Hashtag Generation

அமெரிக்க பல்வகைத்தன்மை குடியேற்ற விசா லொத்தர் சீட்டு பற்றிய செய்தி பொய்யானது.

அமெரிக்க பல்வகைத்தன்மை குடியேற்ற விசா லொத்தர்  சீட்டு பற்றிய செய்தி பொய்யானது.

ஐக்கிய அமெரிக்க குடியரசின் பல்வகைமை குடியேற்ற வீசாக்களை பெற்றுக்கொள்ளுதல் பற்றி அன்மையில் Facebook, WhatsApp உட்பட சமூக ஊடகங்களில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது.

எனவே அவை பற்றி நாம் ஆராய்ந்து பார்த்த போது, இவற்றில் பல மோசடிகள் மறைந்துள்ளதையும், இவை மூலம் பொதுமக்கள் தவறான முறையில் வழிநடத்த படுவதையும் அவதானித்தோம். அத்துடன் மிகவும் சூட்சுமமான  முறையில் இணைய பயனர்கள் பற்றிய தகவல்கள் தவறான முறையில் சேகரிக்கப்படுகின்றமை அம்பலமானது.

அத்துடன், அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் பற்றி  WhatsApp ஊடாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்த அநேகமான இணைப்புகள் போலியானவை என்பது உறுதிசெய்யப்பட்டது.

WhatsApp ஊடக பரிமாறப்பட்ட தகவளின் Screenshot : 

அதனுள் பிரவேசிக்கும்போது தோன்றுகின்ற இணையத்தளம் :

ஐக்கிய அமெரிக்காவின் பல்வகைமை குடியேற்ற வீசா நிகழ்ச்சித் திட்டமானது ‘green card’ அல்லது “அமெரிக்க லாட்டரி விசா”  என்றும் அழைக்கப்படுகிறது. இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதரகம் மட்டுமே இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுகிறது. அமெரிக்காவின் பல்வகைமை குடியேற்ற வீசா திட்டம் தொடர்பாக போலி மின்னஞ்சல்கள் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி அமெரிக்க தூதரகம் ஊடாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

அதற்கான இணைப்பு :

https://lk.usembassy.gov/visas/immigrant-visas/diversity-visa/2020-dv-lottery-program/

இந்த விசா திட்டம் பற்றி அமெரிக்க தூதரகம் தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளார்கள்.

தமிழ் மொழி மூலமான தெளிவுபடுத்தல் :

https://lk.usembassy.gov/wp-content/uploads/sites/149/DV-2022-Tamil-translations.pdf

அண்மைய காலங்களில் தடுப்பூசி வழங்குதல், வங்கிச்சேவை, தொலைபேசி சேவை போன்ற ஏராளமான சேவைகள் இலவசமாகவும் இலகுவான முறையிலும் வழங்கப்படுவதாக கூறி இணையத்தள இணைப்புகள் பகிரப்பட்டன. இவ்வாறு பகிரப்பட்ட பெரும்பாலான இணைப்புக்களின் நோக்கம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை தவறான  முறையில் பெற்றுக்கொள்வதே ஆகும்.

மேலே குறிப்பிட்டவாறு உங்களின் தகவல்களை  கோரி இணையதளம் வாயிலாக பகிரப்படுகின்ற Links மற்றும் Forms களில்  உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பதிவேற்ற முன், குறித்த இணையத்தளம் பற்றி ஆராய்ந்து பார்த்தல் வேண்டும்.

குறிப்பாக குறித்த இணையதளங்கள் மற்றும் தகவல் கோருகின்ற நிறுவனங்கள் என்பன உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரபூர்வமானவையா? என்பது பற்றி இருமுறை சிந்தித்து செயல்படுதல் கட்டாயமாகும்.

“கொவிட் – 19” நெருக்கடி காரணமாக அநேகமான  அன்றாட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் கொடுப்பனவுகள் என்பன இணையதளம் வாயிலாகவே தற்போது நடைபெறுகின்றது. இவை அனைத்துக்கும் உங்களைப்பற்றிய அடிப்படை  தகவல்களே தேவைப்படுகின்றன. ஒரு சில முக்கிய தகவல்களுக்கு மாறாக அனாவசியமான உங்களுடைய தனிப்பட்ட தகவல்களையும் குறித்த இணையதளம் அல்லது செயலி வினவுவதாயின் அது பற்றி அவதானத்துடன் இருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் வழங்குகின்ற தகவல்கள் என்ன? அவற்றை யாருக்கு வழங்குகிறீர்கள்? எந்த நோக்கத்திற்காக நீங்கள் அவற்றை வழங்குகிறீர்கள்? என்பது பற்றியும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.