Hashtag Generation

தொலைந்துபோன கையடக்கத் தொலைபேசிகளை கண்டுபிடிக்க முடியுமா?

“தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டு பிடிக்கலாம். அனைத்தையும் லாக் கூட செய்யலாம்.” என்கிற பதிவு பேஸ்புக் பயனர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த பதிவு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

இந்த பதிவை சுருக்கமாகக் கூறுவதென்றால், நம்முடைய கையடக்கத் தொலைபேசி தொலைந்துவிட்டால் android.com/find என்கிற இணையத்தளத்துக்கு சென்று லொக் இன் (log in) செய்து ஈமெயில் மற்றும் பாஸ்வர்ட் (Email and Password) கொடுக்க வேண்டுமாம். 

அவ்வாறு செய்தப் பின்னர் நாம் தவறவிட்ட தொலைபேசியின் மாடல் எண் (Model No) அதற்குக் கீழே Play sound, Lock, Erase என்கிற 3 தகவல்கள் இருக்கும். அத்தோடு, தவறவிடப்பட்ட தொலைபேசி எங்கு இருக்கிறது என்பதையும் MAPஇல் பார்த்துகொள்ள முடியும் எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Play sound ஆப்ஷனை கிளிக் செய்தால் தொலைபேசி 5 நிமிடங்கள் ஒலிக்கும், Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் தொலைபேசி லாக் ஆகிவிடும். Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் தொலைபேசியில் உள்ள தகவல்கள் அனைத்தும் அழிந்துவிடும் என்றும் அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேஸ்புக் பதிவுகளின் ஸ்கிரின் ஷாட்கள் (Screen Shots)

கடந்த கால பேஸ்புக் பதிவுகளின் ஸ்கிரின் ஷாட்கள் (Screen Shots)

பேஸ்புக் பயனர்களால் அதிகளவில் பகிரப்படும் மேற்குறித்த பதிவு தொடர்பில் ஹேஷ்டேக் தலைமுறை ஆராய்ந்தபோது, அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி தொலைந்த அல்லது தவறவிடப்பட்ட ஆன்ட்ரொய்ட் தொலைபேசிகளை கண்டுபிடிக்க முயற்சிக்கலாம் என்பதை நாம் உறுதி செய்துகொண்டோம்.

எவ்வாறாயினும், android.com/find என்கிற இணையத்தளத்துக்கு உள்நுழைந்து லொக் இன் (Log in) செய்த உடன் Play Sound, Secure device, Factory reset device என்கிற மூன்று ஆப்ஷன்களே உள்ளன. 

இந்த மூன்று ஆப்ஷன்களையும் பயன்படுத்தி தொலைந்த அல்லது தவறவிட்ட தொலைபேசியில் உள்ள உங்களது தகவல்களை அழிக்கவும், உங்களது தொலைபேசியை லாக் (Lock) செய்ய மற்றும் கண்டுபிடிக்க முயற்சிக்கலாம். 

இணையத்தளத்தின் ஸ்கிரின் ஷாட் (Screen shot)\

தொலைந்த அல்லது தவறவிடப்பட்ட உங்களது தொலைபேசியில் Mobile data connection ஆன் (On) செய்யப்பட்டிருந்தால் மட்டுமே மேற்குறித்த மூன்று ஒப்ஷன்களை பயன்படுத்தி தொலைபேசியை கண்டுபிடிக்க முயற்சிக்கலாம்.  

அதுபோல, தொலைந்த அல்லது தவறவிடப்பட்டுள்ள தொலைபேசியில் லொகேஷன் (Location) ஆன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அந்த தொலைபேசி எங்கே இருக்கிறது என்பதை மெப்பில் (Map) எம்மால் பார்த்து கண்டறிய முடியும்.

தொலைந்துபோன ஐபோனைகளை (iPhone) கண்டறிவதற்கு Find My app அல்லது iCloud.com/find போன்றவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதோடு, ஒருவேளை உங்களுடைய iPhone திருடப்பட்டிருந்தால் iPhoneஐ லாக் செய்து உங்களது தகவல்களை பாதுகாத்துக்கொள்ளவும் முடியும்.

முடிவுரை:  “தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டு பிடிக்கலாம். அனைத்தையும் லாக் கூட செய்யலாம்.” என பேஸ்புக் பயனர்களால் அதிகமாகப் பகிரப்படும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி android.com/find என்கிற இணையத்தளத்துக்கு சென்று தொலைந்துபோன அன்ட்ரொயிட் தொலைபேசியை லொக் செய்யவோ அல்லது தகவல்களை அழிக்கவோ அல்லது அதனை கண்டுபிடிக்கவோ முயற்சிக்கலாம்.


ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.