்திகள் ஜனாதிபதித் தேர்தலில் தாக்கம் செலுத்தும் என்பதால், இச்செய்தியின் உண்மைதன்மையை ஆராய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது.

தற்போது, மெட்ரோ பத்திரிகை வெளியீட்டை நிறுத்திக்கொண்டுள்ளதை உறுதி செய்துகொண்ட நாம், அப்பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் ஆர்.சேதுராமனிடம் இதுபற்றி வினவியபோது, இதுவொரு போலியான செய்தி என்பதை அவர் எமக்கு உறுதிப்படுத்தினார்.

2020ஆம் ஆண்டில் இச்செய்தி போலியானதென உண்மை சரிபார்ப்பு செய்யப்பட்டிருப்பதையும் அவதானித்தோம்.

“சஜித் பிரேமதாசா தலைமையிலான எங்கள் ஆட்சி நூறுவீதம் பௌத்த ஆட்சி; அரசாங்கம் சிறுபான்மையினருக்கு பணிந்து போகிறது” என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கூறியதாக மெட்ரோ பத்திரிகையின் இலட்சனையுடன் பகிரும் செய்தி போலியானது. தேர்தல் காலத்தில் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக இச்செய்தி மீண்டும் பகிரப்படுகிறது.

முடிவுரை: “சஜித் பிரேமதாசா தலைமையிலான எங்கள் ஆட்சி நூறுவீதம் பௌத்த ஆட்சி; அரசாங்கம் சிறுபான்மையினருக்கு பணிந்து போகிறது” என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கூறியதாக மெட்ரோ பத்திரிகையின் இலட்சனையுடன் பகிரும் செய்தி போலியானது என்கிற முடிவுக்கு வரலாம்.

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.