கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் சுனாமி அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்ற தலைப்பில் ஒரு கடிதம் வலம் வருவதைக் காண முடிந்தது.
2023 மார்ச் மாதம் 02ம் திகதி, வெளியிடப்பட்ட இந்த செய்தியில், “இந்தியப் பெருங்கடலில் சுமத்ரா தீவுகளுக்கு அருகே 9.2 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக” ஒரு அறிவிப்பு “இடர் முகாமைத்துவ நிலையத்தின்” உத்தியோகபூர்வ கடிதத்தில் காணப்பட்டது.
இந்த கடிதத்தின் மேல்பகுதியில் “பயிற்சிக்கு மட்டும்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், உண்மையில் சுனாமி ஏற்படப்போகிறது என்ற பீதியை கிளப்பும் வகையில் இந்தச் செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.
இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.பிரதீப் கொடிப்பிலியிடம் ஹாஷ்டேக் தலைமுறை விணவியபோது மார்ச் 02 ஆம் திகதி மாத்தறை பிரதேசத்தில் நடாத்தப்பட்ட ஒத்திகை நிகழ்வு ஒன்றுக்காக வழங்கப்பட்ட கடிதமே இவ்வாறு பகிரப்பட்டு வருகின்றதாக அவர் தெரிவித்தார்.
ஹேஷ்டேக் ஜெனரேஷன் மூலம் மேலும் உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, இங்கே.