கொவிட்-19 வைரஸினை பில்கேட்ஸ் தான் உருவாக்கினார், என பரப்பப்பட்டு வருகின்ற செய்திகள் போலியானவை.
கொவிட்-19 வைரஸ் உலகம் பூராகவும் பரவியதைத் தொடர்ந்து அது பற்றிய போலியான செய்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. குறிப்பாக பொது மக்களை திசை திருப்புவதற்காகவும் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் உருவாக்கப்பட்ட இவ்வாறான ஆயிரக்கணக்கான போலிச் செய்திகள் இணையதளத்தில் உலா வருகின்றன.
அந்த அடிப்படையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் உள்ள ‘பில் கேட்ஸ்’ பற்றிய போலியான செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. அதாவது கொவிட்-19 வைரஸினை உருவாக்கியது பில்கேட்ஸ் எனவும் இது முழுமையாக அவருடைய திட்டம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவை திட்டமிட்ட சதிக்கோட்பாட்டு செய்திகளாக ‘conspiracy theory’ காணப்பட்டன.
அவ்வாறு பகிரப்பட்ட செய்திகளின் ஸ்கிரீன்ஷோட்ஸ்,
மேலே உள்ள ஸ்கிரீன்ஷோட் இல் குறிப்பிட்டுள்ளபடி, ஆறு வருடங்களுக்கு முன்பு பில்கேட்ஸ் இந்த வைரஸ் குறித்து தெரிவித்துள்ளதாகவும், அதன் பின்னர் அவரே covid-19 தடுப்பூசியினை உருவாகியுள்ளதாகவும் இந்த வைரஸ் அவருடைய சொந்த உருவாக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்த இடுகை பில்கேட்ஸ் மார்ச் மாதம் 2015ல் விடுத்த ஒரு எச்சரிக்கை, என உள்ளது.
ஆனாலும் இபோலா வைரஸ் பரவ ஆரம்பித்ததன் பின்னர் டெட் மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட பில்கேட்ஸ் அடுத்து தொற்றுநோய்க்கு நாங்கள் தயார் இல்லை, என எச்சரித்தார். எனவே அவர் அவ்வாறு கூறிய அந்த சொற்பொழிவே இவ்வாறு போலியான செய்திகள் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
1976 ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இபோலா வைரஸ் 2014 தொடக்கம் 2016ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் மிக வேகமாக பரவியது.
இபோலா வைரஸ் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் விளக்கம் இங்கே,
ஐக்கிய அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் விளக்கம் இங்கே,
TED என்பது ஐக்கிய அமெரிக்காவின் ஒரு ஊடக நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் பில்கேட்ஸ் கூறிய கருத்துக்கள் அடங்கிய பிபிசியின் அறிக்கை.
TED 2015: Bill Gates warns on future disease epidemic
அந்த நிகழ்வில் பில்கேட்ஸ் கொவிட்-19 வைரஸ் பற்றி எந்தவொரு முன்னெச்சரிக்கையோ அல்லது கருத்தையோ கூறவில்லை.
குறிப்பாக எதிர்காலத்தில் இவ்வாறான ஏதேனும் நோய்கள் ஏற்பட்டால் நாங்கள் தயாராக இருக்கின்றோமா, மேலும் நாங்கள் எவ்வாறான முன்னேற்பாடுகளை அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றே அவருடைய உரை காணப்பட்டது.
https://www.youtube.com/watch?v=6Af6b_wyiwI – பில்கேட்ஸ் ஆற்றிய முழுமையான உரை
போலியாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்திகளில் ஸ்கிரீன்ஷோட்ஸ் கீழே,
இணையதளத்தில் இதுபோன்ற பல போலியான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. உலகப் பிரசித்தி பெற்ற பாடகர்கள், நடிக நடிகைகள் மற்றும் தனவந்தர்கள் போன்ற சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களை குறிவைத்தே இவ்வாறான போலியான செய்திகள் பரப்பப்படுகின்றன.
மேலும் சர்வதேச ரீதியில் இயங்கிவருகின்ற உலகப் புகழ்பெற்ற உண்மை சரிபார்ப்பு நிறுவனங்கள் இவ்வாறான போலி செய்திகளின் உண்மை தன்மையை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளார்கள்.
அவ்வாறான உண்மை சரிபார்ப்புகள் சில,
இறுதியாக எங்களுடைய முடிவு,
கொவிட்-19 வைரஸ் பற்றி பில்கேட்ஸ் முன்னரே அறிவித்திருந்தார் என்பது முற்றிலும் போலியான மற்றும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் அற்ற ஒரு செய்தியாகும். ஆகவே அவ்வாறு பரப்பப்படும் செய்திகள் யாவும் போலியே.