தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தனியார் கல்வி நிறுவனங்கள் நிறுத்தப்படும் என தெரிவிக்கும் எக்ஸ் தள பதிவொன்று பகிரப்பட்டு வருகிறது.
எக்ஸ் தளத்தில் பகிரப்படும் பதிவின் ஸ்கிரின்ஷாட் (Screenshot)
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனியார் கல்வி நிறுவனங்களை நிறுத்துவதற்கு அதிக முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வளமான நாடு – அழகான வாழ்க்கை“ என்கிற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. தேர்தல் விஞ்ஞாபனத்தின் எந்தவொரு பகுதியிலும் தனியார் கல்வி நிறுவனங்களை நிறுத்தப்போவதாக குறிப்பிடப்படவில்லை.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரத்தியேகக் கல்வி என்கிற பகுதியில், ”நிலவுகின்ற பிரத்தியேக கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களை ஒழுங்குறுத்துவதற்காக அரசசார்பற்ற கல்வி நிறுவன ஒழுங்குறுத்தல் கூறு ஒன்று கல்வி அமைச்சின்கீழ் நிறுவப்படும்.” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்கிரின்ஷாட் (Screenshot)
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனியார் கல்வி நிறுவனங்களை நிறுத்துவதாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே, தனியார் கல்வி நிறுவனங்களை நிறுத்தப்போவதாக தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறி எக்ஸ் தளத்தில் பகிரப்படும் தகவல் மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் உள்ளது.
முடிவுரை: தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தனியார் கல்வி நிறுவனங்கள் நிறுத்தப்படுமென பகிரப்படும் எகஸ் தள பதிவு மக்களை தவறாக வழிநடத்தக்கூடிய தகவல் என்கிற முடிவுக்கு வரலாம்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.