Hashtag Generation

THE EFFECTS OF COVID ON LGBTQ+ PEOPLE

A conversation with a representative from the LGBTQ+ community

1. COVID 19 has popularised statements like “stay home, stay safe”, but obviously this is not the case for everyone in this country. What are some ways in which staying home would be unsafe for LGBTQ+ people during the pandemic?

LGBTQ+ youth are already at a high risk of experiencing stress, unemployment and the tendency to harm themselves due to discrimination based on their sexual and gender identity and expression. The lack of community support to LGBTQ+ people, limited access to receive counselling and, having to be quarantined with the unsupportive and even abusive family are some unsafe circumstances faced by LGBTQ+ people during the pandemic. It is notable that during the nation-wide lockdown and curfew imposed earlier this year,  a young LQBTQ+ person from Colombo committed suicide. He did so due to an increase in mental stress for which he could not receive mental health support. Even though LGBTQ+ friends can communicate through telephone or the internet, social isolation has had serious and detrimental effects on the lives of LGBTQ+ people who usually rely on others in the community for love and support. Similarly, even though LGBTQ+ people can receive online support and help in this difficult situation, for most of them, it (online) is not as effective as the treatment and counsel they get by meeting and communicating with a community that has accepted them.

2. What are some of the specific ways in which LGBTQ+ people are affected due to COVID and having to stay home?

Most of the people from LGBTQ+ community, notably people living away from the prominent cities of the country, drop out of school, are unemployed, or do not earn a steady income due to discrimination. Most others have resorted to doing sex work for their livelihood or to stay in the larger cities where they work as daily wage labourers. Those who have lost their jobs due to the pandemic have no other option but to stay in their houses, even if they are not able to go back to their native places due to their sexual identity and expression. Even though organizations such as Venasa Transgender Network, National Transgender Network, EQUAL GROUNDS, CWDF and Heart to Heart generally provide secure places and legal support to the people from LGBTQ+ community who have left their home due to domestic violence, these services cannot be accessed due to the pandemic and the restriction on movement. As such, they have no option but to stay in their houses even if they face domestic violence due to their sexual identity and expression.

3. As a transgender person and as a member of the LGBTQ+ community, do you have adequate access to mental health services? Have you been able to access these services during COVID?

COVID-19 has shown us the lack of adequate mental and physical health services in Sri Lanka. Due to the delay in getting access to the mental health services related to gender-affirming treatments and the lack of doctors assigned to these units, these services are often inaccessible.  The impression amongst healthcare workers that the mental health of LGBTQ+ people is not a priority creates additional barriers for us to receive these services. Moreover, due to the restrictions placed on hormone therapy for LGBTQ+ people in Sri Lanka, trans people especially are under mental and physical duress. There are only 6-7 hospitals in the country that have dedicated mental health units for LGBTQ+ people. In this period, specifically when lockdown or curfew is imposed due to COVID-19, it is near impossible for the LGBTQ+ people to get mental health treatment from the government hospitals where it is available. Lack of steady income and loss of employment during the pandemic means that private care is unaffordable for most LGBTQ+ people.

4. What are some of the health and mental health needs of LGBTQ+ people that are not met, in your opinion? What can be improved?

The mental and physical needs of the LGBTQ+ people start appearing from childhood, specifically during schooling. Childhood is formative, providing every person with unforgettable, happy moments in life which shape our adulthood. Most LGBTQ+ people experience discrimination, abuse, and violence from childhood, often in school settings. Due to discrimination and lack of mental health assistance, LGBTQ+ children often drop out of school, become less interested about studies, leading to unemployment as adults.

Childhood is formative, providing every person with unforgettable, happy moments in life which shape our adulthood. However, if a LGBTQ+ person is asked about his/her childhood, it consists of mockery, pain, sadness and mental pressure. Even though this treatment is due to social structure and cultural values, the disregard of mental and physical health care within the education system during the schooling should be addressed immediately. It should be ensured that without partiality the best mental counseling services should be provided while ensuring the confidentiality of or sexual dependency of the school students. Schools should provide mental health and counselling services to children, while ensuring confidentiality of the information regarding the sexual identity and expression of children. In schools,an extensive sex education programme with lessons on gender diversity should be included in the syllabus, to create safer environments for LGBTQ+ children.

There are only less than 10 government treatment providers in the country providing gender affirming surgery, which are also located in bigger cities. LGBTQ+ people living outside these cities have to travel long distances and stay in the cities to access this service, often facing unsafe and discriminatory conditions in the process. Therefore it is necessary to have these treatment units in the government hospitals of every district. It is said that the limited surgeries carried out currently are also not satisfactory, that the specialists who could perform such surgeries are not available while the surgeons who do perform such surgeries do not have adequate experience or practice. Moreover, since 2019 there is a scarcity of hormones for therapy/treatment for LGBTQ+ people in the country. The importation of hormones has almost ceased. The limited supply is only available in some of the hospitals in the country, and the prices of them have significantly increased. Since there is a scarcity of hormones even in the government hospitals, the LGBTQ+ people who need them have no access, while increased prices have also made them unaffordable to LGBTQ+ people without permanent employment or living under the poverty line. Hormones for transwomen aren’t available in Sri Lanka and contraception pills are delivered to them as substitution, which affects their physical/mental health significantly.

5. What do you ask cisgender, and non-LGBTQ+ allies during COVID, to aid in the wellbeing of the LGBTQ+ community?

We request cisgender and non-LGBTQ+ friends to support us during this pandemic  as they did during the normal/ordinary days. As stated before, the mental health of the people from LGBTQ+ community is further jeopardized these days. Therefore, please extend your assistance in helping us overcome at least some of this increased stress. As the usage of internet is comparatively high during these days, people from LGBTQ+ community have been increasingly affected by hate speech and sexual harassment, and using your allyship to report these cases would be an excellent place to start. The LGBTQ+ people who have no permanent employment/income or live under poverty line are most of the times disregarded when the humanitarian aid from the government or other organizations are provided. Donating to grassroot organizations and even directly to affected LGBTQ+ people would also be greatly appreciated during these uncertain times.

 

 

LGBTQ+ நபர்கள் மீதான COVID-19 இன் விளைவுகள்.

LQBTQ+ சமூகத்தை சேர்ந்த ஓர் பிரதிநிதியுடன் ஓர் கலந்துரையாடல்

1.COVID 19 “வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” போன்ற கூற்றுக்களை பிரபலப்படுத்தியுள்ளது, ஆனால் இது இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் பொருந்தாது. தொற்றுநோய்களின் போது LGBTQ + நபர்களுக்கு வீட்டில் தங்குவது பாதுகாப்பற்றதாக இருக்கும் சில வழிகள் யாவை?

LGBTQ + இளைஞர்கள் ஏற்கனவே தங்கள் பாலியல் மற்றும் பாலின அடையாளம் மற்றும் வெளிப்பாட்டின் அடிப்படையில் முகங்கொடுக்கும் பாகுபாடு காரணமாக மன அழுத்தம், வேலையின்மை மற்றும்  தமக்குத் தாமே சுய தீங்கு விளைவிக்கும் போக்கு ஆகியவற்றை அனுபவிக்கும் அதிக ஆபத்தில் உள்ளனர். LGBTQ + மக்களுக்கு சமூக ஆதரவின் பற்றாக்குறை, உளவள/மனநல ஆலோசனையைப் பெறுவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் ஆதரவற்ற அல்லது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படல் ஆகியவை தொற்றுநோய்ப் பரவுகையின் போது LGBTQ + மக்கள் எதிர்கொள்ளும் சில பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடு முழுவதும் முடக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்ட காலப்பகுதியில், ​​கொழும்பு / கொட்டஹேனாவைச் சேர்ந்த இளம் LQBTQ + நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மன அழுத்தத்தின் அதிகரிப்பு காரணமாகவும், அதற்கான முறையான மனநல/உளவள ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாது போனமையினாலும் அவர் அவ்வாறு செய்து கொண்டார். LGBTQ + நண்பர்கள் தொலைபேசி அல்லது இணையம் மூலம் தொடர்பு கொள்ள முடியும் என்றாலும், சமூக தனிமை என்பது பொதுவாக சமூகத்தில் மற்றவர்களை அன்பு மற்றும் ஆதரவுக்காக நம்பியிருக்கும் LGBTQ + மக்களின் வாழ்க்கையில் கடுமையான மற்றும் தீங்கான  விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், இந்த கடினமான சூழ்நிலையில் LGBTQ + நபர்கள் நேரலையில் (ஆன்லைன்) ஆதரவையும் உதவிகளையும் பெற முடியும் என்றாலும், அவர்களில் பெரும்பாலானோருக்கு, இந்த நேரலையில் (ஆன்லைன்) கிடைக்கும் ஆதரவுகள் அவர்களை ஏற்றுக்கொண்ட ஒரு சமூகத்தை சந்தித்து தொடர்புகொள்வதன் மூலம் அவர்கள் பெறும் சிகிச்சை மற்றும் ஆலோசனையைப் போல பயனுள்ளதாக இருக்காது.

2. L.G.B.T.Q.+ சமூகத்தவர்கள் COVID காரணமாக பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருக்க வேண்டிய சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் யாவை?

LGBTQ + சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள், குறிப்பாக நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து விலகி வசிப்பவர்கள், பாடசாலைகளிலிருந்து இடை-விலகியவர்கள், வேலையில்லாதவர்கள், அல்லது பாகுபாடு காரணமாக நிலையான வருமானம் ஈட்டாதவர்களாகக் காணப்படுகின்றனர். இன்னும் அநேகர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலாளர்களாக அல்லது பெரிய நகரங்களில் தங்கியிருந்து தினசரி கூலித் தொழிலாளர்களாக வேலை செய்பவர்களாக உள்ளனர். தொற்றுநோய்ப் பரவலால் வேலை இழந்தவர்களுக்கு, வருமானமற்ற நிலையில் தமது பாலின அடையாளம்/வெளிப்பாடு அல்லது பாலியல் சார்புத் தன்மை காரணமாக தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத காரணத்தினால், வாடகை வீடுகளில்  வாடகை செலுத்தாமல் தொடர்ந்தும் தங்கி இருக்க முடியாவிட்டாலும் பலருக்கு அங்கேயே தங்குவதைத் தவிர வேறு வழியில்லை. இலங்கையில், வெனஸ ட்ரான்ஸ்ஜேன்டெர் நெட்வெர்க் (Venasa Transgender Network), நஷனல் ட்ரான்ஸ்ஜேன்டெர் நெட்வெர்க் (National Transgender Network), ஈக்வல் கிரவுண்ட்ஸ் (EQUAL GROUNDS) சீ.டபுள்யூ.டி.எப் (CWDF) மற்றும் ஹார்ட் டு ஹார்ட்  (Heart to Heart) போன்ற நிறுவனகள் பொதுவாக வீட்டு வன்முறை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய L.G.B.T.Q. + சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பான இடங்களையும் சட்டப்பூர்வ ஆதரவையும் வழங்கினாலும், கோவிட் 19 தொற்றுநோய் பரவலினாலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இயக்கம் காரணமாகவும் இந்த சேவைகளை அணுக முடியாது உள்ளது. இதனால்   L.G.B.T.Q. + சமூகத்தை சேர்ந்தவர்கள் வீட்டு வன்முறைகள் மற்றும் துஸ்பிரயோகங்களை எதிர்கொண்டாலும்  அவர்களுக்கு தங்கள் வீடுகளில் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

3. ஒரு திருநராகவும், LGBTQ + சமூகத்தின் உறுப்பினராகவும், உங்களுக்கு மனநல சேவைகளுக்கு போதுமான அணுகல் இருக்கிறதா? COVID இன் போது இந்த சேவைகளை நீங்கள் அணுக முடியுமா?

COVID-19 இலங்கையில் போதுமான மன மற்றும் உடல் ஆரோக்கிய சேவைகள் இல்லாததை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. பாலினத்தை உறுதிப்படுத்தும் சிகிச்சைகள் தொடர்பான மனநல ஆரோக்கிய சேவைகளை அணுகுவதில் தாமதம் மற்றும் இந்த பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் இல்லாமை, காரணமாக திருநர்களால் இந்த சேவைகளை பெரும்பாலும் அணுக முடியாதுள்ளது. LGBTQ + நபர்களின் மனநல ஆரோக்கியம் ஒரு முன்னுரிமை அல்ல என்று சுகாதாரப் பணியாளர்களிடையே காணப்படும் எண்ணம் இந்த சேவைகளைப் பெறுவதற்கு எங்களுக்கு கூடுதல் தடைகளை உருவாக்குகிறது. மேலும், இலங்கையில் LGBTQ + நபர்களுக்கு ஹார்மோன் சிகிச்சையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, குறிப்பாக திருநர்கள் மன மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். நாடளாவிய ரீதியில் மொத்தமாக 6-7 மருத்துவமனைகள் மட்டுமே LGBTQ+ மக்களுக்கான பிரத்தியேக மனநல சிகிச்சையாகங்களை/அலகுகளை கொண்டுள்ளன. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், குறிப்பாக COVID-19 காரணமாக முடக்கல் அல்லது ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும்போது, ​​LGBTQ + நபர்களுக்கு தாம் பதிவுசெய்யப்பட்டிருக்கும்  அத்தகைய குறித்த அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று மனநல ஆலோசனைகள்களைப் பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை. தொற்றுநோய்ப் பரவலின் போது நிலையான வருமானம் இன்மை மற்றும் வேலையிழப்பு காரணமாக பெரும்பாலான LGBTQ + நபர்களுக்குஅரச மனநல சிகிச்சையகங்களை தவிர தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்லக்கூடியளவு பண வசதிகள் இல்லை.

4உங்கள் கருத்துப்படி, LGBTQ + நபர்களின் பூர்த்தி செய்யப்படாத உடல்நலம் மற்றும் மனநலத் தேவைகள் என்ன? எதை மேம்படுத்தலாம்?

LGBTQ + நபர்களின் மனநலம் மற்றும் உடல்நலத் தேவைகள் குழந்தை பருவத்திலிருந்தே தோன்றத் தொடங்குகின்றன, குறிப்பாக குறிப்பாக பள்ளிப்படிப்பின் போது. சிறுவயது குறிப்பாக பள்ளிப்பருவம் தான் ஒவ்வொரு நபருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத, மகிழ்ச்சியான தருணங்களை அளிக்கிறது, அது தான் அந்த மனிதனுடைய வாழ்வை வடிவமைக்கிறது எனக் கூறலாம். பெரும்பாலான LGBTQ + மக்கள் சிறுபருவத்திலிருந்தே, பெரும்பாலும் பாடசாலைகளில் பாகுபாடு, துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையை அனுபவிக்கின்றனர். பாகுபாட்டுக்குட்படல் மற்றும் மனநல உதவி இல்லாததால், LGBTQ + சிறுவர்கள் பெரும்பாலும் பாடசாலையை விட்டு இடை விலகி விடுகிறார்கள், படிப்புகளில் ஆர்வம் இழந்துவிடுகிறார்கள், இந்நிலைமைகள் அவர்கள் பெரியவர்களாக வேலையின்மைக்கு முகங்கொடுக்க வழிவகுக்கிறன.

பிள்ளைப் பருவம் குறிப்பாக பள்ளிப்பருவம் என்பது ஒரு ஆரம்பம், அது ஒவ்வொரு நபருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத, மகிழ்ச்சியான தருணங்களை அளிக்கிறது, அதுவே நம் வயது வந்த பருவத்தை வடிவமைக்கிறது. இருப்பினும், ஒரு LGBTQ + நபரிடம் அவரது /அவளது பிள்ளைப் பருவத்தைப் பற்றி கேட்டால், அது கேலி, வலி, சோகம் மற்றும் மன அழுத்தம் நிறைந்ததாகவே நினைவுகூர்வதாக சொல்வார். இந்த நிலைக்கு நமது சமூக அமைப்பும், கலாசார விழுமியங்களும் காரணமாக அமைந்திருந்தாலும், சிறுவயதில் குறிப்பாக பாடசாலை பருவத்தில் கல்வி முறைக்குள் மன மற்றும் உடல் ஆரோக்கியம் புறக்கணிக்கப்படுவதும் ஒரு பிரதானமான காரணமாகும். இந்நிலையானது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பாடசாலை மாணவர்களின் ரகசியத்தன்மையையோ அல்லது பாலியல் சார்புநிலையையோ உறுதிப்படுத்துகையில், பாகுபாடின்றி சிறந்த மனநல ஆலோசனை சேவைகள் வழங்கப்படுதல் உறுதிப்படுத்த வேண்டும். சிறுவர்களின் பாலியல் அல்லது பாலின அடையாளம் மற்றும் வெளிப்பாடு தொடர்பான தகவல்களின் இரகசியத்தன்மையை உறுதிசெய்யும் அதே வேளையில் பாடசாலைகள் சிறுவர்களுக்கு மனநல மற்றும் உளவள ஆலோசனை சேவைகளை வழங்க வேண்டும். பாடசாலைகளில், LGBTQ + சிறுவர்களுக்கு பாதுகாப்பான சூழல்களை உருவாக்க, பாலின வேறுபாடு மற்றும் பாலின பல்வகைமை குறித்த பாடங்களைக் கொண்ட விரிவான பாலியல் கல்வித் திட்டத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

இலங்கையில் போதியளவிலான பாலின உறுதிப்படுத்தல் சிகிச்சையகங்கள் அரச வைத்தியசாலைகளில் இல்லை. நாடளாவிய ரீதியில் மொத்தமாகவே 10க்கு உட்பட்ட அரச சிகிச்சையாகங்களே உள்ளன, அதுவும் பிரதான நகரங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் மட்டுமே காணப்படுகின்றன. நாட்டின் புறநகர் பிரதேசங்களை சேர்ந்த, பாலின உறுதிப்படுத்தல் சிகிச்சை பெற நினைக்கும் திருநர்கள்  பிரதான நகரங்களுக்கு நெடுந்தூரம் பிரயாணம் செய்து, அங்கு தங்கி குறித்த சிகிச்சையாகங்களுக்கு சென்று சிகிச்சை பெறும் இந்த செயல்பாட்டின் போது பெரும்பாலும்  பாதுகாப்பற்ற மற்றும் பாரபட்சமான நிலைமைகளை எதிர்கொள்ளல் போன்ற பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.  இதுவும் அவர்களது உடல்/உள நலத்திற்கு பாரிய உளைவை ஏற்படுத்துகிறது. இதனால், ஒவ்வொரு மாவட்ட அரச வைத்தியசாலைகளிலும் பாலின உறுதிப்படுத்தல் சிகிச்சையகங்கள் அமையப் பெறுதல் அவசியமானதொன்றாகும். மேலும், 2019ம் ஆண்டில் இருந்து நாட்டில் LGBTQ+ நபர்களுக்கு சிகிச்சை/சிகிச்சைக்கான ஹார்மோன்களின் பற்றாக்குறை உள்ளது. ஹோர்மோன்கள் இறக்குமதி ஏறக்குறைய நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஹோர்மோன்கள் வழங்கப்படுகின்றன, அவ்வாறே ஹோர்மோன்கள்  கிடைக்கும் ஒரு சில வெளி மருந்தகங்களில் கூட அவற்றின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் கூட ஹார்மோன்களின் பற்றாக்குறை இருப்பதால்,  அவசியமாக பெறவேண்டிய இந்த ஹார்மோன்களுக்கு போதுமான அணுகல் LGBTQ+ நபர்களுக்கு இல்லை. அவ்வாறே, விலை அதிகரிப்பும் நிரந்தர வேலை இல்லாமல் அல்லது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் LGBTQ+ நபர்களுக்கு இந்த ஹார்மோன்களுக்கான பெற்றுக்கொள்ள முடியாமல் தடை செய்கிறது. அவ்வாறே, திருநங்கைகளுக்கான ஹோர்மோன்கள் இலங்கையில் இல்லாமையினால், மாற்றீடாக அவர்களுக்கு கருத்தடை மாத்திரைகளே வழங்கப்படுகின்றன. இது அவர்களது உடல்/உள நலத்தினை வெகுவாகப் பாதிக்கின்றது.

5. கோவிட்இன்போது LGBTQ+ சமூகத்தின்நல்வாழ்வுக்குஉதவ, சிஸ்ஜெண்டர் (cisgender) மற்றும் LGBTQ+ அல்லாத நண்பர்களை நீங்கள் என்ன கேட்கின்றீர்கள்?

சிஸ்ஜெண்டர் (cisgender) மற்றும் LGBTQ+ அல்லாத நண்பர்கள் சாதாரண நாட்களில் செய்ததைப் போலவே இந்த கோவிட் 19 தொற்றுநோய்ப் பரவல் காலத்திலும்  எங்களுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். முன்பு குறிப்பிட்டது போல், LGBTQ + சமூகத்தைச் சேர்ந்த மக்களின் மன ஆரோக்கியம் இந்த நாட்களில் மேலும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறது. ஆகையால், இந்த அதிகரித்த மன அழுத்தத்தில் சிலவற்றையேனும் கடக்க எங்களுக்கு உதவ உங்கள் ஆதரவினை வழங்குங்கள். இந்த நாட்களில் இணையத்தின் பயன்பாடு ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதால், LGBTQ + சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இணையவழி வெறுப்புப் பேச்சு மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காவது அதிகரித்துள்ளது. மேலும் இத்தகைய துஷ்பிரயோகங்களை புகாரளிக்க உங்கள் நட்பைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த ஆரம்பமாகும். நிரந்தர வேலைவாய்ப்பு / வருமானம் இல்லாத அல்லது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் LGBTQ + சமூகத்தினர் பெரும்பாலும் அரசாங்கத்திடமிருந்தோ அல்லது பிற அமைப்புகளிடமிருந்தோ மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும்போது புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்த நிச்சயமற்ற காலங்களில் அடிமட்ட அமைப்புகளுக்கும் நேரடியாக பாதிக்கப்பட்ட LGBTQ + மக்களுக்கும் நன்கொடை வழங்குவது பெரிதும் பாராட்டப்படத்தக்க ஒரு உதவியாகும்.

 

 

LGBTQ+ ප්‍රජාවට කොවිඩ් මඟින් වූ බලපෑම කවරේද?

LGBTQ+ ප්‍රජාවේ නියෝජිතයකු සමඟ සංවාදය

1.  කොවිඩ්-19 වසංගතය සමඟ “නිරතුරුව ගෙදර ප්‍රවේශමින්  සිටින්න” වැනි ජනප්‍රිය වදන් දකින්නට ලැබෙනවා. එනමුත් එය සැමදෙනාටම පොදු තත්වයක් නෙවෙයි. LGBTQ+ පුද්ගලයින්ට මෙම වසංගත මොහොතේ නිවසේ රැඳී සිටීම අනාරක්ෂිත වන්නේ කුමන ආකාර වලින්ද?

LGBTQ+ පුද්ගලයින්ට ආතතියෙන් පෙලීම, විරැකියාවට ලක්වීම, තමන්ටම හානි කරගැනීම වැනි දේවල් අත්දකින්න ඉතා ඉහළ අවදානමක් තිබෙනවා. ඒ බොහෝවිට ලිංගිකත්වය මත හෝ ලිංගික අනන්‍යතාව මත හෝ එම පුද්ගලයාගේ ප්‍රකාශනය මත හෝ සිදු වන වෙනස්කොට සැලකීම මගින්. මෙම වසංගත අවස්තාව තුල LGBTQ+ පුද්ගලයින් බොහෝවිට අපහසුතාවයන්ට/අනාරක්ෂිත තත්තවයකට පත්වන්නේ ඔවුන්ට සමාජයෙන් නිසි ශක්තියක් නොලැබීම, උපදේශන සේවා ලබාගැනීමට ඇති සීමිත ඉඩකඩ, තමන්ගේ අනන්‍යතාවය පිලිනොගන්නා පවුල් පසුබිමක් තුල නිරෝධායනයට ලක්වීමට සිදු වීම වැනි අවස්ථා තුලිනි. මෙම වසරේ මුල් භාගයේ දීපව්‍යාප්තව පැනවූ නිරෝධායන සමය තුල තරුණ LGBTQ+ පුද්ගල්යෙකු සියදිවි හානි කරගැනීමක් කොළඹ ප්‍රදේශයෙන් වාර්තා වීම සැලකිය යුතු වෙනවා. ඔහු මිය යන්නේ මානසික ආතතිය වැඩිවීමෙන් බව පෙනී යන අතර ඔහුට මානසික සෞඛය සඳහා කිසිදු උපදේශනයක් ලබාගැනීමට හැකිවී නැහැ. LGBTQ+ ප්‍රජාවට අන්තර්ජාලය සහ දුරකථන මාර්ගයෙන් සම්බන්ධ විය හැකිවුනත්, සමාජයීයව හුදකලා වීම බරපතල සහ අහිතකර ලෙස ඔවුන්ගේ ජීවිතයට බලපෑමක් ඇතිකර තිබෙනවා. ඒ LGBTQ+ ප්‍රජාව තම ප්‍රජාවේ එකිනෙකා මත ආදරය සහ සහාය සඳහා බැඳී සිටින නිසා. ඒවගේම LGBTQ+ පුද්ගලයින්ට අන්තර්ජාලය ඔස්සේ සහාය සහ උපදේශන සේවා ලබාගැනීමට හැකිවුවත් එය තමන්ව තමන් ලෙස පිළිගත් ප්‍රජාවෙන් ලැබෙන සහාය සහ උපදේශන මෙන් ඵලදායි නොවේ.

2. විශේෂයෙන්ම LGBTQ+ පුද්ගලයින්ට කොවිඩ් සහ නිවසේ රැඳී සිටීමට වූ නිසා බලපෑම් එල්ල වූ අවස්ථාවන් මොනවාද? 

බොහෝ LGBTQ+ පුද්ගලයින් ප්‍රධාන නගර වලින් පිටත උපත ලැබූ, පාසල් හැර ගිය අය වන අතර ඔවුන් සමාජය විසින් වෙනස්කොට සැලකීම නිසාවෙන්  බොහෝවිට රැකියාවක් නොමැති හෝ ස්ථිර ආදායමක් නොලැබෙන පිරිසක් බවට පත්ව ඇත. මේ අතුරින් බොහෝ අය තමන්ගේ ආදායම ලබන්නේ ලිංගික ශ්‍රමිකයකු ලෙස හෝ කුලී වැඩ කරන කම්කරුවන් ලෙසිනි. මෙම වසංගතය තුල ඔවුනට ඔවුන්ගේ ශ්‍රමෝපාය කරගත නොහැකි අතර නිවෙස් තුල රැඳී සිටීමට සිදුවේ. මෙම ප්‍රජාවට නැවතත් ඔවුන්ගේ උපන් ගම් දනව් වෙත යා නොහැකිවී ඇත්තේ ඔවුන්ගේ ලිංගික අනන්‍යතාව සහ ප්‍රකාශනය නිසාවෙනි. වෙනස සංක්‍රාන්ති ලිංගිකයන් සඳහාවූ ජාලය, ජාතික සංක්‍රාන්ති ලිංගිකයන් සඳහාවූ ජාලය, EqualGrounds, CWDF සහ Heart to Heart වැනි ආයතන LGBTQ+ ප්‍රජාවට ගෘහස්ථ සහ අනෙකුත් ආකාර  හිංසනයන් වලින් පීඩාවට පත් වූ විට ආරක්‍ෂිත නිවහන් සහ නීතිමය සහය ලබාදුන්නද මෙම වසංගත සමය තුල මෙම  ආයතන  හා සම්බන්ද වීම ඉතා දුෂ්කර විය. මෙම නිසා LGBTQ+ ප්‍රජාවට ගෘහස්ථ හිංසනයන් අත්විඳිමින් වුවද  නිවෙස් තුල කොටු වී සිටින්නට සිදු විය.

3. සංක්‍රාන්ති ලිංගික පුද්ගලයෙකු ලෙස සහ LGBTQ+ ප්‍රජාව නියෝජනය කරන් අයකු ලෙස ඔබට මානසික සෞඛය සඳහා ප්‍රමාණවත් ප්‍රවශෙයක් තිබෙනවාද? එම සේවා සඳහා කොවිඩ් සමයේ ඇති ප්‍රවේශය කෙසේද?

කොවිඩ්-19 තත්තවය තුලින් ශ්‍රී ලංකාවේ මානසික මෙන්ම සහ අනෙකුත් සෞඛය සේවාවන්ද ප්‍රමාණාත්මක නොවන බවට පසක් කරන ලදී. සංක්‍රාන්ති ලිංගික පුද්ගලයන්ගේ වෛද්‍ය ප්‍රතිකාර වලට අදාළ මානසික සෞඛ්ය උපදේශන ලබාගැනීමේ පමාවන් මෙන්ම එම ඒකකයන්ට ප්‍රමාණවත් ලෙස වෛද්‍යවරුන් නොසිටීමද එම සේවා සඳහා නිසි ප්‍රවේශයක් නොමැතිකම පෙන්වයි. සෞඛය සේවාවන්ගේ ආකල්පයද LGBTQ+ ප්‍රජාවට ප්‍රමුඛතාවක් හිමි නොවිය යුතු බව නිසා ඔවුනට මානසික සෞඛ්ය උපදේශන ලබාගැනීමේ දුෂ්කරතාවක් පවතී. තවද LGBTQ+ පුද්ගලයන්ට හෝර්මෝන චිකිත්සාව සඳහා ඇති සීමා කිරීම් නිසා බොහෝවිට සංක්‍රාන්ති ලිංගික පුද්ගලයින් මානසිකවද කායිකවද පීඩා විඳිති. LGBTQ+ පුද්ගලයන් සඳහාම වෙන්වූ මානසික සෞඛය ඒකකයන් මුළු රටේම ඇත්තේ රෝහල් 6-7ක් පමණි. විශේෂයෙන්ම කොවිඩ් හේතුවෙන් නිරෝධායන සහ ඇඳිරි නීති පැනවූ අවස්ථා වල LGBTQ+ පුද්ගලයින්ට ඉහත සඳහන් ඒකක ඇති රජයේ රෝහල් වෙත ප්‍රවේශය ඉතාමත් අසීරු බව පෙනීයනු ඇත. ස්ථිර ආදායම් මාර්ගයක් හෝ රැකියාවක් නොමැති LGBTQ+ පුද්ගලයන්ට පෞද්ගලික වෛද්‍ය ප්‍රතිකාර වලට යොමු වීමට නොහැකි තරම්ය.

4.ඔබට අනුව LGBTQ+ ප්‍රජාවට සෞඛය හෝ මානසික සෞඛ්යට අදාළව සපුරා නැති අවශ්‍යතා කවරේද? එම අවශ්‍යතා වැඩි දියුණු කිරීමට ගත හැකි පියවර කවරේද? 

LGBTQ+ පුද්ගලයින්ගේ කායික සහ මානසික අවශ්‍යතා ඔවුන් කුඩා කාලයේදීම විශේෂයෙන් පාසල් අවදියේ දැක ගන්නට පුළුවන්. කෙනෙකුගේ ළමා කාලය ඔවුන්ට අමතක නොවන සහ සතුටු මතකයන් ගෙන දෙන, කෙනෙකුගේ වැඩිහිටි විය හැඩගස්වන කාලයක් වේ. LGBTQ+ පුද්ගලයින් බොහෝවිට වෙනස්කොට සැලකීමට, අපයෝජනයට, හිංසනයට, කුඩා කල දීම මුහුණ දීමට සිදුවෙයි. මෙවන් වෙනස්කොට සැලකීම සහ නිසි මානසික සෞඛය උපදේශන සේවා නොමැති කම නිසාවෙන් බොහෝ LGBTQ+ පුද්ගලයින් පාසල් ගමන හැර දමා  යන්නට පෙළඹෙන අතර අධ්‍යයන කටයුතු වලින් දුරස් වන අතර මේ හේතුවෙන් පසුකලක විරැකියාවෙන් පෙළීමට බොහෝසේ හේතුවෙයි.

වැඩිහිටියෙකු බවට පත් වූ පසු බෙදා හදා ගත හැකි අමතක නොවන සුන්දර මතකවලින් සාමාන්‍ය පුද්ගලයෙකුගේ ළමා කාලය හැඩ ගැසී තිබේ.  එසේ වුවත්, LGBTQ+ පුද්ගලයෙකුගෙන් ඔහුගේ හෝ ඇයගේ ළමා කාලය පිළිබඳව අසා බැලුවහොත් එම පුද්ගලයින්ගේ  ළමා කාලය එය සමච්චලයට ලක්වීම්, දුක්ඛවේදනාවලින් හා මානසික පීඩනවලින් පිරී පවතියි. මෙලෙසින් ඔවුන්ට සැලකීම සමාජයේ ව්‍යුහය හා සංස්කෘතික අගයන් හේතු කොට ගෙන සිදුවුවත්, පාසල් අධ්‍යාපනය තුළදී මානසික හා කායික සෞඛ්‍ය පිළිබඳව ඇති නොසලකා හැරීම යන ගැටලුවට ඉතාම ඉක්මනින් ආමන්ත්‍රණය කළ යුතුයි. ඒ තුළ පක්ෂග්‍රාහී වීමකින් තොරව හොඳම ආකාරයේ මනෝ සෞඛ්‍ය උපදේශනාත්මක සේවාවක් පාසල් සිසුන්ගේ පෞද්ගලිකත්වය හෝ  ලිංගික යැපීම අරක්ෂා වන ලෙසින් ලබා දෙන බවට සහතික විය යුතුයි.

පාසල් දරුවන්ගේ ලිංගික අනන්‍යතාව හා ප්‍රකාශනයේ තොරතුරුවල රහස්‍යභාවය ආරක්ෂා වන පරිදි මනෝ සෞඛ්‍ය හා උපදේශනය ලබා දිය යුතුයි. එසේම පාසල් තුළ LGBTQ+ දරුවන් හට ආරක්ෂාකාරී පරිසරයක් නිර්මාණය කිරීම සඳහා, විෂය නිර්දේශවල පුළුල් ලෙසින් ලිංගික අධ්‍යාපනික වැඩසටහන් සමඟින් ලිංගික විවිධතාව පිළිබඳ පාඩම් අන්තර්ගත විය යුතුයි. දිවයින තුළ දැනට ලිංගිකභාවය තහවුරු කිරීමේ සැත්කම (gender affirming surgery)  සඳහා සේවා සපයන රජයේ සේවා සම්පාදකයින් ඇත්තේ දසදෙනෙකුටත් අඩු ප්‍රමාණයක් වන අතර ඒවාද පිහිටා ඇත්තේ විශාල නගර කේන්ද්‍ර කොට ගෙනයි. මෙම නගරවලට පරිභාහිරව වාසය කරන LGBTQ+ පුද්ගලයින්ට මේවායෙන් සේවා ලබා ගැනීමට දුර බැහැරින් පැමිණ නගරය තුළ නතරවීමට සිදුවන අතර මේ ක්‍රියාවලිය අතරතුර ඔවුන් නිරතුරුව අනාරක්ෂිත හා නොසලකා හැරීම් තත්ත්වවලට බඳුන් වේ. එනිසා මෙම ප්‍රතිකාර ඒකක සෑම දිස්ත්‍රික්කයකම රජයේ රෝහල්වල ස්ථානගත කිරීමට අවශ්‍යය. එසේම පෙර සඳහන් කරන ලද සීමිත සැත්කම් ප්‍රමාණයද සෑහීමකට පත් විය හැකි ආකාරයකින් සිදු නොවේ. එමෙන්ම සැත්කම් කළ හැකි වෛද්‍යවරුන්ගේ හිඟයක් පවතින අතර දැනට සැත්කම් කරන වෛද්‍යවරුන්ට ඒ සඳහා ප්‍රමාණවත් අත්දැකීම් හෝ පළපුරුද්දක්ද නොමැත.

එසේම, 2019 සිට රට තුළ LGBTQ+ පුද්ගලයින් හට ලබා දෙන චිකිත්සාවන් හා ප්‍රතිකාර සඳහා අවශ්‍ය කරන හෝමෝන සඳහා හිඟයක් පවතියි. හෝමෝන ආනයනයද දැනටමත් නවතා ඇත. දැනට පවතින සීමාසහිත සැපයුම රෝහල් කිහිපයකට පමණක් සීමා වී ඇති අතර සැලකිය යුතු ආකාරයකින් ඒවායේ මිල ගණන් ඉහළ ගොස් තිබේ. රජයේ රෝහල්වල හෝ අවශ්‍ය හෝමෝන සැපයුම නොමැති නිසා පුද්ගලයින්ට ඒවා ලබා ගැනීමට නොහැකි වී තිබෙන අතර දරිද්‍රතා සීමාවෙන් පහළ දිවි ගෙවන ස්ථිර ආදායමක් නොමැති LGBTQ+ ප්‍රජාවට හෝමෝනවල මිල අධිකභාවය හේතුවෙන් ඒවා මිලදී ගැනීමට නොහැකිව ඇත. එසේම සංක්‍රාන්තික කාන්තාවන් (transwomen) සඳහා වන හෝමෝන ශ්‍රී ලංකාවේ නොමැති අතර ඔවුන්ගේ කායික/මානසික සෞඛ්‍ය සඳහා සැලකිය යුතු බලපෑමක් ඇති කරන ප්‍රතිසංරෝධක පෙති (contraception pills) ඒ සඳහා ආදේශකයක් ලෙසින් යොදා ගනියි.

5. ඔබ මෙම අවධියේදී සංක්‍රාන්තික ලිංගික නොවන හා LGBTQ+ නොවන ප්‍රජාවගෙන් LGBTQ+ ප්‍රජාවේ සුබසිද්ධිය සඳහා දායක වන මෙන් ඉල්ලා සිටින්නේ මොනවාද?

අපි සංක්‍රාන්තික ලිංගික නොවන හා LGBTQ+ නොවන මිත්‍රයින්ගෙන් ඉල්ලා සිටින්නේ වෙනදා වගේම මේ වසංගත අවධියේදීත් අපට උපකාර කරන ලෙසටයි. කලින් පවසන ලද ආකාරයටම, මේ කාලයේදී LGBTQ+ ප්‍රජාවගේ මානසික සෞඛ්‍ය තත්ත්වය අවදානමට ලක් වී තිබේ. ඒ නිසා අඩුම තරමින් ඔවුන්ගේ ආතතියෙන් හෝ මිදෙන්නට ඔවුන්ට ඔබගේ උපකාරය ලබා දෙන්න. අන්තර්ජාල භාවිතය මේ දිනවල සාපේක්ෂව වර්ධනය වී තිබෙන නිසා LGBTQ+ ප්‍රජාව කැපී පෙනෙන ලෙසින් වෛරී ප්‍රකාශනයන්ට සහ ලිංගික හිංසනයන්ට භාජනය වී තිබේ.  ඉතින් ඒ නිසා අපේ මිත්‍රත්වයේ නාමයෙන් මේ වගේ සිද්ධි වාර්තා කිරීම අපට උපකාර කිරීමට ආරම්භයක් ලෙසින් සැලකිය හැකියි. රජයෙන් හෝ වෙනත් සංවිධාන මඟින් මානුෂීය ආධාර ලබා දෙන විටදී වැඩියෙන්ම නොසලකා හැරීම්වලට ලක් වන්නේ, ස්ථිර  රැකියාවක්/ ආදායම් මාර්ගයක් නොමැති හෝ දරිද්‍රතා මට්ටමින් පහළ දිවි ගෙවන LGBTQ+ ප්‍රජාවයි. මේ සමයේදී බිම් මට්ටමේ සංවිධානවලට හෝ බලපෑමට LGBTQ+ ප්‍රජාවට ඍජුවම උපකාර කිරීම අතිශයෙන්ම අගය කළ හැකියි.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *