பல்பொருள் அங்காடிகளினால் (supermarkets) வழங்கப்படுகின்றதாக கூறப்படும் பரிசில்கள், தள்ளுபடிகள் மற்றும் வவுச்சர்கள் என்பன பற்றிய செய்திகள் அனைத்துமே போலி.
பல்பொருள் அங்காடிகளினால் (supermarkets) வழங்கப்படுகின்றதாக கூறப்படும் பரிசில்கள், தள்ளுபடிகள் மற்றும் வவுச்சர்கள் என்பன பற்றிய செய்திகள் அனைத்துமே போலி.
பல்பொருள் அங்காடிகளின் மூலம் தள்ளுபடிகள் மற்றும் பரிசில்கள் என்பன வழங்கப்படுவதாக கூறி பல்வேறுபட்ட பதிவுகள் WhatsApp உட்பட சமூக வலைத்தளங்களில் அண்மைய நாட்களாக அதிகம் பகிரப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
கடந்த ஒரு சில நாட்களாக இது போன்ற போலியான பதிவுகள் அதிகம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமையினால் Keells (கீல்ஸ்), Arpico Supercentre (ஆர்பிகோ சுபர்சென்பர்) போன்ற பல்பொருள் அங்காடி நிறுவனங்கள் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பகுதியில் இவற்றின் உண்மைத் தன்மை பற்றி விளக்கி இருந்தார்கள்.
மேலும் WhatsApp இல் பகிரிடப்பட்ட குறித்த போலி இணையத்தளங்களின் Links கள் பின்வருமாறு.
Keells (கீல்ஸ்), Arpico Supercentre (ஆர்பிகோ சுபர்சென்பர்) போன்ற நிறுவனங்கள் தமது உத்தியோகபூர்வ முகநூலில் இட்டிருந்த பதிவுகளில் ஸ்கிரீன்ஷோட்ஸ்.
மேலும் நாங்கள் இதுபற்றி cargills Food City நிறுவனத்தின் 011 7 129 129 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு இதன் உண்மைத்தன்மை பற்றி வினவினோம்.
” ஒரு சில மாதங்களுக்கு முன் இது போன்ற போலியான செய்திகள் பல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன. அப்போது நாங்கள் அறிக்கை ஒன்றின் மூலம் இவை போலி என்ன தெரிவித்தோம். தற்போது மீண்டும் இவை பற்றி முறைப்பாடுகள் எமக்கு கிடைத்த வண்ணம் உள்ளன. எனவே நாங்கள் மீண்டும் அதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என cargills Food City நிறுவனம் தெரிவித்தது.
உண்மையிலேயே இவ்வாறு பகிரப்படும் Links மற்றும் செய்திகளின் பிரதான நோக்கம் மக்களுடைய தனிப்பட்ட தகவல்களை சேகரித்து மோசடிகளை மேற்கொள்வதாகும்.
தவறான நோக்கங்களில் இவ்வாறு பகிரப்படுகின்ற லின்க்ஸ்கள்(Links) மூலம் மக்கள் தவறான முறையில் வழிநடத்த படுவதுடன் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp groups) குழுக்களுக்கு மக்கள் தெரியாத்தனமாக இவற்றை பகிர்ந்து விடுகின்றனர்.
அத்துடன் இவை மூலம் உங்களுடைய ( debit credit cards) பற்றிய தகவல்களை இலகுவாக பெற்றுக் கொள்ளவும் முடியும். அதாவது பணம் மோசடிகளை மேற்கொள்ளவும் இவை துணை நிற்கின்றது.
எனவே இது போன்ற தகவல்கள் பகிரப்படும் போது நீங்கள் கட்டாயமாக குறித்த நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத் தளங்கள், முகநூல் பகுதிகள் அல்லது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் என்பவற்றை தொடர்புகொண்டு ஆராய்வதன் மூலம் குறித்த தகவல் உண்மையா பொய்யா என்பது பற்றி அறிந்து கொள்ள முடியும். மேலும் குறித்த நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத் தளங்கள் மற்றும் பேஸ்புக் பகுதிகளை இலகுவாக இனங்கண்டு கொள்ளவும் முடியும்.
எனவே இதன் பின்னர் இது போன்ற தகவல்களை கண்டவுடன் அவற்றில் உள்ள லிங்ஸ்(LINK) களுக்கு செல்லாது குறித்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி இரு முறை ஆராய்ந்து பார்த்து உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவற்றில் பதிவிடுங்கள்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் நிலைமை காரணமாக, ஏராளமான கொடுக்கல் வாங்கல்கள், பொருட்களை பெற்றுக் கொள்ளுதல், பயணங்களை மேற்கொள்ளுதல் போன்ற அத்தியாவசிய செயற்பாடுகள் யாவும் இணையதளங்கள் வாயிலாக நடைபெறுகின்றன. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களையும் குறித்த சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வழங்க வேண்டும். அப்போது தேவையான அத்தியாவசிய தகவல்களுக்கு புறம்பாக மேலதிகத் தகவல்களையும் வினவி இருப்பின் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து உங்களுடைய தகவல்களை வழங்குங்கள்.
மிக முக்கியமாக நீங்கள் யாருக்கு வழங்குகிறீர்கள்? அவர்கள் யார் ? இது அவர்களுடைய உத்தியோகபூர்வ இணையத்தளமா ? என்பன பற்றி மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இணையத்தளம் வாயிலாக நடைபெறுகின்ற இவ்வாறான போலி சம்பவங்கள் பற்றி இதற்கு முன்னரும் நாங்கள் உண்மை சரி பார்ப்புகள் சில மேற்கொண்டுள்ளோம். அவற்றின் இணைப்பு கீழே,