Hashtag Generation

FACT CHECK: சிங்கள பாடகர் ஷிஹான் மிஹிரங்க புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக யூடியூப் சேனல் ஒன்றின் மூலம் பணம் திரட்டுகின்றாரா?

இசை நிகழ்ச்சி ஒன்றின் போது சிறுகுழந்தை ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக தான் பணம் திரட்டியதாகவும், அதனால் குறித்த குழந்தையின் உயிரை காப்பாற்ற முடிந்ததாகவும் அதேபோல் உள்ள ஏனைய குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றுவதற்கு கீழே காணப்படுகின்ற யூடியூப்(YouTube) சப்ஸ்கிரைப்(subscribe) செய்யுமாறு கூறி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று(Facebook Post)  பகிரப்பட்டு  வருகின்றது.

முதலில் பாடகர் ‘ஷிஹான் மிஹிரங்க’ என்ற முகநூல் குழுவில் (Facebook Group)   இந்த பதிவு பதிவிடப்பட்டிருந்தது.

மேலும் தற்போது  அந்த பதிவு குறித்த (Facebook Group) குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

குறித்த பதிவில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

“எனது நெருங்கிய நண்பரின்  சிறிய குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனை நான் தெரிந்து கொள்ளும் போது, நான் ஒரு இசை நிகழ்ச்சியில் இருந்தேன். அந்த நண்பர் என்னுடன் பேசினார். அவர் பேசியபோது அவரிடம் இருந்த எல்லா பணமும் முடிந்து விட்டதாகவும் அதன் பின்னரே என்னிடம் கேட்டதாகவும் கூறினார். அதுபற்றி நான் குறித்த இசை நிகழ்ச்சியில் கூறினேன். அப்போது நான் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான பணத்தை அவர்கள் எனக்கு திரட்டி தந்தார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு அந்த குழந்தையை காப்பாற்றினேன்.  தற்போது அக்குழந்தை சுகமாக உள்ளது”

“முதலாவது comment இல்  உள்ள youtube channel இணை  நான் அமைத்ததன் நோக்கம் இது போன்று கஷ்டப்படுகிற குழந்தைகளுக்கு உதவுவதற்காக ஆகும்

இதுபற்றி பாடகர் ஷிஹான் மிஹிரங்க தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார். இங்கே,

மேலும் இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நாங்கள் பாடகர் ஷிஹான் மிஹிரங்கவை தொடர்பு கொண்டோம்.

அப்போது அவர், ‘இது முற்றிலும் போலியானது. குறித்த யூடியூப் சேனல் உடன் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. நான் அது போலி என சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றையும் இட்டுள்ளேன்’ என கூறினார்.

மேலும் குறித்த யூடியூப் பகுதியானது தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளது. இங்கே,

மேலும் நாங்கள் இது பற்றி தெரிந்து கொள்வதற்காக மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை.

முடிவுரை : 

பாடகர் ஷிஹான் மிஹிரங்க பணம் திரட்டுவதாக கூறி சமூக வலைத்தளத்தில் பகிரப்படுகின்றன யூடியூப் (YouTube channel) ஷிஹான் மிஹிரங்க விற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் போலியானது.

ஹாஷ்டாக் தலைமுறையின் முன்னைய உண்மைச் சரிபார்ப்புகளை பார்க்க இங்கே அழுத்தவும்.