Hashtag Generation

சாவகச்சேரி தொடர்பில் போலியான தகவல் பகிரப்பட்டுள்ளது

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பல்வேறுப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பின்னூட்டம் (comment) ஒன்றை நாம் அவதானித்தோம்.

அந்த பின்னூட்டத்தில் “சாவகச்சேரி வாக்களிப்பு நிலையத்தின் முக்கிய தேர்தல் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாகவும் அதனால் சாவகச்சேரியில் குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் வாக்களிக்க செல்ல வேண்டாம் எனவும் சக்தி செய்திக்கு தகவல் கிடைத்துள்ளது. அல்லது இது போலிச் செய்தியா?” என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஸ்கிரின்ஷாட் (Screenshot)

அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் இவ்வாறான தகவல்கள் தேர்தலில் தாக்கம் செலுத்தும் என்பதால், இதன் உண்மைதன்மையை அறிய ஹேஷ்டேக் தலைமுறை தீர்மானித்தது. 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேர்தல் மத்திய நிலையமொன்றில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்றிரவு உயிரிழந்திருந்தாலும் வாக்களிப்பு நடவடிக்கைகள் எந்தவிதமான பாதிப்புமின்றி நடைபெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு எமக்கு உறுதி செய்தது.  

சக்தி தொலைக்காட்சியில் மேற்குறித்த பின்னூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததுபோல எந்தவொரு செய்தியும் வெளியிடப்படவில்லை என்பதையும் நாம் உறுதி செய்துகொண்டோம். 

முடிவுரை: “சாவகச்சேரி வாக்களிப்பு நிலையத்தின் முக்கிய தேர்தல் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாகவும் அதனால் சாவகச்சேரியில் குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் வாக்களிக்க செல்ல வேண்டாம் எனவும் சக்தி செய்திக்கு தகவல் கிடைத்துள்ளது. அல்லது இது போலிச் செய்தியா?” என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேஸ்புக் பக்கத்தின் பின்னூட்டத்தில் பகிரப்பட்டிருந்த தகவல் போலியானது என்கிற முடிவுக்கு வரலாம். 

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.