Hashtag Generation

கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சி.சி.டி ஏதேனும் அறிவிப்பைச் செய்ததா?

அண்மைய நாட்களில் ‘அவசர தகவல்’ ‘தயவுசெய்து கவனிக்கவும்’ என்று தலைப்பிட்டு ‘உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளீர்களா என்று கேட்டால், 1 ஐ அழுத்தவும் இல்லையென்றால், 2 ஐ அழுத்துவதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும், ஆனால் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு எண்களை அழுத்தினால், உங்கள் மொபைல் செயலிழந்து, உங்கள் வங்கி முழுவதும் விவரங்கள் மறைந்துவிடும், நடக்கும். எனவே உடனடியாக அழைப்பை துண்டிக்கவும். முடிந்தவரை இந்த செய்தியை எல்லா இடங்களுக்கும் அனுப்புங்கள். எல்லா மொபைல்களிலும் விரைவாகப் பரவ வேண்டும்: ‘சைபர் கிரைம் பொலிஸ்’ என்று குறிப்பிடப்பட்ட தகவலொன்று வாட்ஸ்அப் குழுக்கள் ஊடாக தீவிரமாக பகிரப்பட்டுள்ளமையானது அவதானிக்கப்பட்டது.

அதற்கான ஸ்கிரீன் ஷாட் இங்கே இணைக்கப்படுகின்றது. 

மேற்படி தகவலின் உண்மைத் தன்மை சம்பந்தமாக ஆராய்வதற்காக முதலில் இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தொடர்பு கொண்டோம். அந்தப் பிரிவு தங்களது 14 நாட்கள் ஆராய்வுகள் மற்றும் விசாரணைகளுக்குப் பின்னர் மேற்படி செய்தியை சைபர் பொலிஸ்  கிரைம் பிரிவு வெளியிடவில்லை என்று உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்தியது. 

அத்தோடு மேலதிக விசாரணைகளை குறித்த தகவல் பகிரப்பட்ட குழுக்களின் தகவல்களின் அடிப்படையில் மேலதிகமான விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் அறிவித்தது.

இந்த நிலையில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரணவிடத்தில் கொரோனா சம்பந்தமாக அமைச்சு அண்மைய காலத்தில் அறிவித்தல்கள் எதனையும் விடுத்துள்ளதா என்பது பற்றியும் மேற்படி தகவல் பகிரப்படுவது தொடர்பிலும் வினவியபோது, “பொதுமக்கள் குறித்த செய்தி தொடர்பில் அவதானமான இருக்க வேண்டும். சுகாதார அமைச்சு கொரோனா தொடர்பில் எவ்விதமான அறிவித்தல்களையும் விடுக்கவில்லை. அதுவொரு முடிந்த விடயமகும்” என்று பதிலளித்தார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா பரவல் காலத்தில்அரசாங்கத்தின் கொரோனா பற்றிய அறிவிப்புக்கள் மற்றும் புள்ளிவிபரங்களை உத்தியோபூர்மான வெளியிட்டுவந்த அரச கட்டமைப்பான சுகாதார மேம்பாட்டு பணியகத்துடன் தொடர்புகொண்டபோது, “2022 டிசம்பர் 07ஆம் திகதி இலங்கையில் சர்வதேச விமான நிலையம் மீளத் திறக்கப்படும் அறிவிப்பு விடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் ஊடாக கொரோனா பரவலின் ஆபத்தான கட்டத்தினை இலங்கை கடந்துவிட்டது என்பது வெளிப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக அனைத்து கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன” என்று குறிப்பிட்டது.

அத்தோடு, “நாட்டின் மொத்த சனத்தொகையில் 27-01-2020  முதல் 30-04-2023 வரையிலான கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முற்றாக நிறைவுறுத்தப்படும் வரையில் 17,161,246 பேர் ஆகக்குறைந்தது ஒரு தடுப்பூசியேனும் பெற்றுக்கொண்டுள்ளனர்.  14,768,419 பேர் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அவை தொடர்பான சகல விபரங்களும் சுகாதார தரப்பிடம் உள்ளது. அதேபோன்று அதற்கான உறுதிப்படுத்தும் சான்றிதழ்களும், தடுப்பூசி வழங்கப்பட்டமைக்கான சான்றிதழ்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆகவே அதுபற்றிய அறிவிப்புக்களை நாம் அண்மையில் விடுக்கவில்லை” என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் மேலும் தெரிவித்தது.

Conclusion : இந்நிலையில், கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சுகாதார அமைச்சோ, சுகாதார மேம்பாட்டுப் பணியகமோ சைபர் பொலிஸ்  கிரைம் பிரிவோ எந்தவிதமான அறிவிப்புக்களையும் செய்யவில்லை என்பது உறுதியாகின்றது. அதனடிப்படையில், சைபர் கிரைம் பொலிஸை மேற்கோள்காண்பித்து வட்ஸ்அப் ஊடாக பரப்பபட்டு வருகின்ற குறுந்தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். 

ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.