கடந்த ஒரு சில மாதங்களாக இலங்கை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்ட ஒரு சில சம்பவங்கள் தொடர்பிலான போலியான காணொளிகள் சமூக வலைத்தள பாவனையாளர்கள் மத்தியில் பகிரப்பட்டதை நாங்கள் அவதானித்தோம். குறிப்பாக சிறுவர்கள் கடத்தப்படுதல் சம்பந்தமான இரண்டு காணொளிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் விதத்தில் பகிரப்பட்டது. இது தொடர்பில் ஹேஷ்டேக் தலைமுறை நாங்கள் மேற்கொண்ட உண்மையை சரிபார்ப்பு.
லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற சம்பவங்களின் காணொளிகளை இலங்கையில் நிகழ்ந்த சம்பவம் என கூறி அதிகமான போலியான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. எனவே அதே போன்று “நிகரகோவா” நாட்டில் குழந்தை ஒன்று மிகவும் மோசமான முறையில் தாக்கப்படுகின்ற காணொளி ஒன்றினை, பெயர், ஊர் எதுவும் குறிப்பிடாமல் சமூக வலைத்தளங்களில், சமூக வலைத்தள பாவனையாளர்கள் பதிவிட்டு பரப்பி வருவதை நாங்கள் அவதானித்தோம். மேலும் குறித்து காணொளி பற்றி நாங்கள் ஆராய்ந்தபோது, அந்த காணொளியில் காணப்படுகின்ற பெண்ணுக்கு எதிராக அந்நாட்டு பொலிசார் சட்ட நடவடிக்கை எடுத்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
குறிப்பாக இதுபோன்ற காணொளிகள் சமவலைத்தளங்களில் தென்பட்டால் முதலில் அதைப் பற்றி இணையதளத்தில் ஆராய்தல் மிகவும் முக்கியமாகும். மேலே குறிப்பிட்ட நிகரகோவா நாட்டில் குழந்தை ஒன்று மிகவும் மோசமான முறையில் தாக்கப்படுகின்ற காணொளியும் அவ்வாறு “Google Image” தளத்தில் ஆராய்ந்து போதே அதன் முழுமையான தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.
குறித்த காணொளியில் உள்ள குறித்த பெண்ணுக்கு எதிராக நிகரகோவா நாட்டில் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன .
எனவே இது போன்ற காணொளிகளை கண்டவுடன் நீங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரவோ, அது பற்றிய கருத்துக்களை தெரிவிக்கும் முன்னர் குறித்த காணொளி அல்லது புகைப்படம் பற்றி மேலும் இணையதளத்தில் ஆராயுங்கள்.
மேலும் இதுபோன்ற சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை நீங்கள் சமூக வலைத்தளங்களிலோ அல்லது நேரடியாகவோ அவதானித்தால் உடனடியாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற இலக்கத்திற்கு அறிவியுங்கள். மேலும் ஹேஷ்டக் தலைமுறையின் “ப்ரத்ய” அவசர அழைப்புச்சேவை மும்மொழிகளிலும் அவசர அழைப்புச்சேவையினை செயல்படுத்துகின்றது. இந்த அவசர அழைப்புச்சேவையானது ஆன்லைன் வன்முறையை அனுபவிக்கும் நபர்களுக்கு இலவசமாக தொழில்நுட்ப ஆதரவு, சட்ட உதவி பரிந்துரைகள் மற்றும் உளவியல் சமூக ஆதரவு பரிந்துரைகளை வழங்குகிறது. மேலும் இது வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பாட்டில் உள்ளது. 0777 955 900
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.